இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபத்தொன்றாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!       முத்துக்கமலம் மின்னிதழுக்கு அரசியல், திரைப்படம் தவிர்த்து அனைத்து வகையான படைப்புகளும் வரவேற்கப்படுகின்றன...!!!
Content
உள்ளடக்கம்




Book Review
புத்தகப் பார்வை

திருக்காட்சி


ஆசிரியர் சக்தி ஜோதி
பிரிவு கவிதைகள்
பக்கங்கள் 96
பதிப்பு டிசம்பர், 2025
ISBN 978-93-47556-15-9
விலை ரூ. 150/-
பதிப்பகம் தமிழ்வெளி
முகவரி #1- பாரதிதாசன் தெரு, ஸ்ரீனிவாசன் நகர், மலையம்பாக்கம், சென்னை -600122.
தொலைபேசி எண் --------
அலைபேசி எண் 9094005600

புத்தகப் பார்வை:


வார்த்தைகளுக்குள் அடங்காத உணர்வை, வார்த்தைகளைக் கொண்டே கடத்தும் ஒரு கலை வடிவம் தான் கவிதை எனலாம். உரைநடை என்பது அறிவுக்கு புரிய வைப்பது. கவிதை என்பது இதயத்தைத் தொட வைப்பது. ஒரு மனிதனின் ஆழ்மனதில் தோன்றும் மகிழ்ச்சி, வலி, காதல், ஏக்கம், தத்துவம், கோபம் போன்ற ஏதோவொரு உணர்வின் உச்சக்கட்ட வெளிப்பாடு, சொற்களின் வழியே அழகிய வடிவம் பெறும் போது அது கவிதையாகிறது.

வெறும் சொற்களின் அடுக்குக் கவிதை அல்ல, அச்சொற்கள் வாசகனின் மனதில் ஒரு காட்சியை அல்லது ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். எல்லோரும் பார்க்கும் ஒரு சாதாரண விஷயத்தை, ஒரு கவிஞன் முற்றிலும் புதிய கோணத்தில் பார்க்க வேண்டும். இந்நூலாசிரியர், தனது பயணங்களின் போது, தான் கண்ட இயற்கையை, மரம், செடி, கொடி, மலர், சமூகம் என கண்ட காட்சிகள் அனைத்தையும் “திருக்காட்சி“ களாய் கவிதைகளாக்கி படிப்போரின் மனதுக்குள் கடத்தியிருக்கிறார்.

உணர்வுகளையும், காட்சிகளையும் சொற்களாக மை தீட்டிய கவிப்பயணத்தில் “திருக்காட்சி“ இவரது 14 ஆவது கவிதைத் தொகுப்பு நூல் ஆகும். கட்டுரைகள், ஆய்வு நூல் ஆகியனவும் இவரது கைவண்ணத்தில் மலர்ந்துள்ளன.

“திரு“ என்பது மேன்மை, தெய்வீகம், அழகு மற்றும் அருளைக் குறிக்கும் அடைமொழி. “காட்சி“ என்பது நாம் காண்பது. திருக்காட்சி என்பது வெறும் சாதாரணப் பார்வையாக அல்லாமல், உலகியல் கடந்து ஆன்மாவால் உணரப்படும் ஒரு தெய்வீகப் பெருங்காட்சியைக் குறிக்கிறது.

கவிஞரின் பார்வையில் படும் இயற்கை, மனிதநேயம், காதல், பிரபஞ்சம் என்று ஒவ்வொன்றும் ஒரு “திருக்காட்சி“யாக கண் முன் விரிவதை இந்நூலில் காண முடிகிறது.

“திருக்காட்சி“ என்று இந்நூலுக்கு பெயர் வைத்திருப்பது, கவிஞரின் முதிர்ச்சியையும், அவரது கவித்துவப் பார்வையையும் பறைசாற்றுகிறது. இன்னும் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், இந்நூலின் அட்டை முதல் அட்டை வரை திருக்காட்சிகள்தான்!

குறுக்கீடு என்கிற கவிதையில்,

“எத்தனையோ பருவங்களின்
புயல் மழைகளைக் கடந்து
வேர்ப்பிடித்திருந்தது
அந்த ஆலமரம்.

*****

வேரோடு சாய்ந்த மரத்தைக் கண்டால்
அடையும் வலியினும் கடிது
முறிந்து நிலம்படாக் கிளைகளில்
சிதறுண்டு கிடக்கும்
பறவைகளின் கூடுகளைக் கண்டு
இன்னல்படுகிற
நெஞ்சத்தின் துயர்“

இயற்கை நேயத்தையும், கூர்மையான கவித்துவப் பார்வையையும் வெளிப்படுத்தும் இக்கவிதை, ஒரு பெரும் சோகத்தைக் கண்டு மனம் கசிவதற்கும், அந்தச் சோகத்திற்குள் இருக்கும் மிக நுட்பமான, மறைந்திருக்கும் பேரழிவுக் காட்சியை, மெல்லிய உணர்வைப் படிப்போர் இதயங்களுக்குள் இறக்கி வைத்து விடுகிறது.


ஒரு மரம் வேரோடு சாய்வது இயற்கையின் பேரிழப்பு. அந்தப் பேரிழப்பைத் தாண்டி, அந்த மரத்தைச் சார்ந்து வாழ்ந்த பறவைகள் உள்ளிட்டவைகளும் அழிவை நோக்கிப் பயணிக்கிறது, கவிஞரின் பார்வை, பெரியப் பாதிப்புகளை விட, ஆழமான பாதிப்புகளே அதிக வலியைக் கொடுக்கிறது என்பதை உணர்த்துகிறது.

கூடிழந்த பறவைகளின் நிலையை எண்ணித் “துடிப்பதே நெஞ்சத்தின் கடினமான துயர்“ கவிஞரின் இதயத்தை அதிகமாகவே கீறுகிறது. வீழ்ந்த மரத்திற்காக அழுபவர்கள் மத்தியில், சிதறிய கூடுகளுக்காகக் கண்ணீர் வடிக்கும் கவிஞரின் நெஞ்சம் உன்னதமானது. நூலின் தலைப்பிற்கு ஏற்ப, இயற்கையின் இந்தத் துயரத்தையும் ஒரு தீர்க்கமான அகக் காட்சியாய் மாற்றியிருக்கிறது.

“ஒளிச்சேர்க்கை“ எனும் இன்னொரு கவிதை. இதில்,

“ஒரு மலரை
மலரச் செய்வது
எளிதுதான்
நிலமும் பொழுதும்
நீரும் வேரும்
ஒன்றெனக் கூடி வருகையில்
பருவம் தவறி
மழை பொய்த்துப் போகிற
காலத்தின்
மலர்தலென்பது
மலையைப் பெயர்ப்பதை விட
கடிதினும் கடிது“

இக்கவிதை வரிகளில் பிரபஞ்சத்தின் விதியையும், காலத்தின் தேவையையும் மனித வாழ்வின் எதார்த்தத்தையும் மிக நுட்பமாகப் பேசுகின்றன. இயற்கையின் இயல்பையும், அது தவறும் போது ஏற்படும் பேரிடரையும் ஒரு மலரின் வழியே கடத்தியிருக்கும் திறன் அற்புதம்!

ஒரு மலர் மலர்வது என்பது தனித்த நிகழ்வல்ல! அது ஒரு கூட்டுப் பிரார்த்தனை. நிலம், நீர், பொழுது, வேர் ஆகிய நான்கும் தங்களுக்குள் ஒரு புரிதலோடு இணையும் போது தான் மலர்தல் என்பது சாத்தியமாகிறது.

மழை பொய்த்துப் போகும் போது, வறட்சிக் காலத்தில், ஒரு செடி மலரை உருவாக்குவது என்பது தன் உதிரத்தை வடிப்பதற்குச் சமம். சூழல் மாறும் போது, எளிய விஷயங்களின் மதிப்பு எப்படி பல மடங்கு உயர்கிறது என்பதை உணர்த்தும் கவிதையாக மலர்ந்துள்ளது.


மென்மையான எடையற்ற மலரை மலரச் செய்வதை, பிரமாண்டமான மலையைப் பெயர்ப்பதோடு ஒப்பிட்டிருப்பது சிந்தனையின் உச்சமாகக் கருதலாம். வழக்கமாக மலையைப் பெயர்ப்பதுதானே கடினம். மலர் மலர்வது எளிது. காலம் தவறிய வறட்சியில், அந்த மென் மலர் மலர்வதற்குச் செடி படும் பாடு என்பது, ஒரு மலையையே நகர்த்துவதை விடவும் கடினமானது என்கிறார் கவிஞர். இந்த முரண் படிப்போரின் மனதில் ஒரு பெரும் பாரத்தை இறக்கி வைக்கிறது.

“கண்ணால் காண்பது காட்சி, நெஞ்சால் உணர்வதே திருக்காட்சி“ அனைவரின் நெஞ்சில் ஏந்த வேண்டிய 63 கவிதைகளின் அற்புதத் தொகுப்பு, இந்நூல். அனைவரும் வாங்கிப் படித்துப் பார்க்க வேண்டும்.

- வைகறை கண்ணன்

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/bookreview/p141.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License