Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினாறாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...

Content
உள்ளடக்கம்

சமையல்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஆன்மிகம்
ஆன்மிகத் தொடர்கள்

அய்யா வைகுண்டர்

நெல்லை விவேகநந்தா


2. முத்துக்குட்டி பிறப்பு

கி.பி.18 ஆம் நூற்றாண்டு. ஐரோப்பிய நாடுகள் தொழிற்புரட்சியால் வளர்ச்சி பெற்றுக் கொண்டிருந்தனர். ஆனால், இந்தியாவோ ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள் என்று வியாபாரம் செய்ய வந்தவர்கள் கையில் சிக்கி அவர்களால் கூறு போடப்பட்டு ஆளப்பட்டு வந்தது. இந்தியாவின் இயற்கை செல்வங்களை அவர்கள் தங்களது நாடுகளுக்கு அள்ளிக் கொண்டு போனார்கள். அவர்களை, ஏன் என்று தட்டிக்கேட்க யாருக்கும் துணிவில்லை. அப்படியே தட்டிக் கேட்ட மிகச் சிலரும் பல்வேறு அடக்குமுறைகளுக்கு ஆளாகினர்.

நாட்டைக் கொள்ளையடிக்க வந்த அவர்களை எதிர்க்கத் துணிவில்லாத இந்தியக் குறுநில மன்னர்கள் அவர்களுக்குக் கப்பம் செலுத்தித் தங்கள் அரசைக் காப்பாற்றிக் கொள்ளத் தொடங்கினர். இந்த சுயநல அரசர்களால் ஆங்கிலேயர்களை எதிர்க்க இயலாவிட்டாலும், அவர்கள் ஆட்சிப் பகுதியில் மக்களை சாதி எனும் பெயரில் பிரித்து, உயர்வு தாழ்வுகளை உருவாக்கி வேறுபாடுகளை வளர்த்து வந்தனர். இந்த வேறுபாடுகளால், குறிப்பிட்ட சில சமூக மக்கள் மிகவும் மரியாதையுடன் நடத்தப்பட்டு, மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்தனர். பல சமூகத்தினர் ஒடுக்கப்பட்டு, பல கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இக்கொடுமைகளில் தென் தமிழகமும், அன்றைய தென்கேரளாவும் இணைந்த திருவாங்கூர் சமஸ்தானத்தின் ஆட்சிப் பகுதியில் இருந்த நாஞ்சில் நாட்டு மக்களின் நிலை மிகவும் மோசமானது. இங்கு, உயர் சாதியினராகக் கருதப்பட்டவர்கள் பிற சாதியினர்களை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு அவர்களைச் சிறுமைப்படுத்தி பல இன்னல்களுக்கு உள்ளாக்கினர். இந்த இன்னல்களை நினைத்து தங்கள் வாழ்க்கையை நொந்து வாழ்ந்து கொண்டிருந்த அந்த மக்களுக்கு விடிவு காலம் வருமா? என எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

திருவாங்கூர் சமஸ்தான ஆளுகைக்கு உட்பட்டிருந்த ஆட்சியில் 1050 சாதிகள் அப்போது இருந்ததாக சொல்லப்படுகிறது. அங்கு பிராமணர்களிலேயே உயர்ந்தவர்களாகக் கருதப்பட்ட நம்பூதிரிகளின் சாதிய ஆட்சியே நடந்தது. அவர்களுக்குத் துணையாக, நாயர்கள், வெள்ளாளர்கள் போன்ற சில சாதியினரும் சேர்ந்து கொண்டனர். அவர்களால் மிகவும் ஒடுக்கப்பட்டவர்களாக அறிவிக்கப்பட்ட பட்டியலில் 18 ஜாதிகள் இடம் பெற்றன. குறிப்பாக சாணார் (நாடார்), பரவர், மூக்குவர், புலையர் உள்ளிட்ட ஜாதியினர் அதில் அடங்குவர். இதுபற்றி;

“சாணார் இடையர் சாதி வணிகருடன்
நாணாத காவேரி நல்ல துலுக்கப்பட்டர் முதல்
சூத்திரர் பிரமார் தொல் வாணியர் பறையர்
கம்மாளர் ஈழர் கருமறவர் பரவர்
வெம்மா நசுராணி, வேகாவண்டர் இடலையர்
சக்கிலியரோடு சாதி பதினெட்டும்...”

- என்கிறது அகிலத்திரட்டு.



இந்த 18 ஜாதியினரும் உயர் ஜாதியினரான நம்பூதிரிகள், நாயர் (மேனன்), பட்டன், தம்புரான், தம்பி, பிள்ளைமார் மற்றும் பிராமணர்களுடன் பேசும் போதும், அவர்கள் வசிக்கும் பகுதி அருகில் செல்ல நேரும் போதும் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு தனி வரைமுறையே உருவாக்கப்பட்டது. அத்தனையும், கொடூரமானவை! இதனால்தான், அன்றைய கேரளாவை "பைத்தியக்காரர்களின் கூடாரம்" என்று 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த சுவாமி விவேகானந்தர் சொன்னார் போலிருக்கிறது.

திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் சில இடங்களுக்குச் செல்லும் போது, உயர் சாதிப் பெண்கள் வசித்த அம்ம வீடு மற்றும் உள்ளிருப்பு வீடுகளில் தங்கி ஓய்வெடுப்பது வழக்கம். ஓய்வு என்றால் ஒரு மணி நேரமோ, இரண்டு மணி நேரமோ அல்ல; இரண்டு அல்லது மூன்று நாளில் தொடங்கி நாட்கணக்கில், வாரக்கணக்கில் நீடிக்கும். அப்போது, அந்த வீட்டுப் பெண்கள் மன்னரை உற்சாகப்படுத்தி அனுப்பி வைப்பார்கள். இந்தத் தொடர்பில் ஆதிக்க சாதியினரான நம்பூதிரிகள், நாயர் உள்ளிட்டவர்கள் மன்னருடன் நெருக்கமாய் இருந்தனர்.

மன்னருக்குக் கிடைக்கும் மகிழ்ச்சியான ஓய்விற்கு பிரதிபலனாக பல சலுகைகளை உயர் சாதியினருக்கு வழங்கினார். அந்த ஆதிக்க ஜாதியினர் வசித்த பகுதியில் இருந்த விளைநிலங்கள், வருவாய்த்துறை மற்றும் நிர்வாகத்தைக் கவனிக்கும் பொறுப்பை அவர்களிடமே விட்டுவிட்டார். இந்த அளவுக்கு மீறிய அதிகாரத்தால், உயர் சாதிப் பட்டியலில் இடம் பிடித்தவர்கள், ஒடுக்கப்பட்ட சாதியினராக அறிவிக்கப்பட்டவர்ளைக் குற்றவாளியாக்கி குறுநில மன்னர்கள் போல் தீர்ப்பு வழங்கவும், தண்டனை கொடுக்கவும் தொடங்கி விட்டனர்.

1. உயர் சாதியினர் வசிக்கும் தெருக்களில் தாழ்த்தப்பட்டவர்கள் (ஒடுக்கப்பட்டவர்கள்) நடமாடக் கூடாது.

2. தாழ்த்தப்பட்ட வகுப்பு ஆண்கள் செருப்பு அணிந்து நடந்து செல்லக் கூடாது.

3. வெயில், மழைக்கு குடை பிடிக்கக் கூடாது.

4. முழங்காலுக்கு மேலேதான் வேஷ்டி கட்டித் துண்டைக் கை இடுக்குகளில் வைத்தபடிதான் நடக்க வேண்டும்.

5. உயர் சாதியினரின் குழந்தைகளையும் சாமி, அய்யா என்றுதான் அழைக்க வேண்டும்.

6. அடிமைகளாக விலைக்கு வாங்கப்பட்ட தாழ்த்தப்பட்டவர்கள், ஆயுள் முழுக்க உயர் சாதியினருக்காக உழைக்க வேண்டும். அதற்கு கூலி கிடையாது. அவர்களுக்கு வழங்கப்படும் சாப்பாடும் நாய்க்கு வழங்குவதைப் போல்தான் வழங்கப்படும்.

7. ஒரு பிராமணனிடம் பேசும் போது 36 அடி தூரத்திலும், நாயரிடம் பேசும் போது 60 அடி தூரத்திலும் நின்று கொண்டு, தலையைக் கீழே குனிந்து கொண்டும், வாயைப் பொத்திக் கொண்டும் பேச வேண்டும். புலையர் இனத்தினருக்கு இந்த வரைமுறை இரட்டிப்பாக இருந்தது.

8. தாழ்த்தப்பட்டவர்கள் வெளியே புறப்பட்டுச் சென்றால், தங்களை உயர் சாதியினர் பார்க்க நேர்ந்து விடக்கூடாது என்பதற்காக ஒரு குச்சியைக் கொண்டு தட்டிக் கொண்டே செல்ல வேண்டும்.

9. வயல்களில் வேலை செய்யும் போது உயர் சாதியினர் அந்த வழியாக சென்றால், அவர்கள் தங்களைப் பார்க்கக்கூடாது என்பதற்கான அறிவிப்பை குறிக்கும் வகையில் இலைகளையும், மரத்துண்டுகளையும் வைத்துச் செல்ல வேண்டும்.

10. ஆதிக்க சாதியினரின் கோவில்கள் உள்ள இடங்களுக்கு தாழ்த்தப்பட்டவர்கள் செல்லக்கூடாது. இக்கோவில் திருவிழாக்களின் போது, சில கிலோமீட்டர் தொலைவுக்கு முன்னதாகவே தடுப்புகளை ஏற்படுத்தி, ஊருக்குள் தாழ்த்தப்பட்டவர்கள் வருவது தடுக்கப்பட்டது.

11. ஊரிலுள்ள பொதுக்குளம், கிணறு, சாலைகள், வணிகம் நடைபெறும் இடங்களை தாழ்த்தப்பட்டவர்கள் பயன்படுத்தக் கூடாது.

12. தாழ்த்தப்பட்ட வகுப்பு ஆண்கள் குடுமி வைத்துக் கொள்ளக் கூடாது.

13. தாழ்த்தப்பட்டவர்கள் தங்களது குழந்தைகள் பற்றி உயர் சாதியினரிடம் குறிப்பிடும் போது, அவர்களைக் குரங்கு, கன்றுக்குட்டி என்று வேறு மிருகங்களின் பெயரில்தான் சொல்ல வேண்டும்.

14. தாழ்த்தப்பட்டவர்களது குழந்தைகளுக்கு உயர் சாதியினர் பயன்படுத்தும் பெயர்களை வைத்துக் கொள்ளக் கூடாது.

15. மாடி வீடு கட்டக் கூடாது. பசுமாடு வளர்க்கக் கூடாது.

- இப்படி பல அடக்குமுறைகள் தாழ்த்தப்பட்ட வகுப்பாக ஒடுக்கப்பட்ட 18 சாதியினர் மேல் திணிக்கப்பட்டன. அதை மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டனர். சில சமயம் கொலையும் செய்யப்பட்டனர்.



இந்த அடக்குமுறைகளுடன் வரிகளும் அதிகமாக விதிக்கப்பட்டன. பனை ஏறுபவர்கள், அவர்கள் பயன்படுத்தும் 5 அடி உயர ஒற்றைக் கம்பு ஏணி, பாதுகாப்புக்காக காலில் அணிந்து கொள்ளும் தளைநார்களுக்கு கூட வரி வசூல் செய்யப்பட்டது. இந்த ஒடுக்கப்பட்ட சாதியினர் தாடி, மீசை வளர்த்தால் அதற்கும் தனி வரி செலுத்த வேண்டும். இதுபோல், வீட்டுக் கூரையை மாற்றினாலும் கூட, கூரை வரி என்ற ஒன்றை கட்ட வேண்டும். "பிராயசித்த வரி" என்ற அதிகாரிகளே நிர்ணயித்த வரி விருப்பம்போல் வசூலிக்கப்பட்டது.

தாழ்த்தப்பட்ட ஆண்களைவிட பெண்கள் இன்னும் அதிகமாக வரிக் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். தாலி உள்ளிட்ட நகைகள், ஆடைகள் அணியக் கூட அவர்களிடம் இருந்து வரி வசூலிக்கப்பட்டது. அடிமைகளாக விற்கப்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். மேலும்,

1. திருமணம் ஆன தாழ்த்தப்பட்ட பட்டியலில் உள்ள பெண்கள் தாலியை தங்கத்தில் செய்து அணியக் கூடாது. தங்கத்திற்கு பதிலாக பனை ஓலையையே பயன்படுத்த வேண்டும்.

2. இச்சாதியைச் சேர்ந்த பெண்கள் எக்காரணம் கொண்டும் கல்வியறிவு பெறுவதற்காக படிக்கக் கூடாது.

3. இந்த சாதிப் பெண்கள் தண்ணீர்க் குடங்களை இடுப்பில் வைத்துச் சுமந்து செல்லக் கூடாது. தலையில்தான் சுமக்க வேண்டும்.

4. இந்த சாதிப் பெண்கள் மார்பகங்களை ஆடை அணிந்து மறைக்கக் கூடாது. இடுப்புக்கு கீழே, கால் முட்டிக்கு மேலே முண்டு போன்ற ஒருவித ஆடை மட்டுமே அணிந்து கொள்ள வேண்டும். மார்பகங்களை அவர்கள் திறந்து காட்டியபடி செல்வது மரியாதை செலுத்துவதாக ஆதிக்க ஜாதியினரால் கருதப்பட்டது.

5. இந்த சாதிப் பெண்கள் தண்ணீர்க் குடங்களைத் தலையில் சுமந்து செல்லும் போது, எதிரே மேல் சாதியினர் வந்தால் ஒதுங்கி, நின்று நிதானித்துதான் செல்ல வேண்டும்.

6. 16 முதல் 35 வயது வரையிலான பெண்கள் கட்டாயமாக முலை வரி (மார்பக வரி) செலுத்த வேண்டும். மீறினால், கூந்தலைக் கொண்டே மரங்களில் கட்டி வைத்து அடித்து உதைப்பார்கள். சில நேரங்களில், முலை வரி செலுத்தாத பெண்களை, அவர்களது கூந்தலில் உலக்கையை சுற்றிக் கட்டித் தொங்கவிட்டு, முதுகில் பெரிய கல்லை ஏற்றிக் குனிந்த நிலையில் பல நாட்களாக நிற்க வைத்தனர். இந்த தண்டனைக்கு ஆளான பெண்கள் பலர் இறந்து போவது நிச்சயம். இதுபோக, முலை வரி கட்டாத பெண்களின் மார்பகங்கள் அறுத்தெறியப்பட்டது.

-இப்படிப்பட்ட கொடூரங்கள் நிறைந்த சூழ்நிலையில்தான், நாஞ்சில் நாட்டுக்கு உட்பட்ட சாஸ்தான் கோவில்விளை (இன்றைய சாமித்தோப்பு) என்ற ஊரில் வாழ்ந்து வந்த, தாழ்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட 18 ஜாதியில் ஒன்றான சாணார் (நாடார்) இனத்தைச் சேர்ந்த பொன்னுமாடன் நாடாருக்கும், வெயிலாள் அம்மையாருக்கும் கி.பி.1809 ஆம் ஆண்டு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. பெருமாளின் அருளால் அக்குழந்தை பிறந்ததாக கருதிய பொன்னுமாடன் தம்பதியர், "முடிசூடும் பெருமாள்" என்று குழந்தைக்கு நாகரீகமான பெயரைச் சூட்டினர்.

"முடிசூடும் பெருமாள்" என்றால் "திருமுடியுடன் விஷ்ணு" என்று பொருள். அக்காலத்தில், தாழ்த்தப்பட்ட சாதியினரில் உள்ள ஒருவர் குழந்தை பெற்றால், அது பற்றிய தகவலை அரசு நிர்வாகப் பதிவேட்டில் பதிவு செய்து, குழந்தைக்குரிய தலை வரியைக் கட்டாயம் செலுத்த வேண்டும். அதனால், பொன்னுமாடனும் தனது மகனின் பெயரை பதிவு செய்யச் சென்றார். குழந்தையின் பெயர் நாகரீகமாக இருப்பதாக கருதிய அரசாங்கத்தினர், அந்த பெயரை பதிவேட்டில் பதிய மறுத்தனர். மாறாக, அவ்வாறு பெயர் வைத்ததற்காக தண்டனைதான் கிடைக்கும் என்றனர். பயந்து போன பொன்னுமாடன் நாடார், தனது குழந்தையின் பெயரை "முத்துக்குட்டி" என்று மாற்றினார். அதன் பின்னரே அவர் குழந்தைக்குரிய தலை வரி செலுத்த அனுமதிக்கப் பட்டார்.

இந்த முத்துக்குட்டிதான், பின்னாளில் மிகப்பெரிய சமூக புரட்சி செய்து, தாழ்த்தப்பட்டவர்களாக அறிவிக்கப்பட்ட 18 ஜாதியினரையும் தலைநிமிர்ந்து நடக்கச் செய்தார். அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட உரிமைகளையும் மீட்டுக் கொடுத்தார். சமூக புரட்சியாளராக திகழ்ந்த அவரே, ஒரு மகானாக மட்டுமின்றி, இறைவனாகவும் கருதப்படுகிறார். அவர் வேறு யாருமில்லை. நிகழ்காலத்தை மட்டுமின்றி எதிர்காலத்தையும் அப்படியே ஆழமாய்ச் சொன்ன அய்யா வைகுண்டர்தான் அவர்.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/spiritual/serial/p1b.html


  2021
  2020
  2019
  2018
  2017

வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License