பொதுக் கூட்ட மேடை ஒன்றில், 'கண்ணன் என் மன்னன். அவனது கானம் கேட்டால் பட்ட மரம் துளிர்க்கும்...' என்று கவிஞர் கண்ணதாசன் பேசிக் கொண்டு இருந்தார்.
அப்போது கூட்டத்திலிருந்த இளைஞன் ஒருவன் கேட்டான்:
“கவிஞரே! நீங்கள் சொன்னது உண்மையென்றால் கண்ணனின் கையிலிருக்கும் புல்லாங்குழல் பட்டமரம்தானே. அம்மரம் ஏன் துளிர்க்கவில்லை?”
இளைஞன் கேட்ட கேள்வியினைத் தொடர்ந்து கரகோஷமும் ஆரவாரமும் எழுந்தது.
ஆரவாரம் அடங்கிய பின்பு, "தம்பி! புல்லாங்குழல் பட்டமரம்தான். ஆனால், கண்ணனது கைகளில் எப்போதும் பட்டுக் கொண்டேயிருப்பதால் அதற்கு மீண்டும் பிறவி கிடையாது. நேராக அதற்கு மோட்சம்தான். அதனால்தான் பட்ட மரமான புல்லாங்குழல் துளிர்க்கவில்லை...” என்று சமயத்திற்கேற்றபடி விளக்கம் கூறினார் கண்ணதாசன்.
கேள்வியைக் கேட்ட இளைஞன் உட்பட கூட்டத்திலிருந்த அனைவரும் எழுப்பிய கைத்தட்டலும் சத்தமும்ம் விண்ணைப் பிளந்தன.