கவிஞர் ராபர்ட் பர்ன்ஸ் தேம்ஸ் நதிக்கரையில் உலாவிக் கொண்டிருந்தார்.
அப்போது ஒருவர் ஆற்றில் மூழ்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததைக் கவனித்தார். அவர் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் அவரைக் காப்பாற்றினார்.
உயிர் பிழைத்த அவர் ஒரு கோடீஸ்வரர். ஆனால் மிகப் பெரிய கருமி. எழுந்ததும் அவர் தன் சட்டைப் பையைத் தடவி ஒரு பென்னி நாணயத்தை எடுத்து, தன்னைக் காப்பாற்றிய கவிஞரிடம் நீட்டினார்.
அதைப் பார்த்த மக்கள் ஆத்திரமுற்றார்கள்.
உடனே கவிஞர், ''கோபப்படாதீர்கள். அவருடைய உயிரின் மதிப்பு அவ்வளவுதான்'' என்று கூறினார்.
அப்போது கோடீஸ்வர கருமியின் முகம் சுருங்கிப் போனதைப் பார்க்க வேண்டுமே!