கனவுச் செய்தி (கண்ட கனவு) |
கனவின் பலன் |
| கரி, உமி, சாம்பலை நோயாளி காணல் |
நோய் நீங்கும் |
| தான் கப்பலிலிருக்க நெடுந்தொலைவில் தீபம் காணல் |
துன்பம் அனைத்தும் நீங்கும் |
| தீபம் நன்றாக எரியக் காணல் |
நலம். அனைத்தும் நன்றாக நடக்கும் |
| தீபம் மயங்கி எரியக் காணல் |
நோய் வந்து சேரும் |
| தீபம், தீவட்டியைப் பிடித்திருக்கக் காணல் |
ஆபத்து நீங்கும், உறவினர் சேர்க்கை உண்டாகும் |
| தீபம், தீவட்டியை மற்றவன் பிடித்திருக்கக் காணல் |
தனக்குத் தீமை செய்பவன் கெடுவான் |
| தீபம், தீவட்டியை மற்றவன் பிடித்திருக்க மங்கி எரியக் காணல் |
தனக்குத் தீமை அதிகரிக்கும் |
| தீபம், ஒளி பிரகாசமாகக் காணல் |
குழந்தைப்பேறு உண்டாகும். புகழ்பெற்ற புதல்வன் / புதல்வி பிறப்பான் |
| ஒரு தீபத்தைத் தூண்ட, அது பல முறை குளிர்தலைக் காணல் |
புத்திர சோகம், மிக்க துன்பம் |
| ஒரு சபையில் தான் தீபத்துடன் செல்லல் |
புதியவை நிறுவுதல் நடக்கும் |
| வீடு, புகை இன்றி எரியக் காணல் |
பெரும் இலாபம் உண்டாகும் |
| வீடு, புகையுடன் எரியக் காணல் |
பெரும் தீமை உண்டாகும் |
| மடைப்பள்ளி எரியக் காணல் |
சமையல் செய்பவருக்கு நோய் உண்டாகும் |
| மேற்கூரை எரியக் காணல் |
திருடர் பயம், நண்பர் மரணம் உண்டாகும் |
| தெருவாசற்படி, கதவு முதலிய எரியக் காணல் |
தனக்கு அல்லது தன் தலைவனுக்குக் கேடு |
| வீட்டில் தலைவாயில் தாழ்ப்பாள் எரியக் காணல் |
உறவினர்களில் ஆண் எவராவது மரணமடைவர் |
| வீட்டில் உள் வாயில் எரியக் காணல் |
உறவினர்களில் பெண் எவராவது மரணமடைவர் |
| பணியிடம், பந்தல் போன்றவற்றில் தீப்பற்றக் காணல் |
புத்திரர் பெருமைக்குரியவராவர் |
| பணியிடம், பந்தல் போன்றவை எரியக் காணல் |
புத்திரர் தீயவராகிக் கெடுவர் |
| தன் உடை எரியக் காணல் |
நோயுண்டாகும் |
| தன் படுக்கை எரியக் காணல் |
நோயுண்டாகும் |
| தன் உடல் எரியக் காணல் |
நோயுண்டாகும் |
| தன் விரல்கள் எரியக் காணல் |
தான் செய்யும் செயல்கள் கேடாக முடியும் |
| தானியங்கள் இருக்குமிடம் எரியக் காணல் |
நட்டம் உண்டாகும் |
| தானியங்கள் இருக்குமிடம் எரியும் போது தானியம் தீப்பற்றாது தப்பக் காணல் |
பொருட்கள் சேர்க்கை உண்டாகும் |
| கனமழை, பெருமழை, காற்றுமழை காணல் |
தேசம் அழியும், உறவுகள் விலகும், நோய்களுண்டாகும் |
| சுழல் காற்று காணல் |
துன்பம் அனைத்தும் ஒழியும் |
| தான் காற்றாடி விடக் காணல் |
அதிர்ஷ்டம் உண்டாகும் |
| வானம் மேகமில்லாது நிர்மூலமாயிருக்கக் காணல் |
செயலில் லாபம் கிடைக்கும் |
| வானம் மேகத்துடனும், கருமையாகவும் காணல் |
ஆபத்து வரும் |