........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

புத்தகப்பார்வை-67

பக்கம்-72                                 விலை: ரூ. 30

 

 

முதன்மைத் தகவல்கள்  

 -தேனி.எஸ்.மாரியப்பன்-

விஜயா பதிப்பகம்,
20, ராஜ வீதி,
கோயம்புத்தூர் - 641 001
தொலைபேசி: 0422 - 2382614, 2385614.

பார்வை:

இந்த உலகில் எத்தனையோ நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. நடந்து கொண்டிருக்கின்றன. இந்த நிகழ்வுகளில் எவையெல்லாம் முதன் முதலாய் நடைபெற்றிருக்கும் என்று அறிய எல்லோருக்கும் ஆர்வம்  இருக்கும். இந்த ஆர்வத்தைப் பூர்த்தி செய்யும் விதமாக சுமார் 759 நிகழ்வுகளினை மட்டும் முதன்முதலாய்த் தொகுத்து அளித்திருக்கிறார் இந்நூலாசிரியர் தேனி.எஸ்.மாரியப்பன். பொதுவாக வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளில், இது போன்ற முதன்மை நிகழ்வுகள் குறித்த கேள்விகள் அதிக அளவில் இடம் பெறுவதுண்டு. போட்டித் தேர்வுகளுக்காக மட்டுமின்றி பொதுவான செய்திகளை பொது அறிவு நோக்கோடு அறிந்து கொள்ள பலரும் விரும்புவதுண்டு. இந்த விருப்பங்களையெல்லாம் இச்சிறிய நூல் நிறைவேற்றி விடுகிறது.

கோயம்புத்தூர், விஜயா பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்நூல் மாணவர்களுக்கும், பொது அறிவுச் செய்திகளை விரும்புபவர்களும் உதவும் அருமையான நூல்.

     -தாமரைச்செல்வி. 

முந்தைய புத்தகப்பார்வை காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.