........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | |
a |
|
a |
|
புத்தகப்பார்வை-30
பக்கம்-112 விலை -ரூ40.00 |
நடை பாதை (சிறுகதைகள்)
-குகன்-
வனிதா பதிப்பகம், |
பார்வை :
நூலாசிரியர்
பல்வேறு தமிழ் இணைய தளங்களில் எழுதிய இந்த சிறுகதைகள் அச்சின் மூலம் நூலாக்கப்பட்டு
இருக்கிறது. நூலாசிரியர் கணினித்
துறையில் மென்பொருள் பொறியாளராக
இருப்பதால் இந்த
நூலில் இருக்கும் பல சிறுகதைகள்
கணினித்துறையில் இருப்பவர்களையும் அவர்களுக்கு
வரும் பிரச்சனைகளையும் சார்ந்து இருக்கிறது.
இந்த நூலில் இருக்கும் 24 சிறுகதைகளில் பொதுவாக, கணிப்பொறி யுகத்தில் வளர்ந்து வரும் இன்றைய சமுதாயத்தில் அதிகமானவர்களிடம்
இருக்கும் எண்ணங்களான வெளி நாடுகளுக்குச் சென்று அதிகமாகப் பணம்
சம்பாதித்தல், அதனால் வரும் அடுத்த நாட்டு ஆடம்பர மோகத்தில் தமிழ்ப் பண்பாடுகள்
சிதைக்கப்படுதல், வெளிநாட்டில் வசிக்கும் தங்கள் பிள்ளைகளால்,
இங்கே இருந்து வரும் வயது முதிர்ந்த
பெற்றோர்களுக்கு வரும் கடைசி கால எதிர்பார்ப்புகள்
அவை கிடைக்காமல் போவதால் வரும் ஏமாற்றங்கள் போன்றவை சுட்டிக்
காட்டப்பட்டுள்ளது. சில சிறுகதைகளில்
தற்போதைய சமூகத்தில் இருக்கும் சில
குறைபாடுகள் அதனால் வரும் விளைவுகள் என்று
இன்றைய சமுதாயத்திற்குத் தேவையான பல விஷயங்கள் சொல்லப்பட்டு இருக்கிறது.
சென்னை வனிதா பதிப்பகம்
வெளியிட்டிருக்கும் குகன் எழுதியிருக்கும் இந்த நடைபாதை (சிறுகதைகள்)
நூலில் சமூக மேம்பாட்டிற்கான
பல
கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டு இருக்கின்றன.
ஆனால் இந்த வலியுறுத்தல்கள்
சில இடங்களில்
வலிமையில்லாமல் பலவீனமாய்ச் சொல்லப்பட்டுள்ளது. மேலும் சில சிறுகதைகளில்
இடையிடையே சிறுகதைக்கான எழுத்து நடையிலிருந்து விலகி நாடக வடிவிலான எழுத்து
நடைக்கு மாற்றமாகி பின்பு திரும்ப வருவதாக இருக்கிறது. இது போன்ற ஒரு சில
குறைகளை மட்டும் விலக்கி விட்டால் இந்த நடைபாதை கணினித் துறையிலிருப்பவர்களுக்கு
மட்டுமின்றி
இந்த சமுதாயத்திற்கும் அதன் பண்பாடுகளுக்கும் வழிகாட்டும் சரியான பாதையாக இருக்கும்.
|
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.