இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபத்தொன்றாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!       முத்துக்கமலம் மின்னிதழுக்கு அரசியல், திரைப்படம் தவிர்த்து அனைத்து வகையான படைப்புகளும் வரவேற்கப்படுகின்றன...!!!
Content
உள்ளடக்கம்




ஜோதிடம்
பொதுத் தகவல்கள்

வீடு கட்டும் போது கவனிக்க வேண்டியவை

உ. தாமரைச்செல்வி


வீடு கட்டும் போது கீழ்க்காணும் சில குறிப்புகளைக் கவனத்தில் கொள்ள வேண்டுமென்று திருக்கணிதப் பஞ்சாங்கம் குறிப்பிடுகிறது. அவை;

1. வாசல்கால் நிலை வைக்காமலும், தரை பூசாமலும், சுவரில் சுண்ணாம்பு அடிக்காமலும், மனைவி கர்ப்பமாக இருக்கும் காலத்திலும், இயற்கை உத்பாதம் நடக்கையிலும், வேதம் சொல்லாமலும். திருமுறை ஓதாமலும், வாஸ்து ஹோமம் செய்யாமலும் புதிய வீட்டில் கிரஹப் பிரவேசம் செய்யக் கூடாது. கிருகாரம்ப காலத்தில் இராசவாசல் மண் அல்லது புண்ணிய ஷேத்திர மண். மலைமண், ஆற்றுமண். புற்றுமண், நண்டுப் புற்றுமண், ஆனைக்கோட்டு மண். எருது கோட்டுமண். குளமண். கொழுமண். இவைகளைச் சமமாகக் கூட்டி பெட்டி செய்து, அடிப்பேழையில் பள்ளமாக்கி அதில் மாணிக்கம், வைடூர்யம், வைரம், நீலம். முத்து. புஷ்பராகம், மரகதம், கோமேதகம், பளிங்கு ஆகிய இரத்தினங்களை வைத்து மூடி தங்கத் தட்டில் வாஸ்து யந்திரம் போட்டு வாஸ்து பூஜையும். நவக்கிரக பூஜையும் செய்து யந்திரத்தைப் பழம்பாசியினாற் சுற்றி நிருதி அல்லது ஈசானத்தில் வைத்து அந்த இடத்தில் ஒரு மண்டல பூஜை செய்யவும்.

2. இயற்கை உத்பாதம் என்பது இடியுடன் கூடிய மழை காலம் மற்றும் புயல்காற்று நிலநடுக்கம் உண்டாகும் காலம் வானத்தில் வால் நட்சத்திரம் தோன்றும் காலம் போன்றவை. இவை விலக்க வேண்டும்.

3. கிழமைகளில் செவ்வாய், சனி. விலக்கத்தக்கவை. கிரஹப் பிரவேசம் செய்யும் வீட்டுத் தலைவனின் ராசிக்கு எட்டில் சந்திரன் இருக்கும் காலமும் விலக்கத்தக்கவை. மேலும் நல்ல நாளும் கோளும் அறியாமல் பிரவேசிக்கக் கூடாது.

4. முதலில் பசு செல்வதால் லட்சுமி தேவி சந்தோஷம் அடைகிறாள்.

5. அடுத்து தம்பதிகள் குல தெய்வ, இஷ்ட தெய்வப் படங்களுடன் பிரவேசிப்பதால் முன்னோர்களும் கிரக தேவதைகளும் பிரியமடைகின்றன.


6. சுமங்கலிப் பெண் இல்லத்தில் உள்ளே செல்வதால் மஹாலஷ்மி வாசம் உண்டாகிறது. (ஸ்வஸ்தி வசனம் வேத கோஷம்) இவை இரண்டாலும் அபசகுனங்கள் விலகுகிறது.

7. நண்பர்கள் அன்று விருந்து உண்பதால் அக்னி அருளும், வாஸ்து தோஷமும் நீங்குகிறது.

8. கூடுமானவரை பூஜை அறையும், கழிவறையும் பக்கத்தில் இல்லாமலும், சமையலறை கடந்து கழிவறை அடையாமலும் வாசலுக்கு நேர் கிணறு வைக்காமலும் முதலில் கட்டிய பிரதான வாயிலை மூடாமல் இருப்பதும் நல்லது.

9. வாயிற் பொருத்தம்

இடபம், மிதுனம், கர்க்கடகம், ராசியில் பிறந்தவர்களுக்கு கிழக்கு. வடக்கு வாயில் வீடும்

சிங்கம், கன்னி, துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு கிழக்கு, தெற்கு வாயில் வீடும்

விருச்சிகம், தனுசு, மகரம் ராசியில் பிறந்தவர்களுக்கு தெற்கு மேற்கு வாயில் வீடும்

கும்பம், மீனம், மேடம் இராசியில் பிறந்தவர்களுக்கு மேற்கு. வடக்கு வாயில் வீடும் உத்தமம்.

இராசிப் பொருத்தம், வாயிற் பொருத்தம் இரண்டும் பொருந்தில் உத்தமம். ஒன்று பொருந்தில் மத்திமம். இரண்டும் பொருந்தாவிடில் அதமம்.

10. வீட்டின் நிலப்பிரமாணம்

வீடு கட்டும் நிலம் ஆகக் குறைந்தது 80 முழ நீளமும், 78 முழ அகலமும் கொண்டதாக இருத்தல் வேண்டும். இப்பிரமாணத்துக்கு குறைந்தளவுள்ள நிலத்தில் வீடு கட்ட வேண்டி நேரிடின் நிலத்தின் அகலத்துக்குத்தக்க நீளத்தை அளந்து அவ்வளவு நிலத்தையும் புறம்பான காணியாக எல்லையிட்டு, அக்காணிக்குள் வீட்டு நிலம் வகுத்தல் நலம்.


11. வீட்டுக்கு வாயில் வகுத்தல்

மனையின் நீளத்தை 9 பாகமாகப் பகுத்து வலப்பாலில் 5 பாகமும், இடப்பாலில் 3 பாகமும் கழித்து மற்றொரு பாகமாக வாயில் வகுக்க வேண்டும்.

12. வீட்டுக்குத் தோஷமுள்ளவை

புதிதாகக் கட்டும் மனைக்கு கிழக்கு. தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு இத்திக்குகளிலே சமீபமாக வேறு வீடுகளிருப்பது தோஷம். இடையில் வழி இருப்பின் அதிக தோஷமல்ல. தன் வீட்டுக்குக் கிழக்கே இருக்கும் வீடு 87 முழத்திற்கும், தென்கிழக்கே, தெற்கே இருக்கும் வீடுகள் 73 முழத்திற்கும் தென்மேற்கே இருக்கும் வீடு 83. முழத்திற்கும் அப்பாலிருந்தால் தோஷமல்ல. வீட்டினுள் எதிருக்கெதிராய் ஒன்றையொன்று பார்க்கும்படி இரட்டைக் கூடங்கள் அமைக்கலாகாது. வீட்டின் பார்வையில் தூலங்களின் குத்தாயினும் மூலைக்குத்தாயினும் காணப்படுவது தோஷம்.

13. வீடு கட்டும் மாதங்கள்

சித்திரையில் வடக்கு வாயில் வீடும், வைகாசியில் வடக்குத் தெற்கு வாயில் வீடுகளும், ஆடியில் கிழக்கு வாயில் வீடும். ஆவணியில் கிழக்கு மேற்கு வாயில் வீடுகளும், ஐப்பசியில் தெற்கு வாயில் வீடும். கார்த்திகையில் தெற்கு வடக்கு வாயில் வீடுகளும், தையில் மேற்கு வாயில் வீடும், மாசியில் மேற்கு கிழக்கு வாயில் வீடுகளும், எழுந்திருப்பு முகூர்த்தத்தில் எல்லா வீடுகளும் கட்டத்தகும். ஆனி, புரட்டாதி. மார்கழி, பங்குளி மாதங்களில் வீடு கட்டலாகாது.


14. கிருகப்பிரவேசத்துக்கு வேண்டியவை

தீபம், விநாயகர், இலட்சுமி, சரஸ்வதி, படங்கள், பூரண கும்பம். புஷ்பமாலை, மஞ்சள், தாம்பூலம், பால், பழம், நைவேத்தியங்கள் உப்பு. நெல் முதலிய தானியங்கள், சுவர்ணம், வெள்ளி, நவரத்தினம், நலவஸ்திரம், ஆபரணம், இவைகளை மங்கல வாத்திய கோஷத்தோடு சுமங்கலிகள் கொண்டுவர வீட்டினுள் பிரவேசிக்கவும்.

15. வீடு கட்டுவதற்கு ஆகாத இடங்கள்

தெற்கு மேற்குத் தாழ்ந்த பூமி, முக்கோண வடிவான பூமி, சந்நியாசிகள். பேய் பிடித்தவர்கள், பேய் வித்தைக்காரர்கள், சண்டாளர் வசித்த இடங்கள். கோயிலிருந்த இடங்கள், மயானம், யுத்தஞ் செய்த இடம் முதலியன வீடு கட்டுவதற்கு ஆகாதவை. துலா. கோபுரம், அரசு, வன்னி, வில்வம் இவைகளின் நிழல் வீட்டிற்படலாகாது.

*****



இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/astrology/general/p175.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                       


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License