இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபத்தொன்றாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!       முத்துக்கமலம் மின்னிதழுக்கு அரசியல், திரைப்படம் தவிர்த்து அனைத்து வகையான படைப்புகளும் வரவேற்கப்படுகின்றன...!!!
Content
உள்ளடக்கம்




சுற்றுலா
பயணத் தொடர்

மத்தியக் கிழக்கு நோக்கி ஒரு பயணம்!

வகிதா நாசர்

39. நைல் நதி


எகிப்து என்றாலே நமக்கு என்ன தோன்றும்? பிரமிடுகளும் மம்மிகளும் நைல் நதியும்தான் வந்து மனக்கண்ணில் அலைமோதும்.

பிரமிடு பார்த்தாயிற்று.

அடுத்து நைல் நதி தானே நாங்கள் பார்க்க வேண்டிய விஷயம்?

சில ஆண்டுகளுக்கு முன் தினமலர் அந்துமணி எகிப்து சுற்றுலா சென்றார். அப்போது அவர் நைல் நதியில் மேற்கொண்ட உல்லாசப் படகு பயணத்தைப் பற்றி ஆர்னிகாவிடம் பகிர்ந்து கொண்டார்.

அதன் பொருட்டு ஆர்னிகாவுக்கு நைல் நதி மீதான காதல் தீவிரமானது.

எகிப்தின் கொடை நைல் நதி. பண்டைமொழியில் நைல் நதியை ‘இடுரு’ என அழைப்பர். இந்த வார்த்தை செமத்திய மொழியின் நகல்.

நைல் நதி உலகின் மிக நீளமான நதி. இது வடகிழக்கு ஆப்பிரிக்காவில் பாய்கிறது. நைல் நதியின் நீளம் 6650 கிமீலிருந்து 6853 கிமீ.

அகலம் 3 கிமீ. ஆழம் 36 அடி. உலகின் ஆழமான நதி காங்கோ நதி தான். ஆழம் 720 அடி.

தான்சானியா, உகாண்டா, ருவாண்டா, புருண்டி, காங்கோ, கென்யா, எதியோப்பியா, எரித்திரியா, தெற்கு சூடான், சூடான், எகிப்து என்று நைல் நதி 11 நாடுகளில் பாய்கிறது.

நைல் நதியின் வடக்குப் பகுதி சகாரா பாலைவனம் வழி பாய்கிறது. நைல் நதி எகிப்து வழியாக மத்தியத் தரைக்கடலில் கலக்கிறது.

நைல் நதி 5 மில்லியன் வருடங்கள் பழைமையானது. நைல் நதியின் வடிநில பரப்பு 3254555 சதுர கிமீ.

நைல் நதி வெள்ளை நைல் நீல நைல் நதிகளென இரண்டாகப் பிரிந்து சூடான் தலைநகர் கார்ட்டூமில் இணைகின்றன.

நைல் நதியின் கழிமுகம் உலகின் மிகப்பெரிய கழிமுகம்.

கெய்ரோவில் தொடங்கி மத்தியத்தரைக் கடலில் முடிகிறது.


இந்த கழிமுகத்திற்கு வில் வடிவம். நீளம் கிழக்கு மேற்காக 240 கிமீ வடக்கு தெற்காக 160 கிமீ. நைல்நதியை நம்பி 65000 மீனவர்களும் மூன்று இலட்சம் குடும்பங்களும் வாழ்கின்றன.

லக்ஸர் - அஸ்வானுக்கு இடையே 350 சொகுசு கப்பல்கள் இயங்குகின்றன.

ஆயிரக்கணக்கான தஹாபியா படகுகள் உள்ளன. இவ்வகைப் படகுகள் பாரம்பரிய மற்றும் ஆடம்பர மரப்படகுகள். எகிப்தை ஆண்ட மன்னர்களும் பிரபுக்களும் இவ்வகைப் பாய்மரப் படகுகளைப் பயன்படுத்தினர்.

ஆயிரக்கணக்கான பெலுக்கா படகுகள் உள்ளன. இவ்வகைப் படகுகளில் இரண்டு பெரிய முக்கோண வடிவ பாய் மரங்கள் பொருத்தப்பட்டிருக்கும்.

இவை காற்றின் வேகத்தை நம்பியே இயங்குகின்றன. இன்ஜின் கிடையாது.

நைல் பெர்ச், நைல் திலாப்பியா, கெளுத்தி, நைல் கெண்டை, ஆப்பிரிக்கப் புலி மீன், மண் மீன், யானை மூக்கு மீன், நுரையீரல் மீன், மின்சாரக் கெளுத்தி என்று மொத்தம் நைல் நதியில் 128 வகை மீன்கள் உள்ளன.


நைல் நதி நீரைப் பகிர்ந்து கொள்வதில் உகாண்டா, சூடான், எதியோப்பியா, கென்யா நாடுகளுக்கு இடையே சண்டையும் சச்சரவும் நிலவுகின்றன.

போட்டி பொறாமை இல்லாத நதிநீர் பங்கீடு ஏது?

முகமது காரை கொண்டு வந்து நைல் நதியின் குறும் கப்பலுக்கு அருகே நிறுத்தினார்.

“நிகழ்ச்சி முடிந்ததும் வாட்ஸ்அப் கால் பண்ணுங்கள். வந்து உங்களை பிக்கப் பண்ணிக் கொள்கிறேன்!” சமிக்ஞையில் பேசினார் எகிப்தின் அம்ஜத்கான்.

தலையாட்டியடி அந்தக் கப்பலுக்குள் நடந்தோம். கப்பல் முழுக்க மின்பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

தூரத்தில் இசை முழங்கிக் கொண்டிருந்தது.

ஜோடி ஜோடியாக காஸ்மோ சமூக ஆண்களும் பெண்களும் கப்பலுக்குள் பிரவேசித்தனர். பலர் குழந்தைகளுடன் வந்திருந்தனர்.

ஆர்னிகாவின் பக்கெட் லிஸ்ட்டில் பெல்லி டான்ஸ் பார்ப்பதும் அதிமுக்கியமான ஒன்று.

ஆர்னிகா பார்த்த ‘ப்ரம் ருஷ்யா வித் லவ்’, ‘தி மேன் வித் கோல்டன் கன்’, ‘தி ஸ்பை ஹு லவ்டு மீ’ ஜேம்ஸ்பான்ட் படங்களில் பெல்லி டான்ஸ் பார்த்திருக்கிறார்.

கிமு 1400-களில் பண்டைய எகிப்தில் பெல்லி டான்ஸ் இருந்ததாக கல்லறை ஓவியங்கள் தெரிவிக்கின்றன.


கிரேக்க ரோமன் எழுத்தாளர்கள் ஹாதோர் தெய்வத்திற்காக சடங்கு முறையில் பெல்லி நடனம் ஆடப்பட்டதாக எழுதியுள்ளனர்.

18 மற்றும் 19ஆம் நூற்றாண்டுகளில் நாடோடி நடன மங்கையர் ‘கவாஸி’ எனும் நடனத்தை ஆடியுள்ளனர். அதில் பெல்லி டான்ஸின் சாயல் உள்ளது.

கிபி 1893ல் பிரஞ்சு வார்த்தை ‘டான்ஸே டு வென்த்ரே’ யிலிருந்து பெல்லி டான்ஸ் வார்த்தை வடிவமைக்கப்பட்டது.

பெல்லி டான்ஸ் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவின் ஆழமான கலாச்சார வேர்களைக் கொண்ட ஒரு பாரம்பரிய மற்றும் நவீன நடன வடிவமாகும்.

அரபு நாடுகளில் பெல்லி டான்ஸ் மிக பிரபலம்.

இடுப்பு, வயிறு மற்றும் உடல் பகுதியின் அசைவுகளை அடிப்படையாகக் கொண்டது பெல்லி டான்ஸ்.

இடுப்பு வட்டங்கள் இடுப்பு நடுக்கம் போன்ற நுணுக்கமான அசைவுகள் இவ்வகை நடனத்தில் உண்டு.

இவ்வகை நடனத்தால் உடல் தசைகளுக்கு வலிமை, உடல் எடை குறைப்பு, சீரான வயிற்றுப்பகுதி அமைகிறது.

தட்டல், மோதுகை, நீர்மமான நடன அசைவு, நரியாட்டம், நடுக்கம், அதிர்வு பெல்லி நடனத்தில் உண்டு.

பெல்லி நடன மங்கையர் ‘பெட்லா’ எனப்படும். டூபீஸ் காஸ்ட்யூம் அணிவர். பெல்லி நடன மங்கையர் மேலுடலை முழுமையாக மூடி வயிற்றுப் பகுதியை மெல்லிய துணியால் மறைக்க வேண்டும் என எகிப்தியச் சட்டம் 430 கூறுகிறது.


பிரபலமான பெல்லி டான்ஸ் மங்கையரின் பட்டியலை பார்ப்போமா?

* நைலா அடிஸ் ( Nejla Ates)

* ஸாமியா காமல் (Samia Gamal)

* நைமா அகேப் (Naima Akef)

* நஸ்ரின் டோப்கபி (Nasrin Topkapi)

* பாடியா மஸாப்னி (Badia Masabni)

* தலிலா (Dalilah)

* டிடெம் கினாலி (Didem Kinali)

* டினா தலத் (Dina Talaat)

* பிபி அப்தோ (Fifi Abdou)

* லைலா தாஜ் (Lahla Taj)

* ஓஸெல் துர்க்பாஸ் (Ozal Turkbas)

* நாடியா காமல் ( Nadia Gamal)

* மேயட் கார்ஸியா (Mayte Garcia)

* நக்வா பௌவத் (Nagwa Fouad)

* சீமா எல்டிச் (Sema Yildiz)

* ஷாகரி (Shakvia)

* ஸெரினா வில்சன் (Serina wlsin)

* ஸோகைர் ஸாகி (Sokeir zaki)

* ரண்டா காமல் (Randa Kamal)

* தாஹியா கரியோகா (Takeyya Kariokka)

* ஜீனத் ஆல்வி (Zeinat alwi)

அற்புதமான கடல் உணவு. மனதை மயக்கும் இசை. உடுக்கை அடிக்கும் நடனம். வந்தவர்களில் சிலர் தங்கள் குழந்தைகளுக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினர்.

நடனங்களில் துளி ஆபாசமோ லஜ்ஜையோ இல்லை.

ஆர்னிகா முகத்தில் பரவசம். இசைக்கும் நடனத்திற்கும் மொழிகள் ஏது? பாடகர் பாடிய பாடல் வரிகள் புரியவில்லை. அதனால் என்ன? காதுகளில் தேன் பாய்கிறதே?

ஆங்கிலத்தில் Connisseur என்கிற வார்த்தை உண்டு. அதற்குப் பொருத்தமானவர் ஆர்னிகா. கலை, நல்ல உணவு, இசை முதலியவற்றைப் பற்றி பெருமளவில் அறிந்தவர் ஆர்னிகா. அவரது குருநாதர் அந்துமணியிடமிருந்து இரவல் பெற்ற ரசனை இது.

இரண்டு மணி நேர நடனத்திற்குப் பிறகு அறைக்குத் திரும்பினோம். வயிறும் ஆன்மாவும் நிறைந்திருந்தது.

(பயணிப்போம்...!)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/tourist/serial/serial1/p39.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                       


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License