........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

புத்தகப்பார்வை-42

பக்கம்-144                                               விலை:ரூ.45

 

 

 

பல்சுவைத் திரட்டு
-முனைவர் தமிழப்பன் மெய்.மு-

உலகத்தமிழ் நூலக அறக்கட்டளை,
21/11, இராமசாமி தெரு,
தியாகராயநகர்,
சென்னை-600 017.
கைத்தொலைபேசி: 9841395344, 9380765775.

பார்வை:

நற்றிணையில் 13 பாடல்களுக்குத் தகுந்த விளக்கமளிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்ட எழுத்தோவியங்கள், குறுந்தொகையில் 6 பாடல்களுக்கான விளக்கமளிக்கும் எழுத்தோவியங்கள் என்று நூலாசிரியர் இலக்கியப் பாடல்களை எளிமையாக எடுத்துச் சொல்லியிருப்பது அருமையாக இருக்கிறது. 

அடுத்து சிலேடைக் கதைகள் எனும் தலைப்பில் 11 கதைகள் அமைத்து அந்தக் கதைகளில் ஒரே சொல் சிலேடையாக பயன்படுத்தப்பட்டு இருப்பதை விளக்கமளிக்கும் எழுத்துக்கள் நூலாசிரியருக்கு தமிழில் இருக்கும் ஆர்வத்தையும் அவருடைய திறனையும் வெளிப்படுத்துகிறது.

 

கட்டுரை விதைகள் எனும் தலைப்பில் நூலாசிரியரின் 9 குறுங்கட்டுரைகள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன. இந்தக் கட்டுரைகள் அனைத்தும் தமிழர் ஒற்றுமை, தமிழ் வளர்ச்சி என்பதாகவே இருக்கிறது. இந்தக் கட்டுரைகளில் "ஈழம் தனித்து நிற்க இயலுமா?" எனும் தலைப்பில் இலங்கையில் ஈழம் எனும் தமிழர் அதிகம் வாழும் பகுதி 25000 சதுர கிலோ மீட்டருக்குள் இருப்பதால் இந்த சிறிய பரப்பளவில் தனியாக ஒரு நாடு பெரிய அளவில் சாதித்து விட முடியாது என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களுக்கு மறுப்பு அளிக்கும் விதமாக ஒரு கட்டுரை இருக்கிறது. இதில் 25000 சதுர கிலோ மீட்டருக்குள் இருக்கும் நாடுகளின் பட்டியலை வெளியிட்டு அவைகளின் தனித்தன்மையை விளக்கிக் காட்டியிருப்பது நன்றாக இருக்கிறது. இது போல் மற்ற மொழி பேசுபவர்களிடையே இருக்கும் ஒற்றுமை தமிழ் மொழி பேசுபவர்களிடம் இல்லையே என்று வருத்தப்பட்டும் நூலாசிரியர் ஒரு கட்டுரையில் சில தகவல்களைத் தெரிவிக்கிறார். ஒரு கட்டுரையில் ஒற்றுமைக்கும் வழிகாட்டுகிறார். 

 

கடைசியாக "பரிசு பெற்ற கதைகள்" எனும் தலைப்பில் வெளியிடப்பட்ட ஐந்து சிறுகதைகளும் நல்ல கருத்துக்களை வலியுறுத்துவதாக இருக்கிறது. 

 

முனைவர் தமிழப்பன் எழுதியிருக்கும் இந்த பல்சுவைத் திரட்டு எனும் இந்நூலை சென்னையிலிருக்கும் உலகத் தமிழ் நூலக அறக்கட்டளை வெளியிட்டிருக்கிறது. இந்நூலை தமிழ்ப் பற்றுள்ள அனைவரும் வாங்கிப் படித்து ஆதரவளிக்கலாம்.

     -தாமரைச்செல்வி. 

முந்தைய புத்தகப்பார்வை காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.