Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
எங்களைப் பற்றி | படைப்புகள் | இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!! | Font Problem |   | 
muthukamalam

முத்து: 09 கமலம்: 11
உள்ளடக்கம்
பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)

Alexa Rank

Verse
கவிதை

ஓர் உலகம்! ஓர் மொழி!


ஆழ் கடலில்
முக்குளித்து
பெற்றெடுத்த
முத்துக்களாம்
குழந்தைகள்
நாம்!

வேற்றுமைகள்
நிறைந்திருக்கும்
உலகினிலே
ஒற்றுமையை
உணர்த்திடுமாம்
நம்மொழி!

கோபங்கள்
குரோதங்கள்
பொறாமைகள்
அறியாத குழந்தைகள்
நாம்!

இளஞ் செடியில்
சிறு மொட்டாய்
கருவாகி
புது மலராய்
பூத்த பூக்கள்
நாம்!

சாதி அறியா
பேதம் அறியா
வெள்ளை மனம்
படைத்த
குழந்தைகள்
நாம்!

நாம் ஒன்றாய்
கை கோர்ப்போம்
ஒற்றுமையாய்
உருவாக்கிடுவோம்
ஓர் உலகம்!
ஓர் மொழி!

- ஆஷிகா, தெஹிவளை, இலங்கை.




இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/verse/p851.html


Change Language/மொழி மாற்றம் செய்திட

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...






தேனி. மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்