........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | |
a |
|
|
|
a |
|
புத்தகப்பார்வை-70
பக்கம்-112 விலை: ரூ. 100 |
An Indo - Aryan Language in Madurai -V.Renugadevi-
Priya Publication, |
பார்வை:
மதுரை காமராசர்
பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் இணைப் பேராசிரியராக இருக்கும்
நூலாசிரியர் மதுரையில்
குறிப்பிடத்தக்க அளவு வசிக்கும் பட்டுநூல்காரர்கள் என அழைக்கப்படும்
சௌராஷ்டிரர்கள் எனும் சாதியினரின் மொழி குறித்த ஆய்வை இந்நூலில்
தந்திருக்கிறார். தமிழ்நாட்டில் தமிழ் தவிர மொழிவாரியாக சிறுபான்மையினர் பலர்
இருக்கின்றனர். இந்த மொழி வழிச் சிறுபான்மையினர்களில் சௌராஷ்டிர மொழி பேசும்
சௌராஷ்டிரர்கள் குஜராத் மாநிலத்திலிருந்து சில நூற்றாண்டுகளுக்கு முன்பு
மதுரைக்கு வந்தவர்கள். இவர்கள் பட்டு நெசவுத் தொழிலுக்காக அங்கிருந்து அழைத்து
வரப்பட்டவர்கள். இவர்கள் சில நூற்றாண்டுகளாக மதுரையிலும் மதுரையைச் சுற்றியுள்ள
சில நகரங்களுக்கும் இடம் பெயர்ந்து வசித்து வருகின்றனர். இவர்கள் பேச்சிற்காகப்
பயன்படுத்தும் மொழியான சௌராஷ்டிரம் இவர்கள் சாதியினர்களிடையே மட்டும்
பழக்கத்திலிருந்தாலும் வெளியில் சுற்றுப்புறத்திலுள்ளவர்களிடம் பேசுவதற்கு
தமிழ், ஆங்கிலம் மொழி தேவையாக இருக்கிறது. இந்தத் தேவைகளிடையேயும் சௌராஷ்டிர
மொழி தொடர்ச்சியாக இந்த சாதியினரின் வழக்கத்திலிருப்பது குறித்து நூலாசிரியர்
மேற்கொண்ட சிறு ஆய்வு இந்நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முனைவர். வி. ரேணுகாதேவி
எழுதியுள்ள “An Indo - Aryan Language in Madurai”
என்கிற இந்நூலைத் திருச்சிராப்பள்ளி, பிரியா பதிப்பகம்
வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் சிறுபான்மை மொழியாக பல மொழிகள் இருக்கும்
நிலையில் இந்த மொழிகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ள விரும்புபவர்களுக்கும்,
சிறுபான்மையினர் பயன்படுத்தும் மொழிகள் குறித்து தெரிந்து கொள்ள
விரும்புபவர்களுக்கும் இந்நூல் உதவக்கூடும்.
-தாமரைச்செல்வி.
|
|
முகப்பு |