கனவுச் செய்தி (கண்ட கனவு) |
கனவின் பலன் |
ஆகாயம் கருமையாகக் தோன்றி, ஆங்காங்குச் சிறிய வெண் மேகங்கள் காணல் |
ஆபத்து வந்து ஒழியும் |
| ஆகாயம் ஆங்காங்குச் செவ்வானமிட்டிருக்கக் காணல் |
நோய் தோன்றும், நட்டம் ஏற்படும், திருமணம் விரும்பியவர்க்குத் திருமணம் நடக்கும் |
மின்னலால் கண்கள் தெரித்துப் போனது போலவும், இடி இடித்தது போலவும், இடி விழுந்ததால் தனக்கேனும் பிறர்க்கேனும் அபாயம் நேரிட்டது போலவும் காணல் |
ஆபத்து உண்டாம் |
இருளில் வழி தெரியாது, மின்னலால் வழியறியாது முள் முதலியவற்றால் துன்பமுண்டாய்த் தப்பினது போலவும், இடி தன் மீது விழ வந்து தப்பினது போலவும் காணல் |
ஆபத்து ஒழியும். |
| இடி தன் தலைக்குத் தப்பி அருகில் விழக் காணல் |
தொலைதூரப் பயணம் நிகழும் |
| மழையில்லாமல் இடி, மின்னல்களைக் காணல் |
வணிகம் சிறக்கும், சுபம் |
| சூரியன் உதயமாய் மேல் எழக் காணல் |
எடுத்த செயலில் வெற்றி கிட்டும் |
| ஆகாய நடுவில் சூரியன் இருக்கக் காணல் |
எடுத்த செயலில் வெற்றி |
| ஆகாய நடுவில் சூரியன் மறையக் காணல் |
ஆபத்து, நட்டம், பெண்களாயிருப்பின் பெண் மகவைப் பெறுவர் |
| சூரியனை மேகம் மறைக்கக் காணல் |
கேடுகள் வரும் |
| தம் வீட்டின் மீதுசூரியன் வரக் காணல் |
வீடு தீப்பற்றும் |
| சூரிய கிரகணம் படக் காணல் |
நோய் வரும் |
| தன் வழி முழுதும் வெயில் எரிக்கக் காணல் |
பொருள் இலாபம் |
| சூரியனைக் கிரகணம் பிடிக்கக் காணல் |
தீமை, உறவினர் மரணம் பெண்கள் காணின் நலமில்லாத் புத்திரப் பேறுண்டாகும். |
| குற்றவாளி தன்னைச் சூரியக் கிரகணம் மூடியதாகக் காணல் |
தண்டனையிலிருந்து விடுதலையடைவான் |
| சந்திரன் பால் போல் பிரகாசிக்கக் காணல் |
சாதகமாக நடக்கும். பொருள் விருத்தியடையும் |
| சந்திரனைக் கிரகணம், மப்பு மறைத்தது போலக் காணல் |
வீட்டுப் பெண்களில் ஒருவருக்கு நோய் உண்டாகும், திருடர் பயம் உண்டு |
| சந்திரன் மனிதமுகம் போல் பிரகாசித்திருக்கக் காணல் |
குழந்தைப்பேறுண்டு. பொருள் லாபம் |
| முழு நிலவைக் காணல் |
குழந்தைப்பேறு கிட்டும் |
| ஒருவன் தலை முழுதும் சந்திரன் பிரகாசிக்கக் காணல் |
வெற்றி கிட்டும் |
| நட்சத்திரங்கள் செம்மையாகப் பிரகாசிக்கக் காணல் |
வளர்ச்சி ஏற்படும் |
| நட்சத்திரங்கள் மேகத்தால் மறைந்து ஒன்றன் பின் ஒன்றாகக் காணல் |
மிகுதியான துன்பம் ஏற்படும் |
| வானத்தில் நட்சத்திரங்கள் உண்டோ இல்லையோ எனக் காணல் |
வறுமை, நோய் உண்டாகும் |
| குற்றவாளிகள் வானத்தில் நட்சத்திரங்கள் காணல் |
பயம் ஒழியும் |
| நட்சத்திரங்கள் வீட்டின் மீது விழக் காணல் |
வீட்டை விட்டாவது வெளியேறிவிடுவர் |
| ஒரு வீட்டில் நட்சத்திரங்கள் பிரகாசிக்கக் காணல் |
அவ்வீட்டினருக்குத் தீமை ஏற்படும் |
| தூம கேதுக்களைக் காணல் |
ஆபத்து, நோய் வரும் |
| இந்திரதனுசு கிழக்கில் காணல் |
வறுமையாளர்க்கு நலம், செல்வமுடையவர்க்குத் தீங்கு |
| இந்திரதனுசு மேற்கில் காணல் |
செல்வாக்குடையவர்க்கு நலம், நலம், வறுமையுடையவர்க்குத் தீங்கு |
| இந்திரதனுசு தம் தலை மீது போட்டிருக்கக் காணல் |
வறுமையுடையவர்க்கு பொருள் இலாபம், செல்வமுடையவர்க்கு வறுமை வரும் |