........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | |
a |
|
a |
|
புத்தகப்பார்வை-66
பக்கம்-24 விலை: ரூ. 20 |
ஹென்றி பவரும் -கோ. சந்திரசேகரன்-
பேரா. சிட்னி சுதந்திரன், |
பார்வை:
கிறித்தவ மதத்தினரின் புனித
நூலான பைபிள் தமிழில் வேதாகம் என்று பல மொழிபெயர்ப்புகள் செய்யப்பட்டுள்ளன.
இவற்றுள் ஹென்றிபவர் என்பவரின் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் மொழிபெயர்த்த
பவர் மொழிபெயர்ப்பு வேதாகமமே இன்று தமிழர்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டு
வருகிறது. இந்த ஹென்றி பவர் யார்? வேதாகமத்தின் வரலாறு, பழைய ஏற்பாடு, புதிய
ஏற்பாடு, ஹென்றி பவர் ஐக்கிய மொழிபெயர்ப்பு, பவர் மொழிபெயர்ப்பு போன்ற
குறிப்புகள் தரப்பட்டுள்ளன. அதன் பின்பு ஹென்றி பவர் பிறப்பு, ஹென்றி பவரின்
ஆன்மிகப் பணிகள், ஹென்றி பவர் ஐயரின் மறைவு, ஹென்றி பவர் ஐயரின் குடும்பம்,
ஹென்றி பவர் ஐயரின் இலக்கியப் படைப்புகள், ஹென்றி பவர் ஐயரின் கல்லறை வாசகங்கள்
போன்ற தலைப்புகளின் சில தகவல்களும் தரப்பட்டுள்ளன.
இந்நூலில் ஹென்றி பவர்
தொடர்பான சில படங்கள் ஆகியவற்றைக் கொண்டு சிறு நூலாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த
நூலை திருநெல்வேலி, பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கல்லூரிப்
பேராசிரியர் சிட்னி. சுதந்திரன் எழுதி வெளியிட்டிருக்கிறார். தமிழ்
வேதாகமம் படிப்பவர்கள், அதன் மூலம், முதன்மை தெரிந்து கொள்ள
வழிகாட்டுகிறது.
-தாமரைச்செல்வி.
|
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.