ஒரு முறை பெர்னாட் ஷாவும், அவர் நண்பரும் ஒரு பெரிய ஓட்டலைக் கடந்து சென்றனர்.
அப்போது நண்பர் அந்த ஓட்டலைச் சுட்டிக்காட்டி, “இதன் முதலாளி பலவிதமான தொழில்களைச் செய்து ஒரே நாளில் லட்சக்கணக்கில் பணத்தைக் குவிக்கிறார். என்ன பயன்? பணத்தை முறையோடு செலவிடுவது எப்படி என்று இவருக்குத் தெரியவில்லையே?’’ என்று கூறி அலுத்துக் கொண்டார்.
பெர்னாட்ஷா புன்னகையுடன், ‘கடவுள் எப்போதுமே புத்திசாலி. லட்சக்கணக்கில் பணத்தைக் குவிப்பவர்களுக்கு எவ்வாறு செலவு செய்வது என்று அவர் கற்றுத் தரவில்லை. ஆனால் பணம் சம்பாதிக்கத் தெரியாத நமக்குப் பணத்தை எவ்வாறு செலவு செய்வது என்று கற்றுக் கொடுத்திருக்கிறார்’’ என்றார்.