காந்திஜி ஒரு கிராமத்திற்குச் சென்றார். கவிக்குயில் சரோஜினி தேவியும் உடனிருந்தார்.
காந்திஜி வழக்கமாகப் பருகும் வெள்ளாட்டுப் பாலையும், வேர்க்கடலையையும் தேடி, தொண்டர்கள் அலைந்த போது அவை கிடைக்கவே இல்லை.
அந்தக் கிராமத்தில் வறட்சியால் விளைச்சல் எதுவுமில்லை.
ஆனாலும் காந்தியின் உணவுக்குக் குறை வைக்க விரும்பாத தொண்டர்கள் பக்கத்து ஊர்களுக்குச் சென்று வெள்ளாட்டுப் பாலையும், வேர்க்கடலையையும் கொண்டு வந்தனர்.
அதற்கு நிறைய செலவானது. இதனை அறிந்த சரோஜினி, ''பாபுஜி! நீங்கள் எளிய பழக்கத்தைப் பின்பற்றலாம். ஆனால் அந்த எளிய பழக்கத்தின் இன்றைய விலை நீங்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்று'' என்று கிண்டலாகக் கூறினார்.
தன்னிலை உணர்ந்த காந்தி, ''என் கொள்கையைப் பின்பற்றுங்கள். ஆனால் என்னைப் பின்பற்றாதீர்கள்'' என்றார்.