புகழ் பெற்ற அறிவியல் மேதைகளில் ஒருவர் ஐன்ஸ்டீன்.
அவர் ஒரு சமயம் அழுக்குத் தோற்றமுடைய நீக்ரோ சிறுவன் ஒருவனைச் சந்தித்தார்.
அவனிடம் அவர், “நீ முகம் கழுவிக் கொண்டு வந்தால் உனக்கு 25 செண்ட் தருகிறேன்" என்றார்.
உடனே அந்த நீக்ரோ சிறுவன் முகம் கழுவிக் கொண்டு வந்து, ஐன்ஸ்டீனிடம் 25 செண்ட் காசை வாங்கிக் கொண்டான்.
ஐன்ஸ்டீன் அந்த நீக்ரோ சிறுவனிடம், “இந்தக் காசை என்ன செய்யப் போகிறாய்?” என்று கேட்டார்.
உடனே அந்தச் சிறுவன் துணிச்சலோடு, “நீங்கள் உங்கள் தலைமுடியைச் சரியாக வெட்டிக் கொண்டு வந்தால் உங்களுக்குத் தருகிறேன்!” என்றான்.
அறிஞர் ஐன்ஸ்டீனை அந்தச் சிறுவனின் பதிலைக் கண்டு சிரித்தார்.