........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | |
a |
|
|
|
a |
|
புத்தகப்பார்வை-69
பக்கம்-319 விலை: ரூ. 160 |
வேடிக்கை விநோதங்கள் -தேனி.எஸ்.மாரியப்பன்-
விஜயா பதிப்பகம், |
பார்வை:
உலகில் அவ்வப்போது ஏதாவது
வினோதமான நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த வேடிக்கையான
நிகழ்வுகள் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி விடுவதுண்டு. பத்திரிகைச்
செய்தியாகி விடுவதுமுண்டு. இந்தப் பத்திரிகைச் செய்திகளை நாளிதழ்களில்
அவ்வப்போது பார்த்து வியப்படைகிறோம். அத்துடன் அதை மறந்து போய் விடுகிறோம்.
ஆனால் இந்த வேடிக்கை நிகழ்வுகளை எல்லாம் தொகுத்து நூலாக்கிக் கொடுத்தால் என்ன?
என்கிற எண்ணம் இந்நூலாசிரியருக்கு ஏற்பட்டிருக்கிறது. பல வேடிக்கை விநோதங்களைத்
தொகுத்து விட்டார்.
இந்த விநோதமான செய்திகளில் சில
படிப்பவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. சில புதிய தகவல்களைத் தருகிறது.
சில நகைச்சுவையாக இருக்கிறது. சில வருத்தத்தைத் தருகிறது. சில புதுமையானதாக
இருக்கிறது. மொத்தத்தில்
இந்நூலில்
பல சுவைகளுடன் சுவையான
சம்பவங்கள் இடம் பெற்றிருக்கின்றன. இந்த சுவையான சம்பவங்கள் வேடிக்கை
என்பதை விட அனைவரும் அறிந்து கொள்ளக்கூடிய தகவல்கள் என்பது மறுக்க முடியாத
உண்மை.
இந்த வேடிக்கை
விநோதங்கள் நிகழ்வுகளை
நகைச்சுவை எழுத்தாளர்
தேனி.எஸ்.மாரியப்பன் தொகுத்து
வேடிக்கை விநோதங்கள் என்கிற நூலாக கோயம்புத்தூர்,
விஜயா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
-தாமரைச்செல்வி.
|
|
முகப்பு |