........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

புத்தகப்பார்வை-46

பக்கம்-172                                               விலை:ரூ.60

 

 

 

பாடு தம்பி பாடு!
-முனைவர் தமிழப்பன் மெய்.மூ. -

உலகத்தமிழ் நூலக அறக்கட்டளை,
21/11, இராமசாமி தெரு,
தியாகராயநகர்,
சென்னை-600 017.
கைத்தொலைபேசி: 9841395344, 9380765775.

பார்வை:

முன்பெல்லாம் சிறுவர்களுக்கான கவிதைகள் கொண்ட நூல்கள் அதிகமாக வெளிவரும். இப்போது அவையெல்லாம் நின்று போய்விட்டன. சிறுவர்களுக்கான படைப்புகளின் தரங்களும் மாறுபட்டுப் போய்விட்டன. 

குழந்தைகள் படிப்பதற்கான கவிதைகளும் சிறுகதைகளும் அதிகமாக வெளிவராத இன்றைய நிலையில் ஒரு சில பதிப்பகங்கள் மட்டுமே குழந்தைகளுக்கான நூல்களை வெளியிட்டு வருகின்றன. இந்த ஒரு சில பதிப்பகங்களின் வரிசையில் சென்னை, உலகத் தமிழ் நூலக அறக்கட்டளை அமைப்பும் ஒன்று. தமிழில் முனைவர் பட்டம் பெற்ற நூலாசிரியர் தமிழப்பன் அவர்கள் குழந்தைகளுக்கு எளிதில் புரியும் வண்ணம் எளிமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி எழுதிய பாடு தம்பி பாடு! குழந்தைகளுக்கான 102 சிறு கவிதைகள் இடம் பெற்றிருக்கிறது.

 

குழந்தைகள் இந்தக்கவிதைகளை ஆர்வத்துடன் படிக்க வேண்டும் என்பதற்காக பல கவிதைகளுக்கு கேலிச்சித்திரப் படங்கள் இடம்பெற்றிருப்பது நன்றாக இருக்கிறது. அன்றாட வாழ்க்கையில் பயன்படும் பல பொருட்கள் கவிதைகள் மூலம் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லப்பட்டிருக்கும் விதம் சிறப்பாக இருக்கிறது.

 

எளிமையாக எழுதப்பட்டிருக்கும் இந்தக் குழந்தைக் கவிதை நூலை குழந்தைகளுக்கு வாங்கிப் பரிசளிக்கலாம்.

 

     -தாமரைச்செல்வி. 

முந்தைய புத்தகப்பார்வை காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.