கனவுச் செய்தி (கண்ட கனவு) |
கனவின் பலன் |
| கூழ் உண்ணக் காணல் |
மகப்பேறு அதிகரிக்கும் |
| வெண்ணெய்யைக் காணல் |
பணியில் இலாபமுண்டாகும் |
| பாயாசத்தைக் காணல் |
இலாபம் |
| பால் மற்றும் பால் பொருட்களைக் காணல் |
நன்மை |
| காய்கறிகளைக் காணல் |
வெற்றி, பொருள் இலாபம், நலம் உண்டாகும் |
| இலைக் கறி முதலிய தின்றதாகக் காணல் |
நோய் நீங்கும் |
| தேன் உள்ளிட்ட இனிப்பு வகைகளைத் தின்றதாகக் காணல் |
வறுமை வரும் |
| வேம்பு உள்ளிட்ட கசப்புக் காய்களைத் தின்றதாகக் காணல் |
தீமை உண்டாகும் |
| காரமுள்ள காய்கள் முதலியன தின்றதாகக் காணல் |
இரகசியங்கள் வெளிப்படும் |
| புளியைத் தின்றதாகக் காணல் |
உறவினர் சந்திப்பு |
| உப்பு, தயிர் முதலியவைகளைத் தின்றதாகக் காணல் |
தீமை |
| கோதுமை, நெல், சோளம் முதலியவைகளைக் காணல் |
பொருள் இலாபம் |
| மருந்துகளைக் காணல் |
நோயில்லாதவருக்கு நோயுண்டாகும், நோயுடையவர்களுக்கும் நோய் நீங்கும் |
| தாம்பூலம் காணல் |
பொருள் இலாபம் |
| தாம்பூலம் போட்டுக் கொள்வதாகக் காணல் |
விரோதம் |
| கடை வீதியைக் காணல் |
நலம் |
| கடை வீதிக்குக் குதிரையில் செல்வதாகக் காணல் |
தீமை |
| கோயிலைக் காணல் |
சண்டை வரும் |
| கோயிலில் இறைவனை வழிபடுவதாகக் காணல் |
அனைத்தும் கிடைக்கும் |
| கோயிலில் பஜனை, நாடகம் காணல் |
சுக வாழ்க்கை |
| மலர்கள், அவைகளைச் சூடிக் கொள்ளக் காணல் |
திருவிழா மகிழ்ச்சி, திருமணம் உண்டாம் |
| கையில் வைத்திருந்த பூ வாடக் காணல் |
தீமை |
| பழத்துடனான மரத்தைக் காணல் |
பொருள் இலாபம், மக்கட்பேறு அதிகரிப்பு |
| காயுடனான மரத்தைக் காணல் |
செயலில் தாமதம் |
| முத்து, ரத்தினத்தைக் காணல் |
நலம் |
| முத்து, ரத்தினம் கையிலிருந்து நீங்கக் காணல் |
தீமை |
| பொற்காசு காணல் |
சுபம் |
| வெள்ளியை காணல் |
எண்ணிய செயல் கெடும் |
| ஈயம் காணல் |
விவாதம் |
| இரும்பு காணல் |
வறுமை வரும் |