இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




சிறுவர் பகுதி
கட்டுரை

அஞ்சல்தலை சேகரிப்பு

மு. சு. முத்துக்கமலம்

அஞ்சல் தலைகளையும், அதனுடன் தொடர்புடைய வேறு பொருட்களையும் சேகரித்தலை ‘அஞ்சல்தலை சேகரிப்பு’ என்கின்றனர். உலகின் மிகவும் பிரபலமான பொழுது போக்குகளில் ஒன்றாக, அஞ்சல்தலை சேகரிப்பு இருந்து வருகிறது. இப்பொழுது போக்கு உலக அளவில் பரவி இருந்தாலும், இது ஒரு வருவாயில்லாத முயற்சியாகவே இருந்து வருகிறது. இருப்பினும், சில சிறிய நாடுகள், நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட, சிறு தொகையிலான அஞ்சல் தலைகளை, அஞ்சல் தலை சேகரிப்பாளர்களுக்காக வெளியிட்டு வருமானம் பெறுகின்றன.

அஞ்சல்தலை சேகரிப்பு என்பது எப்படி தொடங்கியது?

பெரிய பிரித்தானிய (இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் நாடுகளுடன் சில தீவுப்பகுதிகள் இணைந்த பகுதி) அரசால் 1840 ஆம் ஆண்டில் பென்னி பிளாக் (Penny Black) என்று அழைக்கப்படும் முதலாவது அஞ்சல்தலை வெளியிடப்பட்டது. இளம் அரசி விக்டோரியாவின் படத்தைக் கொண்டிருந்த அந்த அஞ்சல்தலை துளைகளில்லாமல் வெளியிடப்பட்டதால், அதனைப் பயன்படுத்தும் போது, கத்தரிக்கோல் கொண்டு வெட்டிப் பிரிக்க வேண்டியிருந்தது. முதல் அஞ்சல்தலையான 'பென்னி பிளாக்' அஞ்சல் தலைகள் பயன்படுத்தப்படாத நிலையில் கிடைத்தற்கரியதாக இருக்கிறது. அதே வேளை, பயன்படுத்தப்பட்ட பென்னிபிளாக் அஞ்சல்தலைகள் தற்போதும் கிடைக்கின்றன. இவற்றை அவற்றின் நிலையைப் பொறுத்துக் கூடுதல் விலை கொடுத்துப் பெறமுடிகிறது.

அஞ்சல்தலைகள் குறிப்பிடத்தக்க அளவில் புழக்கத்தில் வந்த பின்பு, 1860 ஆம் ஆண்டுக்குப் பிறகு சிறுவர்களும், இளம் வயதினரும் பொழுதுபோக்காக அஞ்சல்தலைகளைச் சேகரிக்கத் தொடங்கினர். அதனைக் கண்ட பெரியவர்கள், சிறுவர்கள் செய்யும் செயலாகக் கருதி அதனை ஒதுக்கினர். ஆனால், 1890 ஆம் ஆண்டுக்குப் பிறகு, பெரியவர்களும் அஞ்சல்தலை சேகரிப்பில் ஈடுபடத் தொடங்கினர். அஞ்சல் தலைகளைச் சேகரித்தவர்கள், அஞ்சல்தலையின் உற்பத்தி, அஞ்சல் தலையில் அச்சுப் பிழைகள், அஞ்சல்தலையின் பெருமைகள் உள்ளிட்ட பல தகவல்களை முறையாக ஆராய்ந்து வெளியிட்டார்கள்.


அரிய அஞ்சல் தலைகளுக்குக் கிடைத்த பிரபலம் பலருக்குத் தூண்டுதலாக அமைந்து, 1920 ஆம் ஆண்டுகளில், அஞ்சல்தலை சேகரிப்பாளர்களது எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. முந்தைய அஞ்சல்தலைகள் நல்ல நிலையில் கிடைக்காததால், அவற்றின் மதிப்பும் கூடியது. பொதுவாக இரண்டு, மூன்று, நான்கு என்று சேர்ந்து இருந்த பழைய அஞ்சல்தலைகள் கிடைத்தற்கு அரிதாயிருந்தன.

1920 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட அமெரிக்க அஞ்சல்தலைகளின் பெறுமதி கிடுகிடுவென உயர்ந்ததால், 1930 ஆம் ஆண்டுகளில், பல அமெரிக்கச் சேகரிப்பாளர்கள், சில ஆண்டுகளின் பின்னர் நல்ல விலைக்கு விற்கும் எண்ணத்துடன், புத்தம் புதிய அஞ்சல்தலைகளை வாங்கிக் குவித்தனர். இவ்வெண்ணம் ஈடேறவில்லை. 60 ஆண்டுகளுக்கு மேலாகியும், இப்பொழுது கூட, புத்தம்புதிய நிலையில் 1930 ஆம் ஆண்டுகளின் அமெரிக்க வெளியீடுகளை, கிட்டத்தட்ட அவற்றின் குறித்த விலையிலேயே வாங்க முடியும். பல சேகரிப்பாளர்களும், வணிகர்களும் இன்னும் 1930 ஆம் ஆண்டுகளின் அஞ்சல்தலைகளைக் கடிதம் அனுப்பப் பயன்படுத்துகிறார்கள் என்று கூறப்படுகிறது.

இன்று பல்வேறு நாடுகளும் வெளியிடும் அஞ்சல்தலைகள் கணக்கிட முடியாதவை. 1840 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கடந்த ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு மேலாக அனைத்து நாடுகளும் வெளியிட்ட அஞ்சல்தலைகளோடு ஒப்பிடும்போது, ஒரு மனிதன் தன் வாழ்நாளில் சேகரிக்ககூடியவை மிகச் சிலவே. ஒரு வரையறையின்றி, கிடைக்கக் கூடிய எல்லாத் அஞ்சல்தலைகளையும் சேகரிக்க முயலும் ஒருவரின் சேகரிப்பில் எவ்வித ஆழமும் இருக்க முடியாது. இதனால் தற்காலத்தில் சேகரிப்பாளர்கள், தங்கள் சேகரிப்பு முயற்சிகளை ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் அடக்கிக் கொள்கிறார்கள். உதாரணமாக,

* ஒற்றை நாட்டுச் சேகரிப்பு - இது ஒரு நாடு வெளியிட்ட அஞ்சல் தலைகளை மட்டும் சேகரிப்பதாகும்.

* தலைப்புசார் சேகரிப்பு - இது ஒரு குறிப்பிட்ட தலைப்பு தொடர்பாகப் பல்வேறு நாடுகளும் வெளியிட்ட அஞ்சல்தலைகளைச் சேகரிப்பதாகும். (பறவைகள், விலங்குகள், புகைவண்டிகள், விண்வெளிப் பயணம் என்பன அஞ்சல்தலை சேகரிப்பில் பரவலமான சில தலைப்புகளாக இருக்கின்றன)


இப்பொழுதுபோக்கு இலாபமற்றதாக இருந்தும், பல புதிய சேகரிப்பாளர்கள் அஞ்சல்தலைகளில் முதலீடு செய்கிறார்கள். அஞ்சல்தலையியல் முதலீடு உயர்மட்டச் சேகரிப்பாளரிடையே பரவலாக இருந்து வருகிறது. அரிய அஞ்சல்தலைகள், தொட்டுணரக்கூடிய முதலீடுகளில், இலகுவாகக் கொண்டு செல்லக் கூடியவை என்பதுடன் சேமித்து வைப்பதும் இலகுவாகும். ஓவியங்கள், சேகரிப்புப் பொருள் முதலீடுகள், பெறுமதியான உலோகங்கள் என்பவற்றுக்குக் கவர்ச்சிகரமான மாற்றீடாக அஞ்சல்தலை சேகரிப்பு இன்றும் இருந்து வருகிறது.

எனினும், இந்தப் பொழுதுபோக்கில் ஈடுபடுவதால் கிடைக்கும் மன நிறைவுக்கும், பொது அறிவு வளர்ச்சிக்குமாகவே, இதில் ஈடுபடும்படி புதியவர்களைத் தூண்டுகிறார்கள். மிகச் சிறிய வண்ணப்படங்களான அஞ்சல்தலைகள் பல பயனுள்ள தகவல்களைத் தம்முள் புதைத்து வைத்துள்ளன. இவை இளம் சேகரிப்பாளர்களது அறிவு வளர்ச்சிக்கும் உதவுகின்றன.

அஞ்சல்தலை சேகரிப்பில் மதிப்புமிக்க ஒரு சிறுதகவலையும் தெரிந்து கொள்ளுங்கள்...

1918 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவில் 24 செண்ட்ஸ் மதிப்பில் வெளியிடப்பட்ட ’தலைகீழ் ஜென்னி’ (Inverted Jenny) எனும் தபால்தலை வடிவமைப்பில், அதன் நடுவில் உள்ள ஆகாய விமானம், தவறுதலாகத் தலைகீழாக அச்சிடப்பட்டுவிட்டது. இந்தத் தபால்தலை உலகம் முழுவதிலும் தற்போது 100 மட்டுமே இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் இது உலகின் மிகவும் மதிப்பு வாய்ந்த தபால்தலைகளுள் ஒன்றாக இருக்கின்றது. 2003 ஆம் ஆண்டின் மதிப்புப்படி இதன் மதிப்பு 150,000 அமெரிக்க டாலர்களாகும். தற்போது மேலும் அதிகரித்திருக்கும்.

தபால்தலையில் ஏற்பட்ட பிழை, அதன் விலையை (மதிப்பை) அதிகரித்து விட்டது என்பதும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/children/essay/p6.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License