அந்த வகுப்பில் படிக்கும் ஒரு சிறுமி எப்போதும் ஏதாவது கேள்வி கேட்டபடி இருப்பாள்.
ஒரு நாள் அவள் ஆங்கில ஆசிரியை அனிதாவிடம், ''மேடம், சில வார்த்தைகளில் வரும் எழுத்துகளை நாம் ஏன் விட்டுவிடுகிறோம்? உதாரணத்திற்கு, ஹவர் (Hour), ஹானஸ்ட் (Honest), ஹானர் (Honor) போன்றவற்றில் வரும் எச் (H) ஐ ஏன் விட்டுவிடுகிறோம்?''
அதற்கு அனித, ''நாம் அவற்றை விட்டுவிடுவதில்லை. அவை அமைதியான எழுத்துக்களாக (silent words) கருதப்படுகின்றன'' என்றார். அந்தச் சிறுமி குழப்பமுற்றாள்.
மதிய உணவு வேளையில் அந்த ஆசிரியை சிறுமியிடம் ஒரு டிபன் பாக்ஸைக் கொடுத்து, ''கேன்டீனிற்குப் போய் உணவைக் கொஞ்சம் ஹீட் (Heat) ஆக்கிக் கொண்டு வா'' என்றார்.
சிறுமி சிறிது நேரம் கழித்து காலிப் பாத்திரத்தை ஆசிரியையிடம் கொடுத்தாள்.
''என்ன ஆயிற்று? நான் அந்த உணவைச் சூடாக்கிக் கொண்டு வரும்படிதானே சொன்னேன். நீ வெறும் பாத்திரத்தைக் கொண்டு வந்திருக்கிறாயே?'' என்று அனிதா டீச்சர் கேட்டார்.
அந்தச் சிறுமி அமைதியாக பதிலளித்தாள்: ''மேடம், ஹீட்டில் (Heat) எச் (H)– சைலண்ட் என்று நினைத்தேன்...''