........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

புத்தகப்பார்வை-44

பக்கம்-208                                               விலை:ரூ.65

 

 

 

தமிழப்பன் கவிதைகள்
-முனைவர் தமிழப்பன் மெய்.மூ-

உலகத்தமிழ் நூலக அறக்கட்டளை,
21/11, இராமசாமி தெரு,
தியாகராயநகர்,
சென்னை-600 017.
கைத்தொலைபேசி: 9841395344, 9380765775.

பார்வை:

கவிதைப் புத்தகங்களைப் படிப்பதற்கென்று தனித் தகுதி ஒன்று வேண்டியிருக்கிறது. இன்று புதுக்கவிதை என்கிற பெயரில் சில கவிஞர்கள்(?) படைத்து விடுகிறார்கள். இந்தப் புதுக்கவிதைகளை எந்தப் பொருளில் எழுதியிருக்கிறார் என்று அறிந்திட தனி முயற்சியும் பயிற்சியும் வாசிப்பவர்களுக்குத் தேவையாயிருக்கிறது. இப்படி நிறைய பேர் கவிஞர்களாகி கவிதைகளைப் படைத்துக் குழப்பத்தையும் சேர்த்து விடுகிறார்கள். இதனால் கவிதை என்றாலே பலரும் ஓட்டமெடுக்கிறார்கள். ஆனால், இந்நூலாசிரியரின் கவிதைகள் அப்படியில்லை எளிமையான நடையில் அனைவருக்கும் புரியும்படியாக கவிதைகளைப் படைத்திருக்கிறார்.

இந்தக் கவிதைத் தொகுதியில் முதலில் இருக்கிறது "குறள் பத்து". திருக்குறள் குறித்து குறள் வடிவிலேயே பத்து கவிதைகளைப் படைத்திருப்பது நன்றாக இருக்கிறது. இதற்கடுத்து "இட்டலி பத்து" எனும் தலைப்பில் தமிழகத்தின் முதல் உணவான இட்லியின் பெருமையைக் குறள் வடிவில் சொல்லியிருப்பது சுவையாக இருக்கிறது. இதுபோல் "நாலடி நாற்பது" எனும் தலைப்பில் நாற்பது கவிதைகளை நன்றாகப் படைத்திருக்கிறார். இதே போல் "பல்சுவைப் பத்து" எனும் தலைப்பில் நல்ல கவிதைகள் பத்து இருக்கிறது.

 

அன்றாடப் பயன்பாட்டில் இருக்கும் சில பூக்களைக் கொண்டும், வாழ்க்கை நடைமுறைகளைக் கொண்டும் பல கவிதைகளை இங்கே படைத்திருக்கும் நூலாசிரியர் தேசியப்பற்றுடன் சில கவிதைகள், சில தமிழறிஞர்கள் பற்றிய கவிதைகள், வாழ்க்கை நடைமுறைக் கவிதைகள் என்று பல அருமையான கவிதைகளை இங்கே நூலாசிரியர் படைத்திருக்கிறார். 

 

முனைவர் தமிழப்பன் மெய்.மூ எழுதிய இந்த தமிழப்பன் கவிதைகள் எனும் நூலை சென்னை, உலகத் தமிழ் நூலக அறக்கட்டளை வெளியிட்டிருக்கிறது. எளிமையாகவும், அருமையாகவும் உள்ள இக்கவிதை நூல்களைக் கவிதைப் பிரியர்கள் அனைவரும் வாங்கிப் படித்து மகிழலாம்.

     -தாமரைச்செல்வி. 

முந்தைய புத்தகப்பார்வை காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.