........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | |
a |
|
a |
|
புத்தகப்பார்வை-33 ஆவணப்படம்
-இலவச வெளியீடு- |
மண்ணிலே ஒரு சொர்க்கம்
எழுத்து-இயக்கம்
மனுஜோதி ஆசிரமம் |
பார்வை:
தமிழ்நாட்டில் தாமிரபரணி ஆறு தவழ்ந்தோடும்
திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது
மனுஜோதி ஆசிரமம். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்கிற கொள்கை நோக்கத்துடன் 1963-ல்
பாலாசீர் லாறி என்பவரால் இது துவங்கப்பட்டது.
1921-ல் கேரள மாநிலம் மூணாறு பகுதியில் இருந்த
லட்சுமி தேயிலைத் தோட்டம் எனும் இடத்தில் திருநெல்வேலி மாவட்டம், சாத்தான்குளம்
அருகிலுள்ள அடையமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தேவராஜையா என்பவரின் மகனாகப்
பிறந்தவர் பாலாசீர் லாறி. இவர் தனது பள்ளிக் கல்வியை தூத்துக்குடி மாவட்டம்
நாசரேத்திலும், கல்லூரிக் கல்வியை பாளையங்கோட்டை, சென்னை தாம்பரம் கிறித்துவக்
கல்லூரியிலும் படித்து வேலூர் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். 1947-ல்
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த எபநேசர் நட்சத்திரம் என்பவரை வாழ்க்கைத்
துணையாக்கிக் கொண்ட இவருக்கு ஆன்மீக நாட்டம் அதிகமாக இருந்ததால் 1953-ல் தனது
பணியைத் துறந்து இறைபணியாகப் பிரசங்கங்கள் செய்து வந்தார்.
அதன் பின்பு கிறித்துவ மதப் பிரச்சாரகராக
நாசரேத், நாகர்கோவில் பகுதிகளிலும் அதன் பின்பு கேரள மாநிலத்திலும் கிறித்துவ
மதப் பிரச்சாரங்களைச் செய்து வந்தார். இந்தப் பிரச்சாரங்களின் மூலம் இவர் பல
அரிய செயல்களைச் செய்ததால் தமிழகம் முழுவதும் மட்டுமில்லாமல் உலகின் பல
பகுதிகளுக்கும் சென்று கிறித்துவ மதப் பிரச்சாரங்களைச் செய்யும் வாய்ப்பு
அவருக்குக் கிடைத்தது. அப்போது அவர் கடவுள் ஒருவரே, இந்த மதங்கள் என்பது
கடவுளுக்கான மார்க்கங்கள் என்பதை அனைத்து மக்களுக்கும் உணர்த்தும் விதமாக
திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் மனுஜோதி
ஆசிரமம் ஒன்றை அமைத்து அந்தப் பகுதிக்கு சத்தியநகரம் என்று பெயரிட்டார்.
இங்கு "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்கிற கடவுள் கொள்கை வலியுறுத்தப் பட்டது.
இங்கு 1965-ல்
அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களையும் கொண்டு
"கூடாரப் பண்டிகை" என்று சிறப்பு விழா ஒன்று கொண்டாடப்பட்டது.
1969-ம் வருடம் ஜீலை மாதம் 21ம் நாள்.
அன்றுதான் சந்திரனில் மனிதன் கால் தடம் பதித்த நாள்.
அன்று அமெரிக்காவிலிருந்த பாலாசீர் லாறியைச் சந்தித்த
அமெரிக்கத் தீர்க்கதரிசியான வில்லியம்
பிரான்மியம் என்பவர்
"மனிதர்களை நல்வழிப்படுத்துவதற்காக கடவுள் மனிதன்
உருவில் பூமியில் அவதரிப்பது உண்டு என்கிற சித்தாந்தத்தில்தான்
அனைத்து வேதங்களிலும் கடவுள் மனித உருவில் வருவதாகக் கூறப்பட்டிருக்கிறது.
தங்களிடம்
அதற்கான அனைத்து அம்சங்களும் தெரிகிறது."
என்று தெரிவித்தார்.
அன்றிலிருந்து
பாலாசீர் லாறி ஆதி புருஷராக,
ஸ்ரீ மந் நாராயணராக, பத்தாவது அவதாரமாக, அதாவது கல்கி அவதாரமாக அறியப்பட்டார்.
அமெரிக்காவிலிருந்து கல்கி அவதாரமாக, அவதாரப் புருஷராக இந்தியா திரும்பினார்.
1974-ல் இருந்து 1985 வரை வைகுண்ட யோகம், ஆதிபலி
ரகசியங்கள், தர்ம வழிகாட்டுதல்கள் போன்ற வேதபாட விளக்கங்கள் இந்த ஆசிரமத்தில்
சொல்லிக் கொடுக்கப்பட்டன. பல அதிசயமான நிகழ்வுகள் இங்கு நடத்தப்பட்டன.
உலகின் பல பகுதிகளிலும் இருந்து இவரது செயல்கள் அறியப்பட்டது.
இதன் மூலம்
இங்கு பல மதங்களைச் சேர்ந்த, சாதி, இன, மொழி வேறுபாடுகளில்லாத பலர் இங்கு
வரத் துவங்கினர். இவர் கடவுளாக அவர்களுக்குத் தோன்றினார்.
தனது பிறந்தநாளையே கொண்டாடாத பாலாசீர் லாறி
கல்கி அவதாரமாக மாற்றமடைந்த நாள் அதாவது 1969ம் வருடம் ஜூலை மாதம் 21ம் நாள்
அவரது பக்தர்களால் 1970 முதல் கல்கி ஜெயந்தி விழாவாக எட்டு நாட்கள் திருவிழாவாக
இன்று வரை கொண்டாடப்பட்டு வருகிறது. இவர்
1989-ம் ஆண்டில்
பாலாசீர் லாறியாகப் பிறந்த பிப்ரவரி மாதம் 24ம்
தேதியன்றே அந்த சத்திய நகரத்தில் மரணமடைந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இதற்குப் பிறகு இந்த ஆசிரமத்தின் தலைவரான
தேவாசீர் லாறி மற்றும் அவரது துணைவியார் கீதா தேவாசீர் லாறி இந்த ஆன்மீகப்
பணியைத் தொடர்ந்து செய்து வருவதாகவும் இங்கு மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் பல
மையங்கள் அமைக்கப்பட்டு வேதவழிபாட்டுப் பயிற்சி, தியானப் பயிற்சி போன்றவை
அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கிறார்கள். இந்த ஆசிரமத்திற்கு தனி நபர்களிடமோ
அல்லது நிறுவனங்களிடமோ எவ்விதமான நன்கொடையும் பெறப்படுவதில்லை என்றும் இந்த
ஆசிரமத்திற்கு வரும் பக்தர்கள்
அளிக்கும் காணிக்கைகளைக் கொண்டு எளிமையாகவே செயல்படுத்தப்பட்டு வருவதாகவும்
தெரிவிக்கின்றனர்.
இந்த விளக்கப்படத்தில் பாலாசீர் லாறியாக இருந்த போது அவரது நண்பராக
இருந்த நாசரேத் பௌலி மோசஸ், அவரது உறவினர் ராமகிருஷ்ண மூர்த்தி ஆகியோர் அவருடைய
இளம் வயது செயல்பாடுகளை நினைவு கூறுகிறார்கள். இந்த மனுஜோதி ஆசிரமம் குறித்தும்,
கல்கி அவதாரமாகக் கருதப்பட்ட பாலாசீர் லாறி என்கிற ஸ்ரீ லஹரி கிருஷ்ணா
குறித்தும் மலேசியாவைச் சேர்ந்த பர்னபாஸ் பச்சமுத்து,
தனபாக்கியம் தம்பையா, அமெரிக்காவைச் சேர்ந்த என்.பாலகிருஷ்ணன், அவரது மனைவி
கெசண்ட்ரா, ஜேம்ஸ் ஸ்டீவன் ஹேவுட், நாதன் பிரேஸர் லீ ஹேவுட், யூலிஸிஸ் ஹேவுட்,
புதுடெல்லியைச் சேர்ந்த தர்யாவ் சிங், விஜயகுமார் கவுசிக், ஆந்திராவைச் சேர்ந்த
சத்யநாராயண ராவ் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த அன்பிற்கரசு சுவாமிகள், கவிஞர்
தி. அ.காதர் போன்ற பலரும் சொல்லும்
கருத்துக்கள் இந்த விளக்கப் படத்தில் இடம் பெற்றிருக்கிறது.
அமெரிக்காவில் இருந்த பீகாரைச் சேர்ந்த
நூலாசிரியர் எழுதிய "கல்கி
மகா அவதாரம்" என்கிற நூலில் பாலாசீர் லாறி தான் கல்கி அவதாரம் என்று முன்பே
குறிப்பிட்டு இருக்கிறார்.
தமிழ்நாட்டில் 150 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த
தீர்க்கதரிசி முத்துக்குட்டி எழுதிய அகிலத்திரட்டு அம்மானை எனும் நூலில்
வைகுண்டராகப் பிறப்பவர் குறித்த தகவல்களும் மனுஜோதி ஆசிரமம் குறித்த தகவல்களும்
குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் இவருக்கே
பொருத்தமாக உள்ளது என்றும் இந்த "மண்ணிலே ஒரு சொர்க்கம் மனுஜோதி ஆசிரமம்"
என்கிற இந்த
விளக்கப்படத்தில் தெரிவிக்கப்படுகிறது.
இந்த பாலாசீர் லாறி, ஸ்ரீ மந்
நாராயணராக, ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவாக உருவானதை
எழுதி இயக்கி இருக்கிறார் D.ஞானசூரியன். இந்தப் படத்தை இணை இயக்கம்
செய்திருப்பவர் கவிஞர் பனப்பாக்கம் K.சுகுமார்.
வர்ணனைப் பணிகளை
D.ஞானசூரியன் மற்றும் வித்யா சாரிபுத்ரா ஆகியோர்
சிறப்பாக செய்திருக்கின்றனர்.
இந்த விளக்கப்படத்தை இலவசமாக பெற
விரும்புபவர்கள் முத்துக்கமலம் இணைய இதழில் இந்த விமர்சனம் பார்த்த
மற்றும் படித்த விபரத்தைத் தெரிவித்து மேற்காணும் மனுஜோதி ஆசிரம முகவரிக்கு ஒரு
தபால் அட்டையில் எழுதிப் பெறலாம். வெளிநாட்டு வாசகர்கள் தங்கள்
வேண்டுகோள் கடிதத்துடன
தங்கள் தபால் முகவரியையும் சேர்த்து மனுஜோதி ஆசிரம மின்னஞ்சல் முகவரிக்கு
அனுப்பிப் பெறலாம். |
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.