"வாழ்க்கையைக் கையாள்வது எப்படி?” என்று அம்மாவிடம் கேட்டான் அந்தச் சிறுவன்.
அவனது அம்மா சொன்னாள், "நான் வாழும் அறையே எனக்கு எல்லா விடைகளையும் அளித்தது!”
எப்படி? என்று கேட்டான் அவன்.
அதற்கு அவள்,
மேல் தளம் கூறியது: நோக்கம் உயர்வாக இருக்கட்டும்.
மின் விசிறி கூறியது: எப்போதும் குளிச்சியாயிரு.
கடிகாரம் கூறியது: நேரத்தை மதி
நாட்காட்டி கூறியது: நேரப்படி அனைத்தையும் முடித்துவிடு.
பணப்பை கூறியது: எதிர்காலத்திற்காக இன்று சேமி.
கண்ணாடி கூறியது: எப்போதும் உன்னைக் கவனி.
சுவர் கூறியது: மற்றவர்களின் சுமையைத் தாங்கு.
ஜன்னல் கூறியது : பார்வையை விரிவாக்கு.
தரை கூறியது : எப்போதும் அடக்கத்தோடு இரு.
மாடிப்படிகள் கூறியது : எடுக்கும் ஒவ்வோர் அடியிலும் விழிப்புடனிரு.
கழிவறை கூறியது : வேண்டாதவற்றை, விட்டுவிட வேண்டியவற்றை உடனுக்குடனே, விட்டுத்தள்ளு.
என்று சொல்லி, ஒரு அறைக்குள்ளேயே இவ்வளவு பாடமிருக்கும் போது, இவ்வுலகத்தில் எவ்வளவு பாடமிருக்கும்...? என்றாள்.