ஒரு பானைக்குள் இருந்த வெள்ளரிக்காயை ஒரு தந்தை தன் மகனிடம் காட்டினார்.
பானையின் வாயோ குறுகல். காயோ பெரிது. அது எப்படி உள்ளே போனது என்று தந்தையைக் கேட்டான் மகன்.
தந்தை அவனைத் தோட்டத்திற்கு அழைத்துச் சென்று வேறொரு பானையை, கொடி மீதிருந்த ஒரு சிறு வெள்ளரிக்காய் மீது கவிழ்த்தார்.
தந்தை முன்னே காட்டிய காய், பானைக்கு உள்ளே வளர்ந்து பருத்துப் போயிருந்தது.
அதைக் காட்டி தந்தை, ''மகனே, தீய பழக்கங்களும் இப்படித்தான். காயைச் சூழ்ந்த பானை போல, அவர்களைச் சிறுவயதிலே அவை கவிந்து கொள்கின்றன. அவர்கள் வளர்ந்த பிறகு, அந்தப் பழக்கங்களிலிருந்து வெளிவர முடியாமல் தவிக்கிறார்கள். ஆகவே மகனே, நீ ஜாக்கிரதையாயிரு'' என்றார்.