........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

புத்தகப்பார்வை-40

பக்கம்-108                                           விலை:ரூ. 50

 

 

 

 

தீமிதி

- மஞ்சுளா -

கீற்று வெளியீட்டகம்,
1/148 ஏ, ஹிரா கார்டன்,
அழகிய மண்டபம்
முளகுமூடு அஞ்சல்- 629 167,
குமரி மாவட்டம்.

பார்வை:

தீ மிதி என்பது நெடுங்காலமாக இருந்து வரும் வழக்கம் என்பது குறித்த பொன்னீலன் அவர்களது விளக்கம் அருமையாக துவக்கத்தில் தரப்பட்டுள்ளது. இந்த விளக்கத்திற்குப் பின்பு இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் கவிதைகள் குறித்து பொன்னீலன் அவர்கள் அருமையாக விமர்சித்து விட்ட பின்பு நாம் இந்நூல் குறித்து நம் கருத்தை தெரிவிப்பது சரியாக இருக்காது. எனவே இந்த நூலில் நமக்கு சிறப்பாகத் தோன்றும் ஒரு சில கவிதைகளைப் பற்றி மட்டும் இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.

 

"மவுனம்" எனும் தலைப்பில்

"பிறப்பு தொடங்கிய போது
அது இறந்தது.
இறப்பு நேரிட்ட போது
அது பிறந்தது
என்பதைத் தவிர..."

-என்பது அருமையாகச் சொல்லப்பட்ட வார்த்தைகள். 

"தொடரும் பாதை" எனும் தலைப்பில் குழந்தையாயிருக்கும் போது தாயைச் சார்ந்து இருந்தவள் கடைசிக் காலத்தில் கூட ஒரு கைத்தடியைச் சார்ந்து இருக்க வேண்டியிருக்கிறது என்பதை நன்றாகச் சொல்லியிருகிறார்.

"அனாதைச் சொற்கள்" எனும் தலைப்பில் வெளியான கவிதையில் 

"நன்றியுள்ள நாவுகளை விட 
அதனிடம் நன்றி பாராட்டும்
நாவுகளையே 
ஒட்டிக் கொள்கிறது
அன்பின் ருசியை விட
அதிக ருசியுடன் 
சொல்லுருஞ்சியே
அது வாழ்கிறது..."


என்பதில் பல அர்த்தங்கள் வெளிப்படுகிறது. இறுதியில் அதன் நிலை என்னவாகும் என்பதையும் எடுத்துச் சொல்லியிருக்கிறார். ஆனால் இதையெல்லாம் யார் எடுத்துக் கொள்ளப் போகிறார்கள்? தற்போதைய நிலையில் மயங்கிக் கிடப்பவர்களுக்கு கடைசிக் காலம் குறித்த கவலைகள் எல்லாம் இருப்பதில்லை. அவர்களுக்கு சுயநினைவுகள் வரப் போவதுமில்லை.

காலையில் குப்பை அகற்றும் பணியில் துவங்கி இரவு தூங்கும் வரை பல பணிகளில் அலுத்துப் போகும் அவருக்கு நடுச்சாமத்தில் வரும் தூக்கம்தான் ஓய்வைக் கொடுக்கிறது என்று சாதாரண வீட்டு வேலைக்காரியின் மனதைப் புரிந்து எழுதியிருக்கும் கவிதை சிறப்பாக இருக்கிறது. 

இதுபோல் "மனிதனும் புத்தனும்" எனும் தலைப்பில் வந்துள்ள கவிதையில்

"இந்தப் பூமிக்கும் உனக்குமான உறவு
எப்படி வந்தது?
கேள்வியிலிருந்து உதிர்ந்த ஞானத்துடன்
தேடி அலைகிறான் புத்தன்
மரணம் பற்றிய அச்சத்துடன்
கேள்வியையே உதிர்த்துவிட்டு
வீடு நோக்கி விரைகிறான் மனிதன்
வாழ்தல் பற்றிய அறிவுடன்."

என்று சொல்லியிருப்பது நன்றாக இருக்கிறது. 

இந்தத் தொகுப்பில் உள்ள அனைத்துக் கவிதைகளுமே அர்த்தமுள்ள கவிதைகள்.

 

குமரி மாவட்டம், அழகிய மண்டபம், கீற்று வெளியீட்டகம் வெளியிட்டுள்ள மஞ்சுளா எழுதிய இந்த "தீ மிதி" கவிதை நூல் கவிதைப் பிரியர்களுக்கு பிடிக்கும். 

     -தாமரைச்செல்வி. 

முந்தைய புத்தகப்பார்வை காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.