"இந்த மனிதர்களிடம் எத்தனை தான் நற்போதனைகளை எடுத்துச் சொன்னாலும், கடைப்பிடிக்க மாட்டாதவர்களாக இருக்கிறார்கள். ஆகவே, இனி நான் மௌனமாகவே இருந்து விடப் போகிறேன்!'' என்று தன் சீடனிடம் கூறினார் கன்ஃபூசியஸ்.
"குருவே! நீங்கள் மௌனமாக இருந்துவிட்டால் மற்றவருக்கு எதையுமே உபதேசிக்கவே முடியாது! அது மட்டுமில்லாமல், நாங்களும் எதையும் தங்களிடமிருந்து கற்க முடியாதவர்களாய் ஆகிவிடுவோமே!'' என்று கேட்டார் சீடர். அதற்குக் கன்ஃபூசியஸ் சொன்னார்:
"ஆகாயம் பேசுகிறதா? இல்லையே! என்றாலும், பருவகாலங்கள் தவறாமல் சென்று கொண்டு இல்லையா என்ன? இன்னும் அதில் வெவ்வேறான விஷயங்கள் சிருஷ்டிக்கப்படுகின்றன! அப்போதெல்லாம் வானம் பேசிக் கொண்டா இருக்கிறது?''
சீடன் மௌனமானான்.
ஆடம்பரத்தால் சாதிக்க முடியாத காரியத்தைக்கூட - அமைதி சாதித்துக் காட்டிவிடும்.