ஒரு முறை பண்டிதமணி கதிரேசன் செட்டியார் திருவாவடுதுறை ஆதீனத் தலைவரைச் சந்திக்கச் சென்றிருந்தார்.
செட்டியார் ஆதீனத் தலைவரைத் தாழ்ந்து வணங்கியபோது கால் தடுமாறிக் கீழே விழப் போனார்.
அதைக் கண்ட ஆதீனத் தலைவர் சட்டென கதிரேசன் செட்டியாரைத் தாங்கிப் பிடித்தார்.
கதிரேசன் செட்டியார் மறுபடியும் ஆதீனத் தலைவரை வணங்கி, ‘‘சுவாமி! எல்லாம் இயல்பாகத்தான் நடக்கிறது’’ என்றார்.
‘‘இயல்பாக என்ன நடந்தது?’’ என ஆதீனத் தலைவர் கேட்டார்.
‘‘என்னைப் போன்ற அடியவர்கள் தவறுவதும், தங்களைப் போன்ற ஆன்மிகப் பெரியவர்கள் தவறியவர்களைத் தாங்கி வழி நடத்துவதும் இயல்புதானே? அதுதான் இப்போது நடந்திருக்கிறது!’’ என்று விளக்கினார் செட்டியார்.