இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




சிறுவர் பகுதி
கட்டுரை

தொழிலாளர் நாள்

வழக்கறிஞர் முனைவர் டி. ஏ. பிரபாகர்

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது அந்நாட்டின் மனித வளம், தொழில் வளம், விவசாய வளம் ஆகியவற்றுடன் பின்னிப் பிணைந்துள்ளது. இந்த வளங்களின் மூலம் கிடைக்கும் சேவைகள் மற்றும் பொருட்கள் வணிகர்களிடமிருந்தோ அல்லது விவசாயிகளிடமிருந்தோ நேரடியாகச் சமூகத்தைச் சென்றவடைதில்லை. முதலில் பொருள் உற்பத்தி, பின்பு பொருள் - போக்குவரத்து, இறுதியாக கடைநிலை விற்பனை என்ற சங்கிலிகளால் ஆன பொருளாதாரச் சக்கரம் தொழிலாளர்களின் உழைப்பு என்ற அச்சாணியில் சுற்றுகிறது.

18 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட தொழில் புரட்சி உலகில் பல பகுதிகளிலும் தொழிற்சாலைகளை நிறுவி உற்பத்தியை அதிகரிக்க வழி வகுத்தது. அதிகமான தொழிலாளர்கள் தொழிற்சாலைகளில் பணியமர்த்தப்பட்டனர். பெண்களும் குழந்தைகளும் குறைந்த கூலியில் வேலைக்குச் சேர்க்கப்பட்டனர். அவர்களின் உழைப்பு சுரண்டப்பட்டது. எனினும் வெளிப்படையாக அவர்கள் தங்களின் உரிமைக்கு குரல் கொடுக்க முடியாத நிலை இருந்து வந்தது.

1866 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் முதல் தொழிற்சங்கம் தொடங்கப்பட்டது. பிலடெல்பியாவில் உள்ள தையல் தொழிலாளர்களைக் கொண்டு, 1869 ஆம் ஆண்டில் உரியா ஸ்மித் ஸ்டீபன் என்பவர் "தொழிலாளர் போர் வீரர்கள்" என்ற தொழிற்சங்கத்தை ரகசியமாகத் தொடங்கினார். 1886 ஆம் ஆண்டில் அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பு தோற்றம் பெற்றது. 14 தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய இந்தக் கூட்டமைப்பில் 3 இலட்சம் உறுப்பினர்கள் இருந்தனர். ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வேலை என்பது இக்கூட்டமைப்பின் முதன்மைக் கோரிக்கையாக இருந்து வந்தது.

அதனை வலியுறுத்தி 1886 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி அமெரிக்காவில் 13 ஆயிரம் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் 3 இலட்சம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். சிகாகோ நகரில் உள்ள ஹே மார்க்கெட் சதுக்கத்தில் தொழிலாளர்களுக்கு ஒரு நாளில் 8 மணி நேர வேலையை வலியுறுத்தி 1886 ஆம் ஆண்டு மே 4 ஆம் தேதி சுமார் 1500 தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க முயன்ற காவல்துறை மீது வெடிகுண்டு வீசப்பட்டது. அதைத் தொடர்ந்து காவலர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமுற்றனர் தொழிலாளர்கள் 4 பேர் கலவரத்தைத் தூண்டியதாக தூக்கிலிடப்பட்டனர்.


அந்தப் போராட்டத்தின் விளைவாக ஒரு நாளில் 8 மணி நேர உழைப்பு என்பது நிர்வாகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இவ்வாறு பலரது தியாகத்தால் 24 மணி நேரத்தில் 8 மணி நேரம் மட்டுமே உழைப்பு என்பது உறுதி செய்யப்பட்டது. 8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர தனிப்பட்ட விருப்பு வேலை என ஓரு நாள் பிரிக்கப்பட்டது.

தொழிலாளர்கள் ஒற்றுமையைப் போற்றவும் அவர்களின் போராட்டத்தைப் பாராட்டவும் இறந்த தொழிலாளர்களுக்கு வீரவணக்கம் செலுத்தவும் 1889 ஆ,ம் ஆண்டில் பாரிசில் கூடிய தொழிலாளர்கள் சம்மேளனத்தில் மே முதல்நாள் தொழிலாளர் நாளாக அறிவிக்கப்பட்டது. அது முதல் மே 1 ஆம் தேதி உலகின் பெரும்பாலான நாடுகளில் தொழிலாளர் நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அமெரிக்காவிலும் கனடாவிலும் செப்டம்பர் மாதத்தின் முதல் திங்கட்கிழமையிலும் ஆஸ்திரேலியாவில் அக்டோபர் முதல் திங்கட்கிழமையிலும் தொழிலாளர் நாள் கொண்டாடப்படுகிறது.

ஐக்கிய நாடு சபை ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர் நலன் தொடர்பான கருத்துருவை அறிவித்து, அதன்படி தொழிலாளர் நாளைக் கொண்டாடச் செய்து வருகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே நம் நாட்டில் தொழிலாளர் இயக்கங்கள் செயல்பட்டு வந்திருக்கின்றன. லேபர் கிசான் கட்சி சார்பில் 01.05.1923 ஆம் நாளில், சென்னையில் தோழர் சிங்காரவேலர் என்பவர் ஏற்பாட்டில் நம் நாட்டில் முதன் முறையாக தொழிலாளர் நாள் கொண்டாடப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


இந்தியா விடுதலை பெற்ற பின்பு 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 நாளில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டத்தில் தொழிலாளர் நலன் காக்கும் பல பிரிவுகள் உள்ளன. தொழிலாளர் நலன் என்பது மத்திய மாநில அரசுகளின் இணைவுப் பட்டியலில் உள்ளது.

அரசியல் அமைப்பின் 16 ஆவது பிரிவு வேலை வாய்ப்பில் சமவாய்ப்பு தரப்பட வேண்டும் என்பதையும், 19 (1) (இ) ஆவது பிரிவு சங்கம் அமைப்பதற்கான உரிமையையும், 38 (2) ஆவது பிரிவு வருமானத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் களைதல் குறித்தும், 41 ஆவது பிரிவு வேலைவாய்ப்பிற்கான உரிமையையும், 42 ஆவது பிரிவு பணி செய்யும் இடத்தில் வேலை செய்வதற்கு உகந்த சூழ்நிலை ஏற்படுத்தப்பட வேண்டுமெனவும், 43 ஆவது பிரிவு தரமான வாழ்க்கை நடத்தத் தகுந்த கூலி வழங்கப்பட வேண்டும் என்றும், 43(அ) ஆவது பிரிவு தொழிலாளர் அவரவர் பணி செய்யும் நிர்வாகத்தில் பங்கேற்கும் நிலை ஏற்பட வேண்டும் என்றும் கூறுகிறது. 23 ஆவது பிரிவு கட்டாயப்படுத்தி வேலை வாங்குவதைத் தடை செய்கிறது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/children/essay/p12.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License