பேராசிரியர் சத்யேந்திரநாத் போஸ், விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தார்.
அப்போது ஒரு சமயம், டாக்டர் ராதாகிருஷ்ணன் விஸ்வபாரதிக்கு வருகை தந்தார்.
பேராசிரியர் போஸ், ரிக்சாவில் அமர்ந்து டாக்டர் ராதாகிருஷ்ணனை வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகச் சென்று கொண்டிருந்தார்.
அவரைப் பாதுகாப்பு அதிகாரி அடையாளம் கண்டுகொள்ளாமல் தடுத்து நிறுத்தினார்.
வேறு வழியின்றி, போஸ் நடந்து கூட்டம் நடைபெறும் இடத்திற்குச் சென்றார்.
அப்போது டாக்டர் ராதாகிருஷ்ணனின் வண்டி அங்கு வந்தது. அவரது பார்வை பேராசிரியர் போஸ் மீது பட்டது.
அவர் வண்டியிலிருந்து இறங்கி நேராக போஸ் அருகில் சென்று, அவரது தோளில் கைவைத்துக் கூட்டம் நடைபெறும் இடம் வரை நடந்தே சென்றார்.
அதனைக் கண்டு பாதுகாப்பு அதிகாரி நடுங்கிப் போனார்.