கிரேக்க நாட்டில் அடிக்கடி ஏதாவது ஒரு தலைப்பில் வாக்குவாதம் நடைபெறுவது வழக்கம்.
இந்த வாக்குவாதங்களைப் பார்ப்பதற்குப் படித்தவர்கள், கவிஞர்கள், பெரிய எழுத்தாளர்கள் மட்டுமே வருவார்கள்.
இந்தக் கூட்டம் நடைபெறும் போதெல்லாம் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியும் தவறாமல் அங்கு வந்து கலந்து கொண்டான். அவனோ படிக்காதவன். அங்கு நடக்கும் எதுவும் அவனுக்குப் புரியாது.
அதனைக் கவனித்த அறிஞர் பிளேட்டோ ஒரு நாள் அவனிடம், “நீ எதற்காக இங்கு வருகிறாய்? உனக்கு இதில் என்ன புரியப் போகிறது?” என்று கேட்டார்.
அதற்கு அவன், “உண்மைதான். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால், இங்கே நடக்கும் விவாதத்தில் யார் முதலில் கோபமாகப் பேசுகிறாரோ, அவர் தவறாகப் பேசுகிறார் என்பதை மட்டும் நான் புரிந்து கொள்கிறேன்” என்றான்.