ஒருமுறை ஆப்ரகாம் லிங்கன் தன் பரம விரோதியாக இருந்த ஒருவரைப் பாதுகாப்பு அமைச்சராக்கினார்.
அவர் எப்போதும் லிங்கனை விமர்சித்துக் கொண்டே இருப்பார். ஆனால் அவர் ஒரு தேசபக்தர்.
லிங்கனிடம் சிலர், ‘‘அவரை ஏன் பாதுகாப்பு அமைச்சராக்கினீர்கள்?’’ என்று கேட்டனர்.
‘‘அவர் ஒரு சிறந்த நிர்வாகி. யோக்கியமானவர். அவர் என்னை எத்தனை வேண்டுமானாலும் விமர்சித்துவிட்டுப் போகட்டும். ஆனால், அவரது நல்ல குணங்கள் நம் நாட்டுக்குத் தேவை. தனிப்பட்ட விருப்பு வெறுப்பிற்காக, நாட்டு நலனில் அக்கறை உள்ள ஒருவரை இழக்க நான் தயாராக இல்லை. எனக்குத் தேவையானது லிங்கன் பக்தர்கள் அல்ல, தேசபக்தர்கள்’’ என்றார் ஆப்ரகாம் லிங்கன்.