........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

புத்தகப்பார்வை-43

பக்கம்-208                                               விலை:ரூ.65

 

 

குழந்தைகளுக்கான குட்டிக்குட்டிக் கதைகள்
-தேனி.எஸ்.மாரியப்பன்-

விஜயா பதிப்பகம்,
20, ராஜவீதி
கோயம்புத்தூர்- 641 001.
தொலைபேசி: 0422-2394614 / 2382614

பார்வை:

இந்தக்காலக் குழந்தைகள் தொலைக்காட்சிகளிலும், கணினி விளையாட்டுக்களிலும்தான் தங்கள் கவனத்தை அதிகமாக்கிக் கொண்டிருக்கின்றன. இவர்களிடம் முந்தைய காலத்தைப் போல் தாத்தா, பாட்டிகளிடம் கதை கேட்கும் ஆர்வம் துளியும் இல்லை. இந்த நேரத்தில் பெரியவர்களிடமும் குழந்தைகளுக்குக் கதை சொல்லும் ஆர்வமும் இல்லை என்பதையும் இங்கே குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும். வயதானவர்களுக்கும் குழந்தைகளுக்கும் முன்பிருந்த ஒருவிதமான பாசப் பிணைப்பு இப்போது அறுந்து போயிருக்கிறது. இரு பிரிவினரும் புதிய ஊடகங்களின் தாக்கத்தால் முடக்கப்பட்டிருக்கிறார்கள்.

குழந்தைகள் கல்வியிலும் பல புதிய மாற்றங்கள் வந்து விட்டது. பாடப்பகுதிகளைப் போலவே வரலாற்றுக் கதைகள், நீதி போதனைக் கதைகள் போன்றவை அவர்களிடம் மனப்பாடம் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறது. அந்தக் கதைகள் மட்டுமில்லை எந்தக் கதைகளையும் குழந்தைகள் விரும்பிக் கேட்கும் நிலை கிராமப் பகுதிகளில் கூட காணாமல் போய் விட்டது.

 

இந்த நிலை இனியும் தொடர்ந்தால் குழந்தைகளுக்கு நல்லது கெட்டது எதுவுமே தெரியாமல் போய் விடும் பெரிய ஆபத்து ஒன்று அவர்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறது என்பது மட்டும் உண்மை. இந்த உண்மையைக் கல்வியாளர்கள் உணர்ந்து பள்ளிப் பாடங்களில் நல்வழி காட்டும் கதைகள் அடங்கிய ஒரு பாடத்தைத் தனியாக வைக்க வேண்டிய கட்டாயமும் வந்து கொண்டிருக்கிறது. பெரியவர்களும் தங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு பல அரிய கதைகளைச் சொல்லி வளர்க்க வேண்டிய அவசியமும் வந்து கொண்டிருக்கிறது. 

 

இதையெல்லாம் அறிந்துதானோ என்னவோ தேனி எஸ். மாரியப்பன் குழந்தைகளுக்கான குட்டிக்குட்டிக் கதைகள் எனும் அருமையான நூலை எழுதியிருக்கிறார். இந்த நூலை கோயம்புத்தூர் விஜயா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இந்த நூல் குழந்தைகளுக்குத்தான் என்பதில்லை. குழந்தைகளை நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் வளர்க்க விரும்புபவர்களுக்கும்தான்.

     -தாமரைச்செல்வி. 

முந்தைய புத்தகப்பார்வை காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.