........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | |
a |
|
a |
|
புத்தகப்பார்வை-68
பக்கம்-176 விலை: ரூ. 65 |
வழிகாட்டியாய் வாழ்ந்தவர்கள் -தேனி.எஸ்.மாரியப்பன்-
விஜயா பதிப்பகம், |
பார்வை:
நம்மை அடுத்தவர் ஏதாவது ஒன்று
சொல்லி விட்டால் கோபப்படுகிறோம். கொதித்துப் போகிறோம். இதனால் பகை வருகிறது.
அதைத் தொடர்ந்து அவர்களைப் பழி வாங்கத் துடிக்கிறோம். அதற்காக எதையும் இழக்கத்
தயாராகிறோம். தேவையில்லாததற்கெல்லாம் இப்படி அடிக்கடி இழப்பைச் சந்திக்கும்
நாம் சிந்திக்கத் தவறிவிடுகிறோம். உலகில் புகழ்பெற்ற அறிஞர்கள், தலைவர்கள்
இப்படி எடுத்ததெற்கொல்லாம் கோபப்பட்டு இருந்தால், அவர்கள் எடுத்துக் கொண்ட
முயற்சிகள் வெற்றி அடைந்திருக்குமா?
உலகில் புகழ்பெற்ற தலைவர்கள்,
அறிஞர்கள் பலர் தங்கள் வாழ்க்கையில் எத்தனையோ இன்னல்களைச்
சந்தித்திருக்கிறார்கள். அவர்கள் அதை எப்படிச் சந்தித்தார்கள்? வாழ்க்கையில்
வெற்றியைக் கண்டார்கள்? என்பதற்கு அவர்கள் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களே
உதாரணமாக உள்ளன.
இப்படி உலக அறிஞர்களின்
வாழ்க்கைச் சம்பவங்கள் சிலவற்றைத் தொகுத்து வழிகாட்டியாய்
வாழ்ந்தவர்கள் என்கிற நூலாக எழுதியிருக்கிறார் நகைச்சுவை எழுத்தாளர்
தேனி.எஸ்.மாரியப்பன். கோயம்புத்தூர்,
விஜயா பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்நூல்
இன்றைய இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டும் என்பதில் ஐயமில்லை.
-தாமரைச்செல்வி.
|
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.