ஒருமுறை சரத்சந்திரர், ரவீந்திரநாத் தாகூர் எழுதிய நூல்களை மிகவும் பாராட்டிப் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அருகில் இருந்த சரத்சந்திரரின் வாசகர் ஒருவர், "ரவீந்திரர் என்ன உங்களைப் போல் அவ்வளவு திறமையானவரா? அவரைப் போய் நீங்கள் புகழ்கிறீர்களே! உங்கள் நூல்கள் ஆயிரக்கணக்கில் விற்பனையாகின்றன. ஆனால் அவருடைய நூல்களோ நூற்றுக்கணக்கில் கூட விற்பனையாவதில்லை!" என்றார்.
அதைக் கேட்ட சரத்சந்திரர் உடனே, "என்ன அப்படி சொல்கிறீர்கள்? நான் எழுதிய புத்தகங்களை உங்களைப் போன்ற சாதாரண மக்கள் படிக்கிறார்கள். ரவீந்திரருடைய நூல்களை என்னைப் போன்றவர்கள் படிக்கிறோம், தெரியுமா?" என்றார்.
அந்த வாசகர் வாயடைத்துப் போனார்.