தீராநதி
பெண்ணே..! பேரழகே..!
இயற்கையின் பேரானந்தமே
விண்ணில் பூத்தத் தாமரையே
கவிஞனின் காதலியே
காதல் பேசும் கிளியே- உன்
கார்மேகக் கூந்தல் வீசும்
மல்லிகை மணமதில்
கரைந்தே போனேனடி!
சங்கப் புலவனின் கவிதையே
மழைத்துளிகள் வரைந்த வானவில்லே
விரல்களேங்கும் செங்காந்தள் மலரே
தேனிக்கள் தேடும் செவ்விதழே -உன்
செவ்விதழ் தீட்டிய ஓவியத்தில்
சிக்கிக் கொண்டவன் நானடி!
முனிவன் காத்த மாங்கனியே
அதியனின் நெல்லிக்கனியே
வீசும் பொதிகைத் தென்றலே
மயக்கும் மஞ்சள் நிற மானே
தமிழ்ப் பேசும் அணங்கே - என்
பசிதீர்க்கும் தீராநதி - நீதானடி!
- முனைவர் கு. சிதம்பரம், சென்னை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.