........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

புத்தகப்பார்வை-37

பக்கம்-253                                               விலை:ரூ.60

 

 

 

நோயும் மருந்தும் ஒரே இடத்தில்!
-அரோமணி -

விஜயா பதிப்பகம்,
20, ராஜ வீதி,
கோயம்புத்தூர்- 641 001.

பார்வை:

ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்ட மின்சாரப் பொறியாளரான நூலாசிரியர் தன் நோயிலிருந்து விடுபட ஒவ்வொரு மருத்துவமாகத் தேடிச் சென்றிருக்கிறார். இந்த மருத்துவமுறைகளில் அளிக்கப்பட்ட சிகிச்சைகளும், மருந்து மாத்திரைகளும் அவ்வப்போது அந்த நோயிலிருந்து விடுவித்தாலும் முழுமையாகக் குணமடையாமல் அவதிப்பட்டிருக்கிறார். மருத்துவர்கள் சில அறுவை சிகிச்சிகளை செய்து கொண்டால் முழுமையாகக் குணமடையலாம் என்று சொல்ல அதையும் செய்து கொண்டிருக்கிறார். ஆனால் பலன் என்னவோ எதிர்பார்த்தபடி இல்லை. இந்த அவல நிலையிலிருந்து மீளமுடியாமல், அவருக்குள் ஏற்பட்ட மனச்சோர்வு அவரை உற்சாகத்துடன் செயல்பட விடாமல் முடக்கிக் கொண்டிருந்தது.

இந்தச் சூழ்நிலையில் மின்சாரப் பொறியாளரான நூலாசிரியர், மனிதனால் உருவாக்கப்பட்ட இயந்திரங்கள் அனைத்திற்கும் குறிப்பிட்ட திறன், கொள்ளளவு, அவற்றிற்கான உள்ளீடு, அதனால் கிடைக்கும் பயன், அதில் ஏற்படும் இழப்புகள், அளவுக்கு அதிகமான உள்ளீடுகளால் வரும் விளைவுகள் போன்றவை நிர்ண்யிக்கப்பட்டுள்ளன. இது போல் மனித உடலும் ஒரு இயந்திரம் போல்தானே செயல்படுகிறது. இந்த உடலுக்கான இயந்திரத்தின் செயல்பாட்டிற்கும் உணவு,காற்று போன்ற உள்ளீடுகள் அதிகமாகும் போது உடலின் செயல்பாட்டிலும் பல விளைவுகள் ஏற்படுகிறது. இந்த விளைவுகளே நோய்கள். இந்த நோய்களிலிலிருந்து விடுபட உள்ளீடுகளைச் சரியான அளவுகளாக்க வேண்டும் அதன் மூலம் என்ன பலன் கிடைக்கிறது? என்று முயற்சித்திருக்கிறார். அதன் விளைவாக உடலில் நோய் வராமலிருக்க, நோயிலிருந்து விடுவித்துக் கொள்ள இரண்டு தொழில்நுட்பங்களை உணர்ந்திருக்கிறார். இந்த இரண்டு தொழில்நுட்பங்களின் மூலம் தனது நாள்பட்ட ஆஸ்துமா எனும் நோயிலிருந்து முழுமையாக மீண்டிருக்கிறார்.

தான் அவதிப்பட்ட நோயிலிருந்து மீண்ட வரலாற்றையும், அவர் கண்டுபிடித்த இரண்டு தொழில் நுட்பங்களையும் , அதன் மூலம் நோய்கள் வராமல் காத்துக் கொள்வதற்கான உணவுமுறைகள், தியானப் பயிற்சிகள் போன்றவற்றை விளக்கமாக பல பட்டியல்களுடன் விளக்கியிருக்கிறார். பல அட்டவணைகளின் வாயிலாக ஒப்பீடுகள் செய்து விளக்கமளித்திருப்பது எளிமையாகப் புரிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கிறது.

ஒவ்வொரு வியாதிக்கும் மருந்து மாத்திரைகளைச் சார்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த மனித சமுதாயம் தங்கள் உணவுப் பொருட்களை எப்படி உண்ணலாம்? எவ்வளவு உண்ணலாம்? என்கிற பயிற்சிகளுடன் சில மனப்பயிற்சிகளையும் செய்து நோயின்றி வாழக் கற்றுக் கொள்ள வழிகாட்டுகிறது இந்த நூல்.

மின்சாரப் பொறியாளரான அரோமணி  என்பவரால் எழுதப்பட்டுள்ள இந்த நூலை கோயம்புத்தூர், விஜயா பதிப்பகம் வெளியிட்டுள்து. இந்த நூல் அனைவரும் படிக்கவும் நோயின்றி வாழவும் வழிகாட்டுகிறது. 

     -தாமரைச்செல்வி. 

முந்தைய புத்தகப்பார்வை காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.