........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

 தமிழ் வலைப்பூ-53

வலைப் பூக்கள்-53

 

முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...

- ஆசிரியர் குழுவினர்

இல.செ.கவின் தன்னம்பிக்கை

பேராசிரியர் இல.செ.கந்தசாமி அவர்களின் தன்னம்பிக்கை மாத இதழ் குறித்த தகவலுடன் தன்னம்பிக்கைக் கருத்துக்கள் வழங்கப் பட்டிருக்கிறது.

http://www.thannambikkai.net

 

முனைவர் கல்பனாசேக்கிழார்

இந்த வலைப்பூவில் தமிழ் இலக்கியம் சார்ந்த பதிவுகள் அதிகம் இருக்கின்றன. இடையிடையே சில திரைப்பட விமர்சனங்களும் இடம் பெற்றிருக்கிறது.

http://www.kalpanase.blogspot.com

நான் நானே

வெறும் நான்கு பதிவுகளுடன் இருக்கும் இந்த வலைப்பதிவு இனியாவது புதுப்பிக்கப்படுமா?

http://nannane.blogspot.com

 

இரா.முருகப்பன்

வலைப்பதிவர் பார்வைக்குத் தெரிந்த சமூக அவலங்கள் குறித்த பல தகவல்களை இங்கே வெளிப்படுத்தியிருக்கிறார்.

http://iramurugappan.blogspot.com
 

உங்களுக்காக

கணினி, ஆன்மீகம், மருத்துவம், மொபைல் போன்ற தலைப்புகளில் பல தகவல்களை வழங்கி வரும் இந்த வலைப்பூ வெப்தளங்கள் ஒரு அறிமுகம் எனும் தலைப்பில் பல தளங்களை சிறிய குறிப்புகளுடன் அறிமுகப்படுத்தியுள்ளது.

http://senthilvayal.wordpress.com

 

புதுகைத் தென்றல் 

ஆன்மீகம் குறித்து பல தகவல்களும் மற்ற தலைப்பின் கீழ் சில தகவல்களும் என்று அதிகத் தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இடையிடையே ஆங்கிலப்பதிவுகளும் இருக்கின்றன.

http://pudugaithendral.blogspot.com

த‌மிழ்போராளி வீரப‌த்திர‌ன்

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான தகவல்கள் மற்றும் அவர்கள் குறித்த செய்திகள் படங்களுடன் தரப்பட்டிருக்கிறது.

 http://www.viduthalaiveeraa.blogspot.com

 

தொட்டில் உறவுகள்

ஒக்கநாடு கீழையூர் எனும் பிறந்த மண்ணின் நினைவுகளை ஞாபகப்படுத்தும் விதமாகத் துவங்கப்பட்ட வலைப்பூவில் நிறைய தகவல்களைத் தரலாமே...

http://okkanadu.blogspot.com 

என் மன வானில்

இந்த வலைப்பதிவில் சில நூல்களின் விமர்சனம் மற்றும் சமூகப் பார்வையிலான கட்டுரைகள் இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

http://poetraj.blogspot.com 

 

முத்துக்கண்ணு பக்கங்கள்

இந்த வலைப்பக்கத்தில் வலைப்பதிவரின் புதுக்கவிதைகள் அதிக அளவில் இடம் பெற்றிருக்கிறது.

http://www.muthukannu.blogspot.com

 

தொகுப்பு: தாமரைச்செல்வி

 முந்தைய வலைப்பூக்கள் காண 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.