கனவுச் செய்தி (கண்ட கனவு) |
கனவின் பலன் |
| இறந்தவருடன் பேசினதாகக் காணல் |
வெற்றி கிடைக்கும் |
| பிசாசுகளைக் காணல் |
செயலில் குறைபாடு வரும் |
| கீழ் சாதியில் பிறந்ததாக் காணல் |
இலாபம் |
| நோயாளியை காணல் |
நோய் வரும் |
| தான் பார்வையற்றவராகக் காணல் |
ஏமாற்றம், மனைவியால் அவப்பெயர் வரும் |
| தான் காது கேளாதவராகக் காணல் |
பிறரால் ஏமாற்றப்படுவீர், மோசம், மனைவி தடம்புரள்வாள் |
| தன்னைப் பித்தனாகவும், பித்தனிடத்திலிருப்பதாகவும் காணல் |
சம்பத்து |
| தன்னைக் கருமியாகவும், அவர்களிடம் தொடர்புடையவர்களாகவும் காணல் |
தீமை |
| தன்னைத் தூக்குவதாகக் காணல் |
செயல் வெற்றி |
| தன் கால் முறிந்ததாகக் காணல் |
எண்ணிய செயல் முடியாது |
| பொய்க்கால் கட்டிக்கொண்டு நடப்பதாகக் காணல் |
நோய் வரும் |
| தன்னைத் திகம்மபரனாகக் காணல் |
நோய், வறுமை வரும் |
| தன் கைகள் முன்னிலும் அதிகப் பருமனுடையதாகக் காணல் |
செல்வம் சேரும் |
| தன் கைகள் ஒடிந்ததாக அல்லது எரிந்ததாகக் காணல் |
ஏழையாவான் |
| பெண் தன் கைகள் ஒடிந்ததாக அல்லது எரிந்ததாகக் காணல் |
கணவன் அல்லது குழந்தை இறப்பு |
| வலது கையால் வேலை செய்வதாகக் காணல் |
அதிர்ஷ்டம் வரும் |
| கைநிறைய மயிர் நிறைந்திருப்பதாகக் காணல் |
துன்பம், சிறை செல்ல நேரிடலாம் |
| தனக்குக் கொம்புகள் முளைத்ததாகக் காணல் |
பொருள் இலாபம், பணி இலாபம் |
| பிறருக்குக் கொம்புகள் முளைத்ததாகக் காணல் |
அவர் நோய்வாய்ப்படுவார் |
| தன் தலை பெரிதாயும் உயர்வாயும் இருக்கக் காணல் |
நற்பெயர் பெறுவான் |
| பிறர் தன் தலையை உடைத்ததாகக் காணல் |
மனைவி, பிள்ளைகளுக்குப் பெரும் துன்பம் |
| விலங்குகளின் தலையைத் தான் உடைத்ததாகக் காணல் |
வெற்றி கிட்டும் |
| சிங்கம், புலி முதலியவைகின் தலை தனக்கிருப்பதாகக் காணல் |
வெற்றி |
| குதிரை, கழுதை, நாய் முதலியவற்றின் தலை தனக்குள்ளதாகக் காணல் |
அடிமை |
| தலை முழுகக் காணல் |
ஆபத்து தீரும் |
| தன் மூக்கில் இரத்தம் வடியக் காணல் |
நட்டம் |
| கரு கரைந்ததாகக் காணல் |
துன்பம் தொலையும் |
| முகம் வாடியிருந்ததாகக் காணல் |
பொருள் இலாபம் |
| பற்கள் ஆடுவதாகக் காணல் |
உறவினர் மரணம் |
| வாந்தி அல்லது பேதியானதாகக் காணல் |
வறுமையிலிருப்பவர்களுக்குச் செல்வமும், செல்வந்தர்களுக்கு வறுமையும் வந்து சேரும் |