* அன்றைய தினம் கரி நாளாக இருத்தல் கூடாது.
* திதியில் அட்டமி, நவமி திதிகளைத் தவிர்த்தல் வேண்டும்.
* யோகம் மரண யோக வேளையாக இல்லாமல் சித்த. அமிர்த யோகமாக இருத்தல் வேண்டும்.
* இராகு காலம், எமகண்ட நேரங்களாக இருக்கக் கூடாது.
* முக்கியமாக பிறந்த நட்சத்திரக்காரருக்கு அன்றைய தினம் சந்திராஷ்டம தினமாக இருத்தல் கூடாது.
முக்கியமாக, அக்கினி, சோர, ரோக, பஞ்சகங்களிருந்தால், திருமணம், சீமந்தம், புதுமனை குடிபோதல், பங்குத் தொழில், கம்பனி போன்றவை ஆரம்பித்தல் கூடாது.
அக்கினி பஞ்சகமாக இருப்பின், பஞ்சு, எரிபொருட்கள், நூல் துணி வகைகள் தொடர்புடையத் தொழில்கள் தொடங்கக் கூடாது.
இராஜ பஞ்சகத்தில் அரசு. வங்கி மற்றும் பொது நிதி நிறுவனங்கள். கடன் வாங்கி நடத்தும் தொழில் என்பன தொடங்கக் கூடாது.
நிஷ் பஞ்சகங்களாக இருப்பின், மிக்க சுபம் தரும்.