இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




Book Review
புத்தகப் பார்வை

படைப்பாளிகள் முகமும் அகமும்


ஆசிரியர் சுகதேவ்
பிரிவு தமிழ் இலக்கியம்
பக்கங்கள் 170
பதிப்பு 2021
ISBN -------
விலை ரூ. 170/-
பதிப்பகம் சந்தியா பதிப்பகம்,
முகவரி புதிய எண் 77, 53 ஆவது தெரு, 9 ஆவது அவென்யூ, அசோக்நகர், சென்னை - 600083.
தொலைபேசி எண் 044-24896979
அலைபேசி எண் -------

புத்தகப் பார்வை:


ஒரு படைப்பு எப்படி உருவாகிறது? படைப்பாளரின் பின்னால் இருக்கும் உந்துதல் என்ன? படைப்பாளரின் எழுத்துக்குப் பின்னால் இருக்கும் வலி என்ன? என்பது போன்ற தகவல்களைத் தமிழ் இலக்கிய வரலாற்றை ஆய்வு செய்பவர்களும், தமிழ் இலக்கிய ஆர்வலர்களும் நன்கு அறிந்திருப்பர். அவ்வழியில், தினமணிக்கதிர் பொறுப்பாசிரியராகப் பணியாற்றி, அதன் பிறகு சென்னை, அமெரிக்கத் துணைத் தூதரகத்தில் பணியாற்றிப் பணியை நிறைவு செய்த இளையபெருமாள் என்கிற சுகதேவ், சில தமிழ்ப் படைப்பாளர்களைத் தேர்வு செய்து, அவர்களது படைப்புகள் குறித்தத் திறனாய்வுகளின் வழியாக, அவர்களை முழுமையாக இந்நூலில் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

இதழாசிரியராக விளையாட்டு, கலை, இலக்கியம், பொருளாதாரம், அரசியல் உள்ளிட்ட துறைகளில் கவனத்திற்குரியப் பல பதிவுகளைச் செய்த சுகதேவ், இந்நூலில் 21 அத்தியாயங்களில் படைப்பாளிகளைச் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார். எழுத்தாளர் ஜெயகாந்தன் தொடங்கி, மகாகவி பாரதியின் கொள்ளுப்பேத்தி டாக்டர் விஜயபாரதி வரை மிக நீண்ட இலக்கிய உரையாடலாக ஆழமானதொரு எல்லையை இந்நூல் தொட்டிருக்கிறது. இதில், ஈழத் தமிழ் ஆராய்ச்சியாளர், இலக்கிய விமர்சகர், கவிஞர்கள், பெண்ணியச் சிந்தனையாளர்கள் உள்ளிட்ட தமிழ் எழுத்துலகில் சிறப்பு பெற்றவர்களின் வாழ்நாள் அனுபவங்களும், அவர்களது மாறுபட்ட இலக்கிய கோட்பாடுகளும் புதைந்து கிடக்கின்றன.

மனித வாழ்வின் அற்புதங்களையும், அவலங்களையும் அழகியல், உளவியல் பார்வையில் தன் கவிதைகளில் படம் பிடித்தவர் கவிக்கோ அப்துல் ரகுமான். அவரது நேர்காணலில், “இலக்கியம் பல சமூக மாற்றங்களைச் செய்திருக்கிறது. இவைகளெல்லாம் அக மாற்றமாக இருப்பதால், வெளிப்படையாகத் தெரியாது. படிப்பவர்களின் மனச்சாட்சியைத் தூண்டி விட்டு, அதன் மூலம் புதிய மாற்றத்தைக் கொணர்வதற்கு இலக்கியம் உதவும்” என்கிற கருத்து எப்போதும் ஏற்புடையது.

கவிஞர் வைரமுத்து விமர்சனம் குறித்தக் கேள்விக்கு, “விமர்சனத்தில் மெய் இருந்தால் விமர்சகனின் அறிவு கண்டு வியக்கிறேன். விமர்சனத்தில் பொய் இருந்தால் விமர்சகனின் அறியாமை கண்டு சிரிக்கிறேன். வியப்பது உள்ளத்துக்கு நன்மை. சிரிப்பது உடம்புக்கு நன்மை. இரண்டிலும் நன்மை காண்கிறேன்“ என்கிற பதில், ஒரு படைப்புக்கான விமர்சனம் என்பது நேர்மறை, எதிர்மறை என்று இரு பிரிவுகளாகக் கொள்ளாமல், இரண்டையும் ஏற்கும் துணிவும் வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

”மனிதர்களின் உளப் போராட்டங்களை நுட்பமாகச் சித்தரிப்பதற்குச் சிறுகதை தான் சரியான களம். மேலும், உலக இலக்கியத்தின் தாக்கமும் தமிழில் சிறுகதையிலேயே அதிகம் இருக்கிறது. கவிதை படைப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே தேங்கிப் போகிறார்கள். விசாலமானப் பார்வை இல்லை” என்கிற வல்லிக்கண்ணனின் பதில் உண்மையில் சிறப்புக்குரியது.

ஜெயகாந்தன் நேர்காணலில் குறிப்பிட்டிருக்கும், “எழுத்தாளன் நம்பிக்கை இல்லாதவனாக இருக்கலாம். எழுத்து நம்பிக்கை தருவதாக இருக்க வேண்டும்” என்கிற பதில், படைப்புகளில் வாசகர்களுக்கு நம்பிக்கையூட்டும் பதிவுகள் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.


ஒரே நாவலில் உலகப்புகழ் பெற்ற இந்திய எழுத்தாளர் அருந்ததி ராய் நேர்காணலில் குறிப்பிட்டிருக்கும், ஒரு வரி எழுதிவிட்டு அதை அடித்து மீண்டும் எழுதும் பழக்கம் அவருக்குக் கிடையாது என்கிற தகவல் வியக்க வைக்கிறது.

தமிழ் இலக்கிய உலகின் அரை நூற்றாண்டுக் கால வரலாற்றையும், படைப்பாளிகளின் அகம் சார்ந்த தேடல்களையும் ஒரே புள்ளியில் இணைத்திருக்கும் முக்கிய ஆவணப் பதிவாக அமைந்திருக்கும் இந்நூலானது, சமகால இலக்கியச் சூழல், சக எழுத்தாளர்கள் பற்றிய ஆளுமைகளின் வெளிப்பாடுகளால் நிரம்பி இருக்கின்றன. வெறும் எழுத்து மட்டுமின்றி, அவர்களின் வாழ்க்கைப் போராட்டங்கள், வறுமை, தனிமை, அவர்களின் தத்துவப் பார்வை என்று பல திசைகளில் விரிந்திருக்கிறது.

சுகதேவ் ஒரு தேர்ந்த ஊடகவியலாளர் என்பதால், அவரது கேள்விகள் அனைத்தும் ஆளுமையின் ஆழமான அகம் நோக்கிப் பாய்கின்றன. ஒவ்வொரு படைப்பாளர்களிடமும் நேர்காணலுக்குச் செல்லும் போது, அவர்களது படைப்புகள், கொள்கைகள், நடைமுறைகள், அவர்களது தனிப்பட்ட வாழ்க்கைச் சூழல் ஆகியவற்றை முன்னரே நன்கு அறிந்து, முன் தயாரிப்புகளுடன் கேள்விகளை எழுப்பிப் பதிலைப் பெற்றிருப்பது போற்றுதலுக்குரியது.

இந்நூலில் பலதரப்பட்ட ஆளுமைகளின் நேர்காணல்கள் இடம் பெற்றிருப்பதால், இது வெறும் நேர்காணல் தொகுப்பாக இல்லாமல், தமிழ் இலக்கியத்தின் பல்வேறு காலக்கட்டங்களின் பரிணாம வளர்ச்சியைக் காட்டும் காலக் கண்ணாடியாக இருக்கிறது.

தமிழ் எழுத்துலகின் உண்மையான பக்கங்களைப் பார்வையிட விரும்புகிறவர்கள், தங்களின் புத்தக அலமாரியில் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டிய ஒரு அறிவுப் பெட்டகமாக இந்நூல் அமைந்திருக்கிறது. இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் வாங்கி வைத்திருக்க வேண்டிய நூல் இது.

- வைகறை கண்ணன்

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/bookreview/p138.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License