இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபத்தொன்றாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!       முத்துக்கமலம் மின்னிதழுக்கு அரசியல், திரைப்படம் தவிர்த்து அனைத்து வகையான படைப்புகளும் வரவேற்கப்படுகின்றன...!!!
Content
உள்ளடக்கம்




Book Review
புத்தகப் பார்வை

பாவேந்தரில் பாரதி


ஆசிரியர் முனைவர் இளம் அறிஞர் சோ. முத்தமிழ்ச்செல்வன்
பிரிவு கட்டுரைகள்
பக்கங்கள் 146
பதிப்பு ஆகஸ்ட், 2025
ISBN 978-81-920469-0-7
விலை ரூ. 170/-
பதிப்பகம் முத்தமிழ்ப் பதிப்பகம்
முகவரி #1/200/டீ 12, தேவர்குளம் சாலை, சிவகாசி -626124.
தொலைபேசி எண் --------
அலைபேசி எண் 9360578768

புத்தகப் பார்வை:


கல்லூரிப் பேராசிரியரான நூலாசிரியர் பாரதியார் குறித்துப் பல்வேறு இதழ்களில் எழுதி வெளியான கட்டுரைகள், பல்வேறு கருத்தரங்குகளில் சமர்பித்த ஆய்வுக்கட்டுரைகள் போன்றவைகளை ஒன்றிணைத்து நூலாக்கம் செய்திருக்கிறார்.

பாரதியைக் கருப்பொருளாகக் கொண்டு ஐந்து கட்டுரைகளை பாரதியின் ஆழம், அகலம், உயரம் என மிகமிக நுண்ணிய அளவில் நுணுகிப் பார்க்கிறார். உதாரணத்திற்கு நூலின் தலைப்பாகிய “பாவேந்தரில் பாரதி“ கட்டுரையை எடுத்துக் கொள்ளலாம்.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், மகாகவி பாரதியாரின் மீது கொண்ட மதிப்பும், அன்பும், பற்றும் குறித்து நாடே நன்கு அறியும். தன் இயற்பெயரான கனக சுப்பு ரத்தினம் என்பதை மாற்றி, பாரதிதாசன் என தன்னை அறிவித்துக் கொண்டதே இதற்குத் தக்க சான்றாகும். பாரதிக்கு பாவேந்தர் ஆற்றிய தொண்டும், அவரைப் பற்றிப் படைத்த இலக்கியப் பதிவும் தமிழ் இலக்கிய வரலாற்றில் நீங்கா இடம் பிடித்திருக்கின்றன. பாவேந்தர் தன் கவிதைகளிலும், கட்டுரைகளிலும் பாரதியின் புகழைப் பரப்புவதைத் தன் வாழ்நாள் கடமை எனக் கருதினார். பாவேந்தரிடத்தில் பாரதியின் தாக்கம், விளைவுகள், அவர்களிடத்திலிருந்து வந்த நட்பு, அதனால் தமிழுக்கு விளைந்த நன்மைகள் என நூலாசிரியர் இருபெருங் கவிஞர்களின் முதல் சந்திப்பு முதல் பாடம் புகட்டலும் “உலகக் கவி“ என நிறுவப் பெறுதலும் என கட்டுரையை மிகச் சிறப்பாகத் தந்திருக்கிறார்.

பாரதி, பாரதிதாசன் இருவருக்குமிடையே ஒருவருக்குள் ஒருவர் ஏற்படுத்திய தாக்கங்கள், ஒருவரை ஒருவர் மதிக்கும் பண்புகள், நட்பு, நன்மதிப்பு படிப்படியாக அடுக்கடுக்கான சம்பவங்களின் கட்டுமானங்கள் என்று பல்வேறு தகவல்களைப் பதிவு செய்திருக்கிறார்.


“பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் பாரதிதாசன் பெருமைகளை எடுத்துச் சொல்லி மகிழும் மனநிலை பாரதியாரிடம் இயல்பாகவே இருந்துள்ளது.

ஒரு நாள் பாரதிதாசன் தன் வயது ஒத்த சில தோழர்களுடன் அரவிந்தர் வீட்டு மாடி கைப்படிச் சுவர் மீது அமர்ந்து புகைத்துக் கொண்டிருந்தார். அச்சமயம் பாரதியாரும், அரவிந்தரும் படியேறி மாடிப் பகுதிக்கு வந்தனர். அவர்கள் வந்ததைப் பாரதிதாசன் கவனிக்கவில்லை. ஆனால், பாரதிதாசன் புகைத்துக் கொண்டிருப்பதை அவர்கள் கவனித்து விட்டனர். கூட்டுச் சேர்ந்து கொண்டு பாரதிதாசன் புகைத்தது கண்டு மனம் வருந்தினார் அரவிந்தர்.

“யாரது? சுப்புரத்தினமா?“ என்று பாரதியாரிடம் வினவினார். இவ்வளவு மோசமானவரிடம் நீ நட்புக் கொண்டிருக்கிறாயே? என்று இழித்துக் காட்டுவது போன்று அரவிந்தரின் வினாப் போக்கு அமைந்திருந்தது.

உடனே, பாரதியார் கொஞ்சமும் விட்டுக் கொடுக்காமல் “ஆமாம் சுப்புரத்தினம்தான். அவன் எல்லாச் செட்டிலேயும் இருப்பான். ஆனால், பெரிய புலவன்“ இதனால், பாரதியார் மதிக்கும் பாரதிதாசனை பிறரும் மதிக்கும்படி ஆயிற்று என்று பதிவு செய்ததன் மூலம் பாரதிதாசனை பாரதியார் எந்த உயரத்தில் புரிந்து வைத்திருக்கிறார் என்கிற செய்தியைப் படிக்கும் வாசகர் மனதில் பதியம் போடுகிறார் நூலாசிரியர்.

மேலும், கனக சுப்புரத்தினம் எனும் இயற்பெயர் கொண்டவர் “பாரதிதாசன்“ எனப் பெயர் மாற்றம் செய்து கொண்டமையால், எதிர்ப்பும் வந்தது. பொதுவுடமை இயக்கத் தலைவர்களில் ஒருவர் பாரதிதாசனைச் சந்தித்து “எவருக்கும் தாசனாக இருக்க விரும்பாத நீங்கள், பாரதிக்கு மட்டும் தாசனாக ஏன் ஆனீர்கள்?“எனக் கேட்க, “அடிமைப் புத்தியை விரும்பாத நானே ஒருவருக்குத் தாசன் என்று சொல்லிக் கொள்வேன் என்றால், அவர் அவ்வளவு உயர்ந்தவராக இருப்பார் என்பதை நீயே எண்ணிப் பார்த்து அறிந்து கொள்க!“ என பாரதிதாசன் விடையளித்துள்ளார்.


படிப்போரின் மனக்காட்சியில் காட்சிப் படுத்தி, படிப்போரை காண்போராக மாற்றி, மனதில் ஆழமான கருத்தை மிக எளிதாக பதியச் செய்து விடும் பல கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றிருக்கின்றன. திரைக்காட்சிகள் போல் கட்டுரையைத் தங்கு தடையின்றி நகர்த்திச் செல்வது இந்நூலில் இடம் பெற்றிருக்கும் அனைத்துக் கட்டுரைகளுக்கும் வலிமை சேர்க்கிறது.

பாரதியார் மற்றும் பாரதிதாசனைப் பற்றிய பல தகவல்களைக் கொண்டுள்ள இந்நூலினை அனைவரும் வாங்கிப் படிக்கலாம்.

- வைகறை கண்ணன்

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/bookreview/p145.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                       


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License