Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினாறாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...

Content
உள்ளடக்கம்

சமையல்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஆன்மிகம்
ஆன்மிகத் தொடர்கள்

அய்யா வைகுண்டர்

நெல்லை விவேகநந்தா


10. உயர்வு தாழ்வு எதுவுமில்லை

இறைவனை ஒருவன் காண வேண்டும் அல்லது அடைய வேண்டும் என்றால் அதற்கு என்ன செய்ய வேண்டும்? என்ற கேள்விக்கு அழகாகப் பதில் சொன்னார் அய்யா வைகுண்டர்.

“யார் அவன்? யார் அவன்? என்று நீ பிறந்தது முதல் தேடும் அந்த இறைவனை நீ அறிய வேண்டும் என்றால், முதலில் நீ யார் என்பதை அறிய வேண்டும். உன்னுடைய ஆரம்பத்தையும், முடிவையும் தெரிந்து கொண்டு, உனக்குள் இருக்கும் சக்தியையும் அறிந்தால் மட்டுமே இறைவனை உணர முடியும்” என்றார் வைகுண்டர்.

அதோடு, அன்றைய வழிபாட்டு முறைகளையும் உரிமையோடு கண்டித்தார்.

“உண்டு பண்ணி வைத்த உட்பொருளை தேடாமல்
கண்டதெல்லாம் தெய்வமென கையெடுப்பார் சண்டாளர்...”

- என்று, மூட நம்பிக்கைகள் நிறைந்த அன்றைய வழிபாட்டு முறைகளை கண்டித்தவர், பணத்தை தண்ணீராக செலவு செய்து பூஜை மற்றும் புணஸ்காரம் செய்ய வேண்டாம்... உருவ வழிபாடு வேண்டாம்... உயிர்ப்பலி கொடுக்க வேண்டாம்... மூடநம்பிக்கைகளில் மூழ்க வேண்டாம்... என்று மக்களை வலியுறுத்தினார்.

ஆன்மிகத்தில் மூட நம்பிக்கைகளை எதிர்த்த வைகுண்டர், எப்படிப்பட்ட ஆன்மிகம் தேவை என்பதையும் வரையறுத்தார்.



“சக மனிதர்களிடம் மட்டுமின்றி, எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்த வேண்டும். அவ்வாறு அன்பு செலுத்தப் பழகிக் கொண்டால் இறைவனை உணர்ந்து, அவனை அடைவதற்கான வழியும் கிடைத்து விடும். இறைவனை அடைய வேண்டும் என்பதற்காக இல்லறத்தை துறப்பது தவறான செயல். இல்லறம் போன்ற மிகப்பெரிய தவம் வேறொன்றும் இல்லை... அதோடு, முடிந்தவரை பிறருக்குத் தருமம் செய். யாரும் தேடி வந்து உதவி கேட்பதற்கு முன்பு, நீயே அவர்களை தேடிச் சென்று உதவு. அவர்களை மனம் குளிரச் செய். அவர்களது மகிழ்ச்சியில் நீயும் ஆனந்தப்படு. அதுதான் உண்மையான தருமம். அவ்வாறு, பிறருக்கு தருமம் செய்தாலே போதும்; அதுதான், நீ இறைவனுக்குச் செய்யும் உண்மையான வழிபாடு...” என்கிறார் வைகுண்டர்.

ஆன்மிக நெறிகளோடு தகுந்த ஆன்ம நெறிகளையும் அய்யா வலியுறுத்தினார். “தேவையற்ற வாய் வார்த்தைகள் ஒருவனது வாழ்நாளைக் குறைத்து விடும். அதேபோல், அடக்கம் இல்லாத ஆர்ப்பாட்டமான வாழ்க்கை அமைதியைச் சிதைத்துவிடும்” என்றார்.

இவ்வாறு ஆன்மிகத்தில் பல்வேறு மாற்றங்களை செய்ய வேண்டும் என்று கூறிய வைகுண்டர், அன்றைய அடக்குமுறையான வாழ்க்கைக்கு எதிராகவும் மக்களை உசுப்பிவிட்டார். 1. கை கட்டி, வாய் பொத்தி அடுத்தவனிடம் அடங்கி கிடக்கும் அடிமை வாழ்வு ஒழிய வேண்டும்.

2. ஆதிக்க ஜாதியினர் செய்யும் சூழ்ச்சியில் சிக்கி தனிமைப்பட்டு கிடக்காதீர்கள். எல்லோரும் ஒற்றுமையாக வாழுங்கள்.

3. எவருக்கும் எதற்கும் வரி என்ற பெயரில் பணத்தை கொடுக்காதீர்கள்.

4. இந்த பூமியில் வாழப் பிறந்தவர்கள்தான் நீங்கள்; அந்த வாழ்க்கையை அடுத்தவனிடம் கேட்டுப் பெறவேண்டிய அவசியம் உங்களுக்கு வேண்டாம்.

5. எவனையும் போற்றி வணங்க வேண்டாம். அதேபோல், எவனுக்கும் அஞ்ச வேண்டாம். உங்களுக்கு நீங்கள் அடங்கி நடந்தாலே போதும்.

- இப்படி, புரட்சிக்கரமான கருத்துக்களையும் கூறி, அன்றைய அடக்கு முறைகளுக்கு ஆளான இளைஞர்களிடம் சுதந்திர வேட்கையை உண்டாக்கினார் வைகுண்டர்.

மேலும், “வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு உடனே கூலி கொடு. உரிய கூலி கொடுக்காமல் ஏமாற்றினால் இறைவன் உன்னை மன்னிக்க மாட்டான்...” என்று அன்றைய முதலாளித்துவ ஆதிக்கத்தையும் சாடினார்.

1. “இனி நீ அடிமை கிடையாது. ஆதிக்க ஜாதியினருக்கு பயந்து கால் முட்டிக்கு மேலே வேஷ்டி கட்ட வேண்டிய அவசியம் இல்லை. பூமியை முத்தமிடும் அளவுக்கு நீ வேஷ்டி கட்டலாம். கை இடுக்கில் துண்டைச் சொருகி வைத்து குனிந்து நின்ற நீ இனி முதல் நெஞ்சம் நிமிரலாம். அந்தத் துண்டை உன் தலையில் தலைப்பாகையாகக் கட்டு... ஆதிக்க ஜாதியினர் வணங்கும் கோவில்களில்தான் இறைவன் இருக்கிறான் என்று தப்பு கணக்கு போடாதே. உனக்குள்ளேயே உள்ள இறைவனை நான் சுட்டிக்காட்டும் கோவிலில் வழிபடு. அந்தக் கோவிலில் உங்கள் சக்தியை நீங்களே தரிசியுங்கள் (திருநாமமும், அதன் பின்னணியில் கண்ணாடியும் கொண்ட இந்த வழிபாட்டு முறைதான் இன்றும் அய்யா வழி தர்மபதிகளில் பின்பற்றப்படுகிறது).

2. இன்றுமுதல் நீங்கள் புதிய மனிதராகிவிட்டீர்கள். உங்களுக்குள் ஜாதி, மத வேறுபாடுகள் எல்லாம் வேண்டாம். முத்திரிக் கிணற்றில் எல்லோரும் ஒன்றாக நீரெடுத்து அருந்துங்கள்... ஆதிக்க ஜாதியினருக்கு பயந்து செருப்பு அணிவதையே மறந்து போன நீங்கள், இனி யாருக்கும் அஞ்சாமல் செருப்பு அணியுங்கள். குடையும் எல்லோருக்கும் உரியதுதான். வெயிலில் செல்லும் போதும் அதை பிடித்துச் செல்லுங்கள். எல்லா ஊர்களும் நமது ஊரே. நீங்கள் எங்கே சென்றாலும் தைரியமாக சுதந்திர உணர்வுடன் செல்லுங்கள்.

3. ஆண்களைப் போல் பெண்களும் இன்று முதல் சுதந்திரம் பெற்றுவிட்டார்கள். என்னைப் பார்க்க வரும் பெண்கள் கண்டிப்பாக தோளுக்குச் சீலை அணிந்து மார்பை மறைத்தே வரவேண்டும். எல்லா சுதந்திரமும் பெண்களுக்கு உண்டு.

4. மனிதப் படைப்பில் உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் கிடையாது. எல்லோரும் இறைவனின் படைப்புகளே! இவர்களிடம் வேறுபாட்டை ஏற்படுத்துபவர்களை துரத்தியடிக்க வேண்டும்...”

- இப்படி, பல்வேறு சுதந்திரக் கொள்கைகளை அடக்கி ஆளப்பட்டவர்களுக்காக வகுத்துக் கொடுத்தார் அய்யா வைகுண்டர். அவரது இந்த உபதேசங்கள் 18 ஜாதியினரின் சிந்தையை தூண்டிவிட்டது. ஆதிக்க ஜாதியினரைப் பார்த்துக் குனிந்து குனிந்து பழக்கப்பட்டு, கூன் விழுந்த முதுகு ஆகிவிட்ட இளைஞர்கள் முதன் முறையாக நெஞ்சம் நிமிர்ந்தார்கள்.



“கடைசி வரையிலும் நம் வாழ்க்கை இப்படித்தானா? நமது மகளும் இதே வேதனைகளை அனுபவிக்க வேண்டுமா?” என்று துடித்த பெண்கள் மனதில் தைரியம் பிறந்தது.

"குகையாளப் பிறந்தவனே...
எழுந்திரடா என் குழந்தாய்
அதிகமுள்ள நீசனும் தான்
மற்பிடித்து அடிக்கிறானே...
படையெடுக்க வா மகனே...
பாருலகம் சுட்டழிக்க
வரிசை பெற்ற நீ மகனே
மான மறுக்கம் பொறுக்கலையோ..."

- என்று, வைகுண்டர் ஊட்டிய புரட்சிப்பால் பற்றி குறிப்பிடுகிறது, அகிலத்திரட்டு.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/spiritual/serial/p1j.html


  2021
  2020
  2019
  2018
  2017

வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License