........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

புத்தகப்பார்வை-28

பக்கம்-112                               விலை -ரூ50.00

 

 

கணிப்பொறியில் தமிழ்

-த.பிரகாஷ்-

பெரிகாம்
36, அஜீஸ்முல்க் இரண்டாம் தெரு,
ஆயிரம் விளக்கு,
சென்னை-600 006.
 

பார்வை :

 

இணையத்தில் தமிழ் தளங்களைப் பார்வையிடும் பலரும் நாமும் தமிழில் ஏதாவது செய்ய வேண்டும்.  நம் கணிப்பொறியில் தமிழ் எழுத்துருக்கள கொண்டு வந்து விட வேண்டும் என்று ஆர்வத்துடன் செயல்பட்டாலும் கணிப்பொறியில் பயன்படுத்தப்படும் தமிழ் எழுத்துருக்கள்  பல இருக்கின்றன. ஒவ்வொரு எழுத்துருக்கும் விசைப் பலகையில் தனித்தனி வழிகளில்  தட்டச்சு  செய்ய வேண்டியிருக்கிறது. எந்த எழுத்துருவை நாம் பயன்படுத்துவது என்கிற குழப்பம் இருக்கிறது. இதனால் தமிழைப் பொறுத்தவரை பொதுவான விசைப் பலகையோ பொதுவான  எழுத்துருக்களோ இல்லாமல் அவரவர் விருப்பங்களின் அடிப்படையில் பயன்படுத்தப்படுகிறது.

 

ஆங்கிலத்தில் ஒரு கணிப்பொறியில் தட்டச்சு செய்த ஆங்கில எழுத்துக்கள் வேறு கணிப்பொறியில் செலுத்திப் பார்த்தால் அந்த எழுத்துரு இணைக்கப்படா விட்டாலும், எழுத்து வடிவங்கள் மாறியிருந்தாலும் எழுத்துக்களில் மாற்றம் இருக்காது.  ஆனால் ஒரு கணிப்பொறியில் தட்டச்சு செய்த தமிழ் எழுத்துக்கள் அடுத்த கணிப்பொறியில் செலுத்திப் பார்த்தால் அந்த எழுத்துரு இணைக்கப் பட்டிருந்தால் மட்டுமே சரியாக இருக்கிறது. இல்லையென்றால் அது முழுமையாக மாறிப் போய் விடுகிறது. 

 

இப்படி தமிழில் இருக்கும் எழுத்துருவின் வகைகள், எழுத்துருக்கள் இதை கணிப்பொறியில் நிறுவுதல், தமிழில் தட்டச்சு செய்யும் வழிமுறைகள் என்று கணிப்பொறியில் தமிழைப் புதிதாகப் பயன்படுத்த விரும்புபவர்களுக்கு தேவையான தகவல்கள், ஏற்கனவே பல பயன்பாடுகளுக்காக கணிப்பொறியில் தமிழைப் பயன்படுத்திக் கொண்டிருப்பவர்களுக்கு அவ்வப்போது வரும் சிக்கல்கள் அதற்கான தீர்வுகள் என்று  இந்த நூலில் கணிப்பொறியில் தமிழ் குறித்த நிறைய தகவல்கள் இடம் பெற்றிருக்கிறது.

 

தமிழ இணையத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் ஒருங்குறி (Unicode) எனும் எழுத்துரு குறித்த தகவல்கள், சில தமிழ் இணைய தளங்கள், தமிழ் இணையப் பல்கலைக்கழகம் என்று இணையத்தில் தமிழ் பயன்பாடு, அவற்றில் வரும் குறைபாடு போன்றவை குறித்த தகவல்களும் இடம் பெற்றிருக்கிறது. இது தவிர, கணிப்பொறியில் தமிழ் பயன்படுத்தும் நமக்கு வரும் பலவிதமான சிக்கல்களைக் கேள்விகளாக்கி அதற்கான தீர்வுகளை பதில்களாக கேள்வி-பதில் எனும் தலைப்பில் நூலின் கடைசிப் பகுதியில் வழங்கப்பட்டிருப்பது சிறப்பாக இருக்கிறது.

 

சென்னை, பெரிகாம வெளியிட்டுள்ள, த. பிரகாஷ் எழுதிய இந்த கணிப்பொறியில் தமிழ்  கணிப்பொறியில் தமிழைப் பயன்படுத்த விரும்புபவர்கள், தமிழைப் பயன்படுத்தி வருபவர்கள் என்று அனைவருக்கும் பயன்படும் ஒரு சிறந்த தொழில்நுட்ப நூல்.

 

    -தாமரைச்செல்வி. 

முந்தைய புத்தகப்பார்வை காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.