இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




Book Review
புத்தகப் பார்வை

சுகதேவ் நேர்காணல்கள்


தொக்குப்பு ஆசிரியர் சந்தியா நடராஜன்
பிரிவு நேர்காணல்கள்
பக்கங்கள் 134
பதிப்பு 2025
ISBN 978-81-991279-1-3
விலை ரூ. 160/-
பதிப்பகம் சந்தியா பதிப்பகம்
முகவரி புதிய எண்: 77, 53 ஆவது தெரு, 9 ஆவது அவென்யூ, அசோக்நகர், சென்னை -600083.
தொலைபேசி எண் 044-24896979
அலைபேசி எண் 9840952919

புத்தகப் பார்வை:


தினமணி நாளிதழில் பணியாற்றியதுடன், தினமணிக்கதிர் இதழின் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றிய ப. இளையபெருமாள் என்கிற இயற்பெயர் கொண்ட நண்பர் சுகதேவ், தினமணிக்கதிர் இதழில் எழுதி வந்த ‘நோட்டம்’ எனும் தலைப்பிலான கட்டுரைகள், தினமணி வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவை. நோட்டம் பகுதிக்காக அவர் எடுத்துக் கொண்ட தலைப்புகள் அனைத்தும் மிகவும் சிறப்பு மிக்கவை. அன்றும் இன்றும் என்றும் வாசிக்கத்தக்கவை. வாசகர்களின் மனநிலையை அறியாது, வாசகர்கள் புரிந்து கொள்ளாதபடி தங்களது திறன்களையெல்லாம் காட்டி எழுதிக் கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில், சுகதேவின் எழுத்துகள் அனைத்துத் தரப்பு வாசகர்களையும் கவரும் வகையில் எளிமையாகவும், பல்வேறு தகவல்களை உள்ளடக்கியதாகவும், படிப்பதற்குச் சுவையாகவும் அமைந்திருக்கும்.

சுகதேவின் எழுத்துகள், என்னைப் போன்ற தினமணி வாசகர்களுக்கு மிகவும் பிடித்தமானவை. ஒரு கட்டுரையைத் தொடங்கி, அதனைச் சுவையாக நகர்த்திக் கொண்டு சென்று, கடைசி வரை படித்து முடித்து விட வேண்டும் என்கிற ஆர்வத்தை ஏற்படுத்தும் வழியில் அவரது எழுத்துகள் அமைந்திருக்கும். அதற்கு அவரது நேர்காணல்களும் விதிவிலக்கல்ல. தினமணி நாளிதழில் இடம் பெறும் அவரது எழுத்துகளிலான கட்டுரைகளுக்கு மட்டுமின்றி நேர்காணலுக்கும் பல ரசிகர்கள் இருந்தனர்.

கேள்விகள் கேட்டுப் பதில்களைப் பெறும் ஓர் உரையாடல்தான் ‘நேர்காணல்’ என்று எளிதாகச் சொல்லிவிடலாம். நேர்காணல் என்பது அவ்வளவு எளிதானதல்ல. செய்தியாளர்களாக இருப்பவர்கள் பலர், நேர்காணலுக்குச் சென்று சில கேள்விகளைக் கேட்டுப் பதில்களைப் பெற்றுக் கொள்வதும், நேர்காணல் அளிப்பவர் சொல்லும் செய்திகளை மட்டும் குறித்துக் கொண்டு வந்து அதனை எழுதி வெளியிடுபவர்களாகவே இருக்கின்றனர். ஆனால் சிறந்த செய்தியாளர்கள், நேர்காணலுக்குத் தேர்வு செய்யப்பட்டவர் எத்துறையில் சிறப்பு பெற்றவர்? என்பதை அறிந்து, அத்துறையில் அவரது சிறப்புகளையெல்லாம் கேட்டுப் பெறுவதுடன், அத்துறை சார்ந்த பல்வேறு கருத்துகளையும் அவரிடம் கூடுதலாகக் கேட்டுப் பெற்று எழுதுவதுதான் அந்த நேர்காணலை மிகவும் சிறப்புக்குரியதாக்குகிறது. சுகதேவின் நேர்காணல்கள் அனைத்தும் சுவையானவை மட்டுமில்லை, பல்வேறு சிறப்புகளை வெளிக் கொண்டு வரும் தன்மை கொண்டவை.

தென்கச்சி சுவாமிநாதன், அருணா ராய், மாலா சந்திரா, வசந்தா கந்தசாமி, நீதிபதி பிரபா ஸ்ரீதேவன், சுதா நாராயணமூர்த்தி, அமர்த்தியா சென், ஏ.எம்.எம். அருணாசலம், மேட்லைன் ஆல்பிரைட், சுவாமி நித்யானந்த கிரி, ஷப்தர் ஹஸ்மி, அருந்ததி ராய், ஸ்டீபன் ஹாகிங், சுப்புடு, அனிதா ரத்னம் என்று புகழ்பெற்ற 15 பேர்களிடம் சுகதேவ் செய்த நேர்காணல்களை சந்தியா நடராசன் தொகுத்து, அவரது சந்தியா பதிப்பகத்தின் வழியாக நூலாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.


1970 ஆம் ஆண்டு முதல் 1977 ஆம் ஆண்டு வரை தென்கச்சி ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த நிலையில், அப்போதைய அரசியலில் முன்னிலையிலிருந்த எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க கட்சியிலிருந்து அழைப்பு வந்த போதும், அதனை நிராகரித்து விட்டு, தனக்குக் கிடைத்த அகில இந்திய வானொலி நிலையப் பணியைப் பெற்று, ‘இன்று ஒரு தகவல்’ மூலம் புகழ் பெற்ற தென்கச்சி சுவாமிநாதன் நேர்காணலில் அவர் சொன்ன பல தகவல்கள் சிறப்பாக இருக்கிறது.

26 ஆண்டுகள் சளைக்காத சமூகப் பணிகளுக்காக, ஆசியாவின் நோபல் பரிசு என்று அழைக்கப்படும் பிலிப்பைன்சின் மூன்றாவது அதிபராகப் பதவி வகித்த ரமோன் மகசேசே பெயரிலான விருதினைப் பெற்ற அருணா ராயின் சமூகப் பணிகள் பற்றி முழுமையாகச் சொல்லும் நேர்காணல் சிறப்பாக இருக்கிறது. இதே போன்று, கணினித் துறையில் பல்வேறு சிறப்புகளைப் பெற்ற ஜாவா டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் இயக்குநராகப் பணியாற்றிய மாலா சந்திராவின் வழியாக, இந்தியப் பெண்களின் நிலையையும், அவர்களது வாழ்க்கைப் போராட்டத்தையும் வெளிக்கொண்டு வந்த நேர்காணல் சிறப்பாக இருக்கிறது.

கணிதத்துறையில் சிறப்பாகப் பங்களிப்பு செய்த சென்னை, இந்தியத் தொழில்நுட்பக் கழகப் பேராசிரியர் வசந்தா கந்தசாமிக்கு வழங்கப்பெற்ற கேம்பிரிட்ஜ் பன்னாட்டு உயிர்வரைவியல் மையத்தின் சிறந்த பெண்மணி விருது குறித்த பெருமையைச் சொல்லி, இந்திய அரசின் அறிவியல் விருதுக்குத் தன்னைப் புறக்கணித்த அரசியல் குறித்துச் சொல்லும் நேர்காணல் பேராசிரியரின் வேதனையை வெளிப்படுத்தினாலும் சிறப்பாக இருக்கிறது. நீதித்துறையில் பணியாற்றும் நீதிபதிகள் அதிகம் பேசக்கூடாது, அவர்களது தீர்ப்புகளே அதிகம் பேசப்பட வேண்டுமென்று சொல்லும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் அவர்களது நேர்காணல் மிகச் சிறப்பாக இருக்கிறது.

இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் சுதா நாராயணமூர்த்தியின் காதல், திருமணம், நிறுவனத்தின் வளர்ச்சி மட்டுமின்றி அவரது சமூகப்பணிகளை முன்னிலைப்படுத்தும் வகையில் அமைந்த நேர்காணலும், கடைசியாக அவர் நல்வாழ்க்கைக்குச் சொன்ன வழிமுறையும் சிறப்பாக இருக்கிறது. நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநர் அமர்த்தியா சென் வழியாக, ‘சமூகநலத்தைப் பேணிக்காப்பதில் அரசுக்கு எவ்வளவு பொறுப்பு இருக்கிறதோ, அதற்கு இணையாக குடிமகன்களுக்கும் பொறுப்பு உண்டு’ என்கிற செய்தி சிறப்பாக இருக்கிறது.

டிஐ சைக்கிள் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களைக் கொண்டிருக்கும் முருகப்பா தொழிற் குழுமங்களின் தலைவர் ஏ.எம்.எம். அருணாசலம் நேர்காணல் வழியாக வெளிப்படுத்தும் தொழிற்சிந்தனைகள் மற்றும் தொழில் வளர்ச்சிகள் சிறப்பாக இருக்கிறது. அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சராக இருந்து, வடகொரியா - தென்கொரியா இணைப்புக்கு பேச்சு நடத்தியது மட்டுமின்றி, உலக அளவில் பெண்களின் நலனுக்காக உரத்தக் குரல் எழுப்பி, பெண்களின் நலன்களில் அக்கறை காட்டிய மேட்லைன் ஆல்பிரைட் நேர்காணல் வழியாகச் சொல்லப்பட்ட பெண்களின் முன்னேற்ற நடவடிக்கைகள் சிறப்பாக இருக்கிறது.

மேல்நாட்டினர் வியந்து பார்க்கும் வகையில் அமைந்திருப்பது இந்தியாவின் ஆன்மிகம்தான் என்பதை வலுப்படுத்தும் வகையில் அமைந்த நித்யானந்த கிரியின் நேர்காணலில் கிரியா யோகம் குறித்தும், அதனை அடைவது குறித்தும் சொல்லப்பட்ட செய்திகள் சிறப்பாக இருக்கிறது. வீதி நாடகங்களின் வழியே விழிப்புணர்வை ஏற்படுத்திய ஷப்தர் ஹஸ்மி குண்டர்களின் வன்முறைக்குப் பலியான நிலையில், அந்தப் பணியைத் தொடர்ந்து செய்து வரும் அவரது சகோதரி ஷப்னம் ஹஸ்மி பெண்களின் முன்னேற்றத்திற்கும், அதற்காக எடுத்துக் கொண்டிருக்கும் பல்வேறு செயல்பாடுகளும் சிறப்பாக இருக்கிறது.


ஒரே நாவலில் உலகப் புகழ்பெற்ற புக்கர் பரிசைப் பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராயின் நேர்காணல் வழியாக, அவரது எழுத்துகளை விட அவரது பல்வேறு போராட்டங்களை முன்னிறுத்தும் அமைந்த நேர்காணல் சிறப்பாக இருக்கிறது. ஒரு நோயால் முடக்கப்பட்டு சக்கர நாற்காலியில் பயணித்த போதும், தனது அரிய கண்டுபிடிப்புகளின் வழியாக உலகப் புகழ்பெற்ற ஸ்டீபன் ஹாகிங்கின் தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டுமின்றி, தன்னம்பிக்கையின்றி சோர்ந்து கிடக்கும் பல இளைஞர்களுக்கும் வழிகாட்டும் வகையில் சிறப்பாக இருக்கிறது.

இசைக்கச்சேரிகளின் விமர்சனம் என்றாலே அது சுப்புடுவின் விமர்சனம் என்பது அனைவரும் அறிந்ததுதான். தன் விமர்சனத்தில், தனக்குச் சரியெனப்படுவதை எந்தவிதமான மாற்றமுமின்றி வெளிப்படையாகச் சொல்லும் சுப்புடுவின் நேர்காணல் மிகச் சிறப்பாக இருக்கிறது. பரத நாட்டியத்தில் புகழ்பெற்ற நடனக்கலைஞர் அனிதா ரத்னம் பரத நாட்டியக் கலையைப் பற்றிச் சொன்னது மட்டுமின்றி, அமெரிக்கப் பெண்களுக்கும், இந்தியப் பெண்களுக்குமான வித்தியாசத்தை எடுத்துச் சொல்லி, இந்தியப் பெண்கள் தங்களது பழைய நிலையிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டு புதுமைப்பெண்களாக வலம் வர வேண்டுமென்று சொல்லும் கருத்துகள் மிகச் சிறப்பாக இருக்கிறது.

மொத்தத்தில் சுகதேவ் நேர்காணல்கள் எனும் நூல் சிறப்பாக இருக்கிறது. இந்த நூலினை அனைவரும் வாங்கி வாசிக்க வேண்டுமென்பது என் வேண்டுகோள். குறிப்பாக, ஊடகத்துறையில் செய்தியாளர்களாகப் பணியாற்றுபவர்கள் தங்களது எழுத்துகளைப் பட்டை தீட்டிக் கொள்ளவும், தங்களது திறனை மேம்படுத்திக் கொள்ளவும் இந்த நூலை அவசியம் வாங்கி வாசிக்க வேண்டும்.

- உ. தாமரைச்செல்வி

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/bookreview/p132.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License