ராகு காலத்தை நினைவில் வைத்து கொள்ள;
“திண்டுக்கல் சந்தையிலே வெற்றிலை புகையிலை விற்கும் செட்டியும் ஞானியாவாள்"
என்ற வரியினை நினைவில் கொண்டால் போதும்.
இந்த வரியின் வார்த்தையின் முதல் எழுத்தைக் கொண்டு கணித்து விடலாம். எப்படி...?
திங்கள் - 7.30 முதல் 9.00 மணி வரை
சனி - 9.00 முதல் 10.30 மணி வரை
வெள்ளி - 10.30 முதல் 12.00 மணி வரை
புதன் - 12.00 முதல் 1.30 மணி வரை
வியாழன் - 1.30 முதல் 3.00 மணி வரை
செவ்வாய் - 3.00 முதல் 4.30 மணி வரை
ஞாயிறு - 4.30 முதல் 6.00 வரை
(வாக்கியப் பஞ்சாங்க நேரப்படி)
ராகு காலத்தின் தொடக்கத்தில் இருந்து முதல் 1/2 மணி நேரத்தைத் தலையான காலம் (தலை) என்றும், இரண்டாவது 1/2 மணி நேரத்தை மத்தியக் காலம் (வயிற்றுப் பகுதி) என்றும், மூன்றாவது 1/2 மணிநேரத்தைக் கடைசிப் பகுதி (வால் பகுதி) என்றும் பிரிக்கப்படுகிறது. இவற்றுள் மூன்றாம் பாதத்தின் பகுதி மிகவும் முக்கியம் வாய்ந்தது.
அதற்கு அமிர்தக் கடிகை என்று பெயர். இந்தக் காலமே வெற்றி தித்திக்கும் சிறந்த காலம். “அமிர்தம்” என்ற அருமருந்தினை அருந்தியவன் ஆயுளுக்கு எப்படி ஒரு குறையும் வராதோ, அதுபோல ராகு காலத்தில் துர்க்கைக்குச் செய்யும் பூஜைகள் புண்ணியத்தைப் பெருக்குவதுடன் உடனடியாகப் பலனும் அளிக்கின்றது.