Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினாறாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...

Content
உள்ளடக்கம்

சமையல்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஆன்மிகம்
ஆன்மிகத் தொடர்கள்

அய்யா வைகுண்டர்

நெல்லை விவேகநந்தா


1. நாஞ்சில் நாட்டின் கதை

கேரளாவிற்கும் சென்னை மாகாணமாக இருந்த தமிழ்நாட்டிற்கும் இயற்கை அள்ளிக் கொடுத்த பரிசுகள் ஏராளம். மேற்குத் தொடர்ச்சி மலையைத் தன்னகத்தே கொண்ட கேரளாவிலும், தமிழகத்தின் தென்பகுதியிலும் உள்ள மலைப்பகுதிகளில் நன்கு வளர்ந்த ரப்பர் மரங்கள் நிறைந்த தோட்டங்கள், மிகப் பெரிய கனிகளைத் தரும் முக்கனிகளுள் இரண்டாவதான பலா மரங்கள் மற்றும் வாழைத் தோட்டங்கள், தென்னை மரங்கள், பனை மரங்கள், மிளகு, காபி, தேயிலைச் செடிகளின் அணிவகுப்புகள்... என்று, காணும் திசையெங்கும் பசுமையின் பாய் விரிப்பு. வருடத்தின் எல்லா நாட்களும் சலசலத்துக்கொண்டு ஓடும் நீரோடைகள், இறைச்சலுடன் பாயும் ஆறுகள், வெள்ளியை உருக்கிக் கொட்டுவது போன்ற நீர்வீழ்ச்சிகள்... என்று கேரளத்தின் அடையாளங்கள் ஏராளம்.

இந்த கேரள மாநிலத்தின் தென் பகுதிகளையும், இன்றைய தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தையும் உள்ளடக்கி இருந்த ஒரு சமஸ்தானம்தான் திருவிதாங்கூர். திருவனந்தபுரம் இவர்களது தலைநகரமாக இருந்தது. வெள்ளி நிறத்தில் வலம்புரிச் சங்கு பொறித்த செம்மை நிறக் கொடி, இந்த சமஸ்தானக் கொடியாக திகழ்ந்தது. இந்த சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்ததுதான் நாஞ்சில் நாடு. வயலில் உழுவதற்கு பயன்படும் கலப்பைக்கு நாஞ்சில் என்ற பெயரும் உண்டு. இந்த பகுதியில் உழவுத் தொழில் அதிக அளவில் நடந்ததால், இப்பகுதி நாஞ்சில் நாடு என்று அழைக்கப்பட்டது. இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தின் அகஸ்தீஸ்வரம், பூக்களுக்கு பெயர்போன தோவாளை ஆகிய வட்டங்களை உள்ளடக்கி பகுதிதான் நாஞ்சில் நாடு என்று அழைக்கப்பட்டது.

இந்த நாஞ்சில் நாடு 10 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை பாண்டிய மன்னர்களின் ஆட்சிப் பகுதியாக இருந்தது. அதன்பின், சேரர்கள் வசம் வந்தது. அவர்களுக்குப் பின் ஹோய்சாளர்கள் கை ஓங்கவே... சேரர்கள் வலுவிழந்து போனார்கள். இதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட கேரளாவின் வேனாடு மன்னர்கள், நாஞ்சில் நாட்டை தங்கள் வசப்படுத்திக் கொண்டனர். ஏறக்குறைய 4 நூற்றாண்டுகாலம் அவர்கள் நாஞ்சில் நாட்டை தங்கள் வசம் வைத்திருந்தனர். இவர்களுக்கும், பக்கத்து அரசான பாண்டிய மன்னர்களுக்கும் இடையில் அடிக்கடி எல்லைப் பிரச்சினை இருந்து வந்தது.

கி.பி.1609ல் வடக்கே இருந்து வந்த விஜயநகர மன்னர்கள் பாண்டியர்களை வென்று, மதுரையைத் தங்கள் வசம் கொண்டு வந்தனர். அதே நேரத்தில், வேனாடு அரசியலில் உள்நாட்டு குழப்பம் ஏற்பட்டு, ஆற்காடு சந்தா சாகிபுவின் படையெடுப்புக்கு உள்ளானது. அப்போது வேனாட்டை ஆண்டை மார்த்தாண்ட வர்மாவின் வீரர்கள் போர்க்களத்தில் தாக்குப்பிடிக்க முடியாமல் பின்வாங்கினர். மார்த்தாண்ட வர்மாவுக்கு பிறகு வந்த வேனாட்டு மன்னர்கள் வலுவிழந்தவர்களாக இருந்ததால், அப்போது இந்தியா முழுவதுமே நாடு பிடிக்கும் கொள்ளை(க)யில் ஈடுபட்ட ஆங்கிலேயர்கள், நாஞ்சில் நாட்டை உள்ளடக்கி வேனாட்டையும் தங்கள் வசம் கொண்டு வந்தனர்.

அப்போது, அவர்களது ஆசியுடன் திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர்களின் ஆட்சி ஏற்பட்டது. ஆங்கிலேயர்களின் கைப்பாவையாக இருந்த அவர்கள், ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்டிக் கொண்டு வழி வழியாக நாட்டை ஆண்டு வந்தனர். கி.பி.1729 முதல் 1956 வரை இவர்களே ஆட்சி புரிந்தனர். திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கடைசி மன்னராக இருந்தவர் 'சித்திரை திருநாள்' (திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர்கள், நட்சத்திரங்களின் பெயரையே தங்களுக்கு சூட்டிக்கொள்வார்கள்). 1798 முதல் 1810 வரை அவிட்டம் திருநாள் என்ற பாலராம வர்மா என்பவர் திருவிதாங்கூர் சமஸ்தான மன்னராக இருந்தார். அவரது ஆட்சிக் காலத்தில்தான் அய்யா வைகுண்டர் முத்துக்குட்டியாக 1809ஆம் ஆண்டு நாஞ்சில் நாட்டில் நாகர்கோவிலில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாமித்தோப்பில் நாடார் சமூகத்தில் பொன்னுமாடன் - வெயிலாள் என்ற தம்பதியருக்கு மகனாக அவதரித்தார்.



1947 ஆகஸ்ட் 15-ம் தேதி ஆங்கிலேயரிடம் இருந்து இந்தியா சுதந்திரம் அடைந்தாலும், நாஞ்சில் நாட்டை உள்ளடக்கி திருவிதாங்கூர் சமஸ்தானம் 1956 வரை தொடர்ந்து இயங்கி வந்தது. அதன் பிறகு, அன்றைய தமிழகத்துடன் (சென்னை மாகாணம்) இணைந்தது. 1956 நவம்பர் 1-ம் தேதி புதிய மாநிலமாக கேரளா உருவாக்கப்பட்டபோது, அதனுடன் சேர்க்கப்பட்டது. பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு நாஞ்சில் நாடு தமிழகத்துடன் இணைக்கப்பட்டு 'கன்னியாகுமரி' என்ற புதிய மாவட்டம் உதயமானது.

ஆன்மிக ரீதியாக திருவிதாங்கூர் சமஸ்தானத்தை அணுகினால், அதனை ஆண்டவர்கள், விஷ்ணுவின் ஒரு அம்சமான திருவனந்தபுரத்து பத்மநாபசுவாமியின் அடியவர்கள் என்னும் பொருள்பட தங்களை “பத்மநாததாசர்” என்று அழைத்துக் கொண்டனர். பரசுராமர், தனது கோடாரியைக் கடலுக்குள் எறிந்த போது உருவானதுதான் கேரளா என்று தனது ரகுவம்ச காவியத்தில் குறிப்பிடுகிறார் காளிதாசர்.

கன்னியாகுமரிக்கு அருகில் உள்ள மருந்துவாழ் மலையும் புகழ் பெற்றது. ராமர் மற்றும் ராவணன் யுத்தத்தின் போது, ஆஞ்சநேயர் கயிலாயத்தில் இருந்து சஞ்சீவி மலையைப் பெயர்த்து எடுத்துக் கொண்டு வரும் போது, அதில் இருந்து உடைந்து விழுந்த ஒரு பகுதிதான் இந்த மருந்து வாழ் மலை என்கிறார்கள். இந்த மலையில் அரிய வகை மூலிகைகள் இன்றும் விளைகின்றன. அவற்றை உருவம் இல்லாமல் என்றும் சிரஞ்சீவியான சித்தர்கள் பயிரிடுவதாக ஒரு நம்பிக்கை உண்டு.

மேலும், கணவனையே கண்கண்ட தெய்வமாக நினைத்து, கடவுளைக் குழந்தையாக்கிய கற்புக்கரசியான அனுசுயாதேவி இங்கேதான் வாழ்ந்தாள். அவளது கற்பின் மகிமையை நாரதமுனி மூலம் பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியரும் அறிந்து வியப்புற்றனர். அனுசுயாவின் கற்பை சோதிக்க எண்ணிய அவர்கள் முறையே தங்களது கணவர்களான சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளையும் அனுசுயாவின் ஆசிரமத்திற்கு அனுப்பி வைத்தனர். அவர்களும், தேவியர் சொன்னபடியே வயோதிகர் வேடத்தில் அங்கு சென்றனர்.

தன் இல்லத்திற்கு வந்தவர்களுக்கெல்லாம் அமுது படைத்து ஆதரிக்கும் நற்குணங்களைப் பெற்ற அனுசுயா, வயோதிகர் வேடத்தில் வந்த மும்மூர்த்திகளையும் வரவேற்று ஆசிரமத்தில் அமர வைத்தாள். பின்னர் அவர்களுக்கு அமுது படைக்கத் தயாரானாள். ஆனால், அவர்கள் அதை ஏற்க மறுத்தனர். மாறாக, "நீ பிறந்த மேனியாக (நிர்வாண கோலம்) உணவு பரிமாறினால்தான் அவற்றை சாப்பிடுவோம்" என்று கூறி அவளை அதிர்ச்சியடையச் செய்தனர்.

உடனே அனுசுயா தனது கணவர் அத்திரி முனிவரை கண்மூடி தியானித்தாள். அப்போது அங்கு வயோதிகர்கள் வேடத்தில் வந்திருப்பவர்கள் மும்மூர்த்திகள் என்பதை அவள் உணர்ந்தாள். தன் கற்பின் நிலையை அவர்களுக்கு உணர்த்த விரும்பிய அவள், தன் கணவரின் பாதநீரை எடுத்து மும்மூர்த்திகளின் தலையிலும் தெளித்தாள். அந்த நிமிடமே மூவரும் தவழும் குழந்தைகளாக உருமாறினார்கள்.

குழந்தைப் பருவம் என்பது ஒன்றும் அறியாத பருவம் அல்லவா? எனவே, அந்த மூன்று குழந்தைகளையும் வாரி எடுத்து மார்போடு அணைத்த அனுசுயா, நிர்வாண கோலத்தில் அவர்களுக்குப் பாலூட்டி அவர்களின் பசியினை போக்கினாள். பின்னர், அங்கு வந்த தனது கணவர் அத்திரி முனிவரிடம் நடந்தவற்றை ஒன்று விடாமல் கூறினாள். மனைவியின் செயலைக் கண்டு பெருமிதப்பட்டார் அவர்.

நாட்கள் வேகமாக நகர்ந்தன. பூலோகம் சென்ற தங்களது கணவன்மார்களைக் காணாமல் முப்பெரும் தேவியரும் தவித்தனர். அவர்களிடம் நாரதர், நடந்த சம்பவத்தைக் கூறினார்.

உடனே, தேவியர் மூவரும் அனுசுயாவின் ஆசிரமத்திற்கு சென்று மாங்கல்யப் பிச்சை கேட்டனர். அங்கு குழந்தைகளாக இருந்த மும்மூர்த்திகளையும் எடுத்துச் செல்ல அனுசுயா அனுமதித்தாள். மூன்று குழந்தைகளும் ஒரே மாதிரியாக இருந்ததால் தங்களது கணவர் யார் என்று தெரியாமல் தேவியர் மூவரும் குழம்பி நின்றனர்.

பின்பு அவர்கள் அனுசுயாதேவியின் ஆலோசனைப்படி, மூன்று நீர்ச்சுனைகளை அங்கே உருவாக்கி, அதில் நீராடி, ஆதிபராசக்தியை நோக்கித் தவம் செய்தனர். அவர்களின் தவத்தை மெச்சிய ஆதிபராசக்தி மும்மூர்த்திகளையும் மீண்டும் உருப்பெற செய்தார்.



இதுதான் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள மிகவும் புகழ் பெற்ற சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோவிலின் தலவரலாறு. இங்குதான் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் ஒரே வடிவத்தில் மூலவராக - தாணுமாலயனாக ஒருவித லிங்க வடிவில் காட்சி தருகின்றனர். இதில் தாணு என்பது சிவனையும், மால் என்பது விஷ்ணுவையும், அயன் என்பது பிரம்மாவையும் குறிக்கிறது. இந்தக் கோவில் நாகர்கோவில் - கன்னியாகுமரி சாலையில், நாகர்கோவிலில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

அனுசுயா போல், மற்றொரு ரிஷி பத்தினியான அகல்யாவும் இந்த நாஞ்சில் நாட்டோடு தொடர்புடையவள்தான். ஒருமுறை பூலோகத்தை வலம் வந்த தேவேந்திரன் பேரழகியான அகல்யாவைப் பார்த்து, அவளது அழகில் மயங்கிப் போனான். போதை தலைக்கேறிய அவன், அவளை நெருங்க சரியான தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.

ஒரு நாள் நள்ளிரவில் அகல்யாவை அடைந்து விட வேண்டும் என்ற ஆவலில் அவன், சேவல் உருவத்திற்கு மாறிக் கூவினான். ஆசிரமத்தில் உறங்கிக் கொண்டிருந்த அகல்யாவின் கணவரான கவுதம முனிவர், பொழுது விடிந்து விட்டது என்று கருதி ஆற்றில் நீராடி வர வெளியேறிச் சென்றார். இதைப் பயன்படுத்தி ஆசிரமத்திற்குள் சேவலாகப் புகுந்த தேவேந்திரன், கவுதம ரிஷி உருவம் எடுத்து அகல்யாவை நெருங்கினான். அவளை தனது விருப்பத்திற்கு உட்படுத்தினான்.

அதேநேரம், நீராடச் சென்ற கவுதமர், சலனமற்று கிடந்த ஆற்றைப் பார்த்து, இன்னும் விடியவில்லை என்பதை அறிந்தார். உடனே, ஆசிரமத்திற்கு திரும்பினார். இந்திரன் அங்கிருந்து பூனை உருவம் எடுத்து வெளியேறினான். அங்கே, நடந்தவைகளை தன் ஞான திருஷ்டியில் அறிந்தார். தனது மனைவியை இந்திரன் அடைந்து விட்டுச் சென்றதை அறிந்தார். அவர் கோபத்துடன் இந்திரனை "எதற்கு நீ ஆசைப்பட்டாயோ, உன் உடல் முழுவதும் அதுவாகவே ஆகட்டும்..." என்று சாபமிட்டார்.

அடுத்த நிமிடமே தேவேந்திரன் உடல் முழுவதும் யோனி (பெண் உறுப்பு) உருவம் தோன்றியது. கலங்கிப் போன அவன் முனிவரிடம் தான் செய்த தவறுக்காக வருந்தினான். அதனால், முனிவர் அவனுக்குப் பாவ விமோசனமும் அளித்தார்.

"சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் ஒரே மூர்த்தியாக இருக்கும் தருணத்தில் அவர்களைப் பூஜித்தால் நீ உண்மையான நிலையை அடையலாம்’ என்பதுதான் அது. உடனே, தேவேந்திரன் சுசீந்திரம் வந்தான். அங்கே, அத்திரி மகரிஷிக்கும், அவரது தர்மபத்தினியான அகல்யாவுக்கும் (முந்தைய சம்பவ கற்புக்கரசி) மும்மூர்த்திகளும் தரிசனம் தந்த நேரத்தில், தானும் அந்த தரிசனத்தை பெறுவதற்காக முயன்றான். அதையொட்டி, தனது வெள்ளை யானையான ஐராவதத்திடம் தண்ணீர் கொண்டு வருமாறு கட்டளையிட்டான்.

அது, தேவேந்திரன் உத்தரவுபடி ஒரு பெரிய மலையைப் பிளந்து தண்ணீர் எடுத்து வந்தது. அப்போது அங்கே தோன்றிய ஊற்று நீர் அந்த பகுதிகளில் வேகமாக பரவி, அப்பகுதி முழுவதையும் செழிப்பாக்கியது. அவ்வாறு ஐராவதத்தால் உருவானதுதான், கோட்டாறு என்கிற பழையாறு. சாமித்தோப்பை ஓட்டி இந்த ஆறு ஓடிக் கொண்டிருப்பதை இன்றும் பார்க்கலாம்.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/spiritual/serial/p1a.html


  2021
  2020
  2019
  2018
  2017

வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License