கனவுச் செய்தி (கண்ட கனவு) |
கனவின் பலன் |
| குதிரையைக் காணல் |
உறவினர் பார்வை, பயணம் |
| குதிரையிலிருந்து வீழ்ந்ததாகக் காணல் |
ஆபத்து |
| குதிரையில் சவாரி செய்வதாகக் காணல் |
சுக வாழ்க்கை |
| கழுதையைக் காணல் |
தன் தீமையொழியும் |
| கழுதை தன்னைத் துரத்துவதாகக் காணல் |
பகைவரால் கெடுதி வந்து நீங்கும் |
| கழுதை மேல் ஏறுவதாகக் காணல் |
மரண சூசகம் |
| யானையைக் காணல் |
செயல் வெற்றி |
| சிங்கம், புலி முதலிய கொடிய மிருகங்களைக் காணல் |
விரோதங்கள் வரும் |
| பறவைகள் பறப்பதைக் காணல் |
செல்வந்தனுக்கு வறுமையும், வறுமையாளனுக்குச் செல்வமும் வரும் |
பறவைகள் கூண்டும், அதில் குஞ்சுகள் முட்டைகள் தனக்குக் கிடைப்பதாகக் காணல் |
சுபம் |
| பறவாக் குஞ்சுகளுள்ள கூண்டு அகப்பட்டதாகக் காணல் |
வழக்கு நேர்ந்து துன்பமுண்டாகும் |
| அதிகமான முட்டைகளைக் காணல் |
பொருள் சேர்க்கை |
| முட்டைகளைத் தான் தின்பதாகக் காணல் |
வறுமை வரும் |
| காக்கை பறக்கவும் கூவவும் காணல் |
தீமை |
| காக்கை தலை மீது பறக்கக் காணல் |
ஆயுள் குறைவு |
| சிட்டுகள், கொக்குகள் முதலியவற்றைக் காணல் |
நலம் |
சிட்டுகள், கொக்குகள் முதலியவை ஒன்றோடொன்று சண்டையிடக் காணல் |
நலம் |
| புறாக்களைக் காணல் |
கணவன் மனைவியாலும், மனைவி கணவனாலும்வருத்தமடைவர் |
| உறவினர்களைக் காணல் |
வணிகம் இலாபமடையும் |
| மயில்களைக் காணல் |
நன்மை உண்டாகும் |
| கழுகைக் காணல் |
சோர பயம் |
| கருடனைக் காணல் |
செயல் வெற்றி |
| ஆந்தை, கோட்டான்களைக் காணல் |
நோய், சிறையுண்டாகும் |
| பசி தீர்ந்ததாகக் காணல் |
மன நிறைவுண்டாகும் |
| தான் சாப்பிடுவதாகக் காணல் |
குடும்பத்தில் சண்டை வரும் |
| உறவினர்களுடன் சேர்ந்து உண்பதாகக் காணல் |
திருமணம் |
| தான் தண்ணீர் உண்டதாகக் காணல் |
வளர்ச்சி உண்டாகும் |
| கள்ளு, சாராயம், இரத்தம் உண்டதாகக் காணல் |
பொருள் இலாபம் |
| சாப்பிடுவதைக் காணல் |
செயல் வெற்றி |
| தான் சமைப்பதாகக் காணல் |
அடிமை வேலை செய்ய நேரிடும் |