........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

புத்தகப்பார்வை-26

பக்கம்-88                               விலை -ரூ25.00

 

 

சிரிக்கவும் சிந்திக்கவும்

-தேனி.எஸ்.மாரியப்பன்-

விஜயா பதிப்பகம்
20, ராஜ வீதி,
கோயம்புத்தூர்-641 001
தொலைபேசி : 0422-2394614, 2382614.
 

பார்வை :

 

காலையில் வாழ்க்கையின் தேவைகளுக்காக ஓடும் ஓட்டம், இரவானாலும் தூங்கக் கூட விடாமல் அழுத்தும் மனச்சுமைகள் என்று வாழ்க்கை ஒவ்வொரு நாளும் தவித்துக் கொண்டிருக்கும் போது, நம்மால் எங்கே சிரிக்க முடியும்? என்று பலரும் புலம்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள். சிரிக்கத் தெரிந்த ஒரே உயிரினம் மனிதன்தான். இருந்தாலும் அந்த சிரிப்பை இன்று மனிதன்  தொலைத்து தவித்துக் கொண்டிருப்பதும் உண்மைதான்.

 

தங்கள் தேவைக்காகப் பணத்தைத் தேடத் துவங்கியவர்கள், இன்று தங்களுக்குப் பின்னால் வரும் சந்ததியினருக்கும் சேர்த்து தாமே தேடி வைத்து விட வேண்டும் என்கிற தவறான பாதையில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். பணம் என்கிற ஒன்றை மட்டும் தேடித்தான் இன்றைய மனிதனின் சிந்தனை செல்கிறது. மற்ற அனைத்தையும் அது புறக்கணித்து விட்டது. இதனால் பணத்திற்காக மனத்தைக் காயப்படுத்தி, அதைக் கவலைக் கடலில் மிதக்க விட்டு கரை சேர்க்க முடியாமல் அதில் அவனும் சேர்ந்து மூழ்கிப் போய் விடுகிறான். சிந்திக்கத் தெரிந்த ஒரே உயிரினமும் மனிதன்தான். அந்த  சிந்திப்புத் திறனையும் பணம் தேடும் ஒரு வழிப்பாதையில் செல்ல விட்டு திரும்ப முடியாமல் திணறிக் கொண்டிருப்பதும் உண்மைதான்.

 

மனிதனுக்கு மட்டுமே சொந்தமான இந்த சிரிப்பையும் சிந்திப்பையும் தவற விட்ட பலருக்கும் கோயம்புத்தூர், விஜயா பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த சிரிக்கவும் சிந்திக்கவும் நூல் மூலம் நகைச்சுவை எழுத்தாளரான தேனி.எஸ்.மாரியப்பன் இவ்வுலகில் வாழ்ந்த பல அறிஞர்களது வாழ்க்கையில் நடந்த சில நகைச்சுவையான சம்பவங்களைத் தொகுத்து அந்த நிகழ்வுகளின் மூலம் நாம் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளைச் சிந்திக்கவும் வைத்திருக்கிறார்.

 

எனவே இந்த "சிரிக்கவும் சிந்திக்கவும்" நூல் "வாங்கவும் வைத்திருக்கவும்" நல்ல நூல்.

 

    -தாமரைச்செல்வி. 

முந்தைய புத்தகப்பார்வை காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.